Saturday, October 31, 2009

சில கவிதைகள் ....பல நினைவுகள்

Posted by மின்னல்ப்ரியன் at 10:33 PM 2 commentsஉன்னை பாக்கும் போதெல்லாம்
மனசு
மழை நீரில் குழந்தை விட்ட
கப்பலாய்
மிதக்கிறது .


நீ நடக்கும் போது உன்னுடன்
வருவது
உன் நிழலல்ல
என் இதயம்.

இரவெல்லாம் வருகின்றது
கனவுகள்
கனவெல்லாம்
நீ விட்டு சென்ற சுவடுகள்.


வானவில்லை விட அழகு
வெட்கத்தில்
சிவக்கும்
உன் கன்னங்கள் .


நூறு யுகங்கள் வேண்டுமானாலும்
காத்திருக்கிறேன் ஒரு நொடி திரும்பி
பார்த்து
விட்டு போ !


நான் உனக்கு குறுந்தகவல்
அனுப்பும்
போதெல்லாம் காற்றில்
கடந்து
வருகிறது காதல்.

Thursday, October 22, 2009

செத்தாலும் விடமாட்டானுங்கடா இவனுங்க !

Posted by மின்னல்ப்ரியன் at 8:09 PM 1 comments

போன வாரத்துல ஒரு நாள் AVM ஸ்டியோவுக்கு பின்னாடி இருக்கற
கல்லறைல சூட்டிங். நாங்க பாட்டுக்கு சூட் பண்ணிட்டு இருந்தோம்.
சைடுல நாலஞ்சு பேரு குழி தோண்டிட்டு இருந்தாங்க. என்னடா
மேட்டர்ன்னு பாத்தா அன்னிக்கு மட்டும் ஏழு டெட்பாடிய அடக்கம்
பண்ண போறதா சொன்னாங்க. குழி தோண்டும் போது ஒரு சில
இடத்துல எலும்பு , மண்டை ஓடுன்னு நிறைய வந்து விழுந்துச்சு.
நாங்க அதிர்ச்சியா பாத்தா குழி தோண்டரவரு அசால்ட்டா
கிரிக்கெட் பால் மாதிரி அத எல்லாம் தூக்கி போட்டுட்டு அவரு
வேலைய பாத்துட்டு இருந்தாரு.

நாங்க பாத்துட்டு இருக்கும் போதே மூணு பாடிய அடக்கம்
பண்ணாங்க. நாலாவதா ஒரு டெட்பாடி வந்துச்சு .. அதுக்கு
அப்புறம் நடந்ததுதான் அதிர்ச்சி ...(இதுக்கு மேல படிக்கறவங்க
நீங்களா ஒரு பேய் படம் பாக்கற எபக்கட்டுக்கு வந்துடுங்க)..
நாலாவது டெட்பாடிய அடக்கம் பண்ண நம்ம வெட்டியான்
இடம் தேடுனாரு ,எல்லாம் புல்லா இருந்துது. கல்லறை
முழுக்க ஒரு ரவுண்டு வந்தாரு. ஒரு இடத்த செலக்ட்
பண்ணாரு ..அந்த இடத்துல எற்கனவே ஒரு டெட் பாடிய
பொதச்சு இருந்தாங்க. நம்மாளு கவலையே இல்லாம அந்த
எடத்த
தோண்ட ஆரம்பிச்சாரு. பல முறை தோண்டி இருப்பாங்க
போல மண்ணு சும்மா நெகு...நெகுன்னு ஈசியா வந்து விழுந்துச்சு ..
தோண்டி முடிச்சாரு ...உள்ள எட்டி பாத்தா ........எட்டி பாத்தா..............................................................
அரைகுறையா மக்கி போன ஒரு வயசானவரோட பிணம்.
ஒரு பெரிய சேலை துணில சுத்தி வெச்சிருந்தாங்க ..
நம்ம வெட்டியான் பர பரன்னு குழிக்குள்ள இறங்குனாரு ..
இன்னொரு சைடு அவரோட பையன் (13 வயசுதான் இருக்கும் )
இறங்குனான். ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கம் புடிச்சு
அப்படியே தூக்கி வெளிய போட்டாங்க. போட்டதும் அவரு
அந்த குழிய அடுத்த டெட்பாடிக்கு ரெடி பண்ண ஆரம்பிச்சாரு ..
அந்த பையனும் இன்னொரு பையனும் சேர்ந்து அந்த பாடிய
தூக்கி கொண்டு போய் கல்லறைலையே ஒரு ஓரமா
தூக்கி போட்டாங்க. அதுக்கு அப்புறம் என்னால அத பாக்க
முடியல ... கிளம்பும் போது அந்த பையன்கிட்ட தூக்கி போட்ட
டெட்பாடிய என்ன பண்ணுவிங்கன்னு கேட்டன். ரொம்ப கூலா
எரிச்சிடுவம்ன்னு சொன்னான் . எவ்வளவு சொத்து
வெச்சிருந்தாலும் கடைசில ஆறடி நிலம்தான்னு
சொல்லுவாங்க.. மக்களே இனி அது கூட கிடையாது ...
பாத்து சூதானமா இருந்துக்கங்க.

டிஸ்கி : இந்த கொடுமை பாத்துட்டு இருக்கும் போதே ரெண்டு
பேமிலி அவங்க அடக்கம் பண்ணுன இடத்துல அஞ்சலி
செலுத்திட்டு இருந்தாங்க ..பாவம் ... அவங்க அடக்கம் பண்ணுன
இடத்துல இப்ப யார் உறங்கிட்டு இருக்காங்களோ !

Saturday, October 10, 2009

ஏன் இப்படி மயக்கினாய் ?அண்ணன் வால்பையனுக்காக ஒரு கவிதை

Posted by மின்னல்ப்ரியன் at 10:15 PM 2 comments
உன்னை கடக்கும் போதெல்லாம்
கால்கள் தள்ளாடுகின்றன ,
மனசு உன்னை நினைத்து நினைத்தே
மறுஅடி எடுத்து வைக்காமல்
மறுத்து பேசுகிறது ,
சுரக்கும் ஹார்மோன்கள் உன்னை
நோக்கி சுண்டி இழுக்கிறது ,
நீ இல்லாமல் என் உலகம் ஒரு
சூன்யமாய் சுழல்கிறது ,
நீ என் இதயத்தில் நுழைந்து
கல்லீரலை கரைக்கிறாய்,
உன் பேரை உச்சரிக்கும் போதே
உள்ளுக்குள் நிகழும் மாற்றங்கள்
உலுக்கி எடுக்கிறது என்னை ,
சூரியனை சுற்றுகிறது பூமி
உன்னை சுற்றுகிறேன் நான் ,
உன்னை நினைக்கும் போதே
உலரும் உதடுகள் ஈரமாகின்றன,
நீ இல்லாத உலகம் நீர் இல்லாத தாவரம் ,
மனசு பட படக்க இதயம் தட தடக்க
நுழைகிறேன் உன்னில் பூச்சி பற பறக்க
வருகிறேன் என் கண்ணில் ,
என் அன்பு ஒயின்ஸாப்பே நீ
மட்டும் என்னை ஏன் இப்படி
மயக்கினாய் ?
ஏன் இப்படி
மயக்கினாய் ?