Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, October 31, 2009

சில கவிதைகள் ....பல நினைவுகள்

Posted by மின்னல்ப்ரியன் at 10:33 PM 2 comments



உன்னை பாக்கும் போதெல்லாம்
மனசு
மழை நீரில் குழந்தை விட்ட
கப்பலாய்
மிதக்கிறது .


நீ நடக்கும் போது உன்னுடன்
வருவது
உன் நிழலல்ல
என் இதயம்.

இரவெல்லாம் வருகின்றது
கனவுகள்
கனவெல்லாம்
நீ விட்டு சென்ற சுவடுகள்.


வானவில்லை விட அழகு
வெட்கத்தில்
சிவக்கும்
உன் கன்னங்கள் .


நூறு யுகங்கள் வேண்டுமானாலும்
காத்திருக்கிறேன் ஒரு நொடி திரும்பி
பார்த்து
விட்டு போ !


நான் உனக்கு குறுந்தகவல்
அனுப்பும்
போதெல்லாம் காற்றில்
கடந்து
வருகிறது காதல்.

Saturday, October 10, 2009

ஏன் இப்படி மயக்கினாய் ?அண்ணன் வால்பையனுக்காக ஒரு கவிதை

Posted by மின்னல்ப்ரியன் at 10:15 PM 2 comments
உன்னை கடக்கும் போதெல்லாம்
கால்கள் தள்ளாடுகின்றன ,
மனசு உன்னை நினைத்து நினைத்தே
மறுஅடி எடுத்து வைக்காமல்
மறுத்து பேசுகிறது ,
சுரக்கும் ஹார்மோன்கள் உன்னை
நோக்கி சுண்டி இழுக்கிறது ,
நீ இல்லாமல் என் உலகம் ஒரு
சூன்யமாய் சுழல்கிறது ,
நீ என் இதயத்தில் நுழைந்து
கல்லீரலை கரைக்கிறாய்,
உன் பேரை உச்சரிக்கும் போதே
உள்ளுக்குள் நிகழும் மாற்றங்கள்
உலுக்கி எடுக்கிறது என்னை ,
சூரியனை சுற்றுகிறது பூமி
உன்னை சுற்றுகிறேன் நான் ,
உன்னை நினைக்கும் போதே
உலரும் உதடுகள் ஈரமாகின்றன,
நீ இல்லாத உலகம் நீர் இல்லாத தாவரம் ,
மனசு பட படக்க இதயம் தட தடக்க
நுழைகிறேன் உன்னில் பூச்சி பற பறக்க
வருகிறேன் என் கண்ணில் ,
என் அன்பு ஒயின்ஸாப்பே நீ
மட்டும் என்னை ஏன் இப்படி
மயக்கினாய் ?
ஏன் இப்படி
மயக்கினாய் ?

Sunday, May 10, 2009

இது உனக்காக மட்டும்!

Posted by மின்னல்ப்ரியன் at 2:07 PM 2 comments

ஒரு அலைபேசி அழைப்பில்
நீ பேசும் சில வார்த்தைகள்தான்
எனக்கான ஆக்சிஜன்.

என் எதிர்காலம் உன்னால்
தீர்மானிக்கபட்டுவிட்டது..
எனக்காக நீ கண்ட கனவுகளை
நனவாக்கி தருகிறேன் உனக்கான
பரிசாய்!

எனக்கு பைபிள் பகவத்கீதை
குர்ஆன் எல்லாமே நீ எழுதி
கொடுத்த ஆட்டோகிராப்
டைரிதான்.

Saturday, November 1, 2008

தீபாவளி கவிதைகள்

Posted by மின்னல்ப்ரியன் at 12:41 PM 2 comments

நீ மத்தாப்பு வெடிக்கும்
அழகில்
எத்தனை இதயங்கள்
சிதறிப் போகிறது தெரியுமா?


போகிற போக்கில் ஓரப்பார்வை
வீசிச்
செல்லும் உன் கண்களில்
இருக்கிறது ஒளி வீசும் தீபாவளி!

உன்னை பார்த்த நாள்
முதல் உன்னையே சுற்றும்
சங்கு
சக்கரமாய் ஆனேன் நான்...


தீபாவளியன்று
புது தாவணியோடு
உன்னை பார்த்ததை விட சிறந்த
சிறப்பு
நிகழ்ச்சியை நான் வேறு
எந்த தொலைக்காட்சியிலும் பார்க்கவில்லை.

Thursday, October 23, 2008

கவிதை

Posted by மின்னல்ப்ரியன் at 11:39 AM 4 comments

தம் அடிக்காதே.. தண்ணி அடிக்காதே
அவன்
கூட சேராத.. இவன் கூட சேராத
அஞ்சு
மணிக்கு எழு.. அப்பா பேச்ச கேளு
ஊர் சுத்தாத.. உருப்படற வழிய பாரு
இப்படி
என்ன சொன்னாலும் செய்கிறேன்
நீ என்னை காதல் செய் ....

Friday, October 10, 2008

சாரல்

Posted by மின்னல்ப்ரியன் at 11:23 AM 1 comments

ஒரு மழை நாளில் உன்னை முதலில்
பார்த்த பரவச நிமிடங்கள் வெயில்
தகிக்கும் கோடையிலும் நெஞ்சுக்குள்
கொட்டி தீர்க்கிறது குத்தால சாரலை..

Saturday, October 27, 2007

Posted by மின்னல்ப்ரியன் at 11:17 AM 1 comments

அனிதாவின் கணவனாகிய என்னையும்

ரவியின் மனைவியாகிய உன்னையும்

தவிர்த்து சில உடைந்த வளையல்கள்

புத்தக மடிப்பில் புதைந்த ரோஜா இதழ்

ஒரு சாக்லெட் காகிதம் ஒற்றை ஹேர்பின்

மற்றும் சிலவாய் எஞ்சி நிற்கிறது நம் காதல்.

Friday, October 26, 2007

Posted by மின்னல்ப்ரியன் at 5:45 PM 0 comments



மலர்களே...



தாத்தாவின் சவ ஊர்வலத்தில்
அழுதேன் கூட்டத்தில் மிதிபடும்
ரோஜாக்களை நினைத்து,,,,
Posted by மின்னல்ப்ரியன் at 5:27 PM 0 comments
காதல்

உனக்காக நான் வாங்கும்
ஒற்றை ரோஜாவை
தேர்ந்தெடுக்கஆகும்
காலதாமதத்தை பற்றி
கவலைப்படும் பூக்காரனுக்கு
தெரியுமா நம் காதலைப் பற்றி?