Monday, March 30, 2009

" இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" உண்மை என்னன்னா?

Posted by மின்னல்ப்ரியன் at 4:13 PM 4 comments
முதல்ல இந்த பதிவோட ட்ரைலர்--- குங்குமம் இந்த
வாரம் சன் டிவிக்கு போட்டி கிங் டிவியா? மறுக்கிறார்
மாறன். கிங் டிவிக்கு போட்டி கிங் டிவி 2 தான் மார்
தட்டுகிறார் NKKP.ராஜா. இந்த இதழுடன்
இலவச கலர் டிவி மற்றும் இரண்டு ரூபாய் அரிசி.


இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக"
அப்படின்னு சன் டிவியில ( இப்ப கலைஞர் டிவிலயும்)
போடற படம் எல்லாம் உண்மையிலேயே இந்திய
தொலைக்காட்சிகளில்
முதல் முறையாகத்தான் போடறாங்கன்னு
நீங்க நினச்சா நீங்க இன்னும் வளரனும் தம்பி .(உங்க அண்ணன் கிட்ட சொல்லுங்க குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி தருவாரு).

உண்மை என்னன்னா நீங்க பாக்கறது முதல் முறை இல்ல.
ஒரு 20, 25வது முறைதான் நீங்க பாக்கிறிங்க. தொலைக்காட்சி
வரலாற்றுல முதல் முறையா எங்க ஊரு கிங் டிவில முதல்ல
பாக்கறது நாங்கதான். ( கிங் டிவி மற்றும் கிங் டிவி 2 ஈரோடு MLA
முன்னாள் அமைச்சர் NKKP. ராஜாவால் நடத்தப்படுகிறது.)
நாங்க கிங் டிவில பாத்து சலிச்ச படங்களைத்தான் நீங்க
சன் டிவில முதல் முறையா பாக்கிறிங்க. என்ன பண்ணறது
உங்க கொடுப்பின அவ்வளவுதான். இதுக்குதான் ஈரோடு
மாவட்டத்துல பொறக்கனும். விடுங்க இப்ப பீல் பண்ணி
என்ன பிரயோஜனம்.

கலைஞர் இலவசமா டிவி குடுத்துட்டாரு ஓகே. படம் யாரு
போடறதுன்னு தொகுதி மக்கள் யாரும் கேட்டுடகூடாதுனு
ரெண்டு டிவி சேனல் ஆரம்பிச்சு புது புது படமா காட்ற எங்க
MLA வோட நல்ல மனசு உங்க யாருக்காவது வருமாய்யா?
பாவம் படத்துக்கு இடையில கொஞ்சமா விளம்பரம் போட்டு
கொஞ்சமா சம்பாதிக்கற அவர போய் ஆள கடத்துனாருன்னு
சொல்லி இருந்த அமைச்சர் பதவியும் புடிங்கிட்டிங்க. அப்படி
இருந்தும் அவரு எங்களுக்காக ரைட்ஸ் பத்தி எல்லாம்
கவலபடாம இன்னிக்கு ரிலீஸ் ஆகற படத்த இன்னிக்கே
போட்டு காட்டறாரு. அடுத்த எலக்சன்லயும் அவரையே
MLA ஆக்கி எந்திரன்ல இருந்து மருதநாயகம் வரைக்கும்
ரிலீஸ்க்கு முன்னாடியே பாக்கல நாங்க ஈரோட்டுக்காரங்க
இல்ல!

பின் குறிப்பு :
கொஞ்ச நாள் முன்னால் ஜுனியர் விகடனில் இதை
பற்றிய செய்தி வெளியாகி இருந்தது. நிருபர் கேட்ட
கேள்விக்கு இது தன் கவனத்துக்கு வரவில்லை
என்றும் இனி இது போல் நடக்காது என்றும் ராஜா
பதில் சொல்லி
இருந்தார். போன வாரம் நான் ஊருக்கு
போயிருந்தப்ப கிங் டிவில சந்தோஷ் சுப்பிரமணியம்
ஓடிட்டு இருந்துது. கீழ ஓடற விளம்பரத்த பாத்தா செம
அதிர்ச்சி... ஜுனியர் விகடன் விளம்பரம் ஓடிட்டு
இருந்துது. என்ன பண்ணறது பாத்துட்டு சிரிக்க
வேண்டியதுதான்.


படித்துவிட்டு பிடித்திருந்தால் உங்கள் கருத்தையும்,
ஓட்டையும் தவறாமல் பதிவு செய்யவும்.

Friday, March 27, 2009

பாராளுமன்ற தேர்தலும் பட்டய கிளப்பும் சலுகைகளும் .

Posted by மின்னல்ப்ரியன் at 2:17 PM 4 comments
முக்கிய அறிவிப்பு :
இங்கு குறிப்பிடபட்டிருக்கும் ஆலோசனைகளை
கலைஞர், அம்மா, வைகோ, திருமா, சோனியா, அத்வானி
என யார் வேண்டுமானாலும் எந்த கட்சி வேண்டுமானாலும்
பயன்படுத்தி கொள்ளலாம்.கட்டணம் எதுவும் கிடையாது.
மேலும் idea- சொன்னா திருடிடுவாங்க என்று சொல்லும்
விஜயகாந்த் போன்றோரின் சுயநல போக்கும் எனக்கு
கிடையாது என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன்.

இனி ஆலோசனைகள் :

1. நீங்க நோட்டு குடுக்க போகும் போது ஸாரி... ஸாரி ..
நீங்க ஓட்டு கேட்க போகும் போது சும்மா போயி எங்க ஆட்சியின் சாதனைகளை பாருங்கள்ன்னு எல்லாம் மொக்க போடறத
விட்டுட்டு " நீங்க எங்களுக்கு ஓட்டு போட்டா ஓட்டு போடற
உங்க எல்லாரு பேரையும் குலுக்கி போட்டு நாலு பேருக்கு
மாநில அமைச்சர் போஸ்டும், பம்பர் பரிசா ஒருத்தருக்கு
மத்திய அமைச்சர் போஸ்டும் தருவோம்னு ஒரு பிட்ட
போடுங்க " அப்புறம் பாருங்க அந்த முட்டாள் ஜனங்க
பூரா பேராசைல ஓட்ட உங்களுக்கு போட்டுடுங்க.

2. ரெண்டு ஏக்கர் நிலமல்லாம் இப்ப வொர்க் அவுட் ஆகாது.
என்ன பண்ணுங்க ஓட்டு கேட்க போகும் போதே எல்லார்
கைலயும் ரெண்டு ரெண்டு பட்டாவ குடுத்து " அய்யா
உங்களுக்கு நிலாவுல 500 ஏக்கரும் , செவ்வாயில 1000
ஏக்கரும் ஒதுக்கி இருக்கோம், நீங்க நாளைக்கே கூட போயி
விவசாயம் பண்ணலாம்னு ஒரு மேட்டர போடுங்க. பய
புள்ளைக முடிஞ்சா போயி விவசாயம் பாத்து பொழச்சு
போறானுங்க.

3. 18 வயசுக்கு மேலஇருக்கற கல்லூரி மாணவர்கள்
யாருக்கும் எக்ஸாம் கிடையாது , பாஸ், பெயில் எதுவும்
கிடையாது, வருசத்துக்கு ரெண்டு நாள் காலேஜ் போனா
போதும். மீதி நாள் நீங்க பொழுதைபோக்க அரசே இலவச
சினிமா பாஸ் குடுக்கும். அது மட்டும் இல்லாம நீங்க படிச்சு
முடிச்ச உடனே ஒபாமாகிட்ட சொல்லி உங்களுக்கு எல்லாம்
அமெரிக்காவுல வேல வாங்கி தருவோம்ன்னு சொல்லி
பாருங்க மாணவர் ஓட்டு எல்லாம் உங்களுக்குத்தான்.

4. இப்ப குடுத்து இருக்கற சின்ன டிவிய எக்சேஞ்ல
எடுத்துக்கிட்டு புதுசா LCD Tv யும் கூடவே சன் டைரக்ட்
DTH சேர்த்து குடுக்கலாம். அது மட்டுமில்லாம பெண்
வாக்காளர்கள கவர சீரியலுக்கின்னே ஒரு 24 மணி
நேர தனி சேனல் ஆரம்பிக்கலாம் .

5. நாங்க ஆட்சிக்கு வந்தா அப்பப்ப எங்க ஆளுங்கள
ராஜினாமா பண்ண வெச்சு அடிக்கடி இடைத்தேர்தல்
நடத்தி அண்டா, குண்டா , அரிசி, பருப்பு செல்போன்
உட்பட உங்கள் இல்லத்துக்கு தேவையான அனைத்து
பொருட்களையும் இனாமா தருவோம்னு ஒரு
வாக்குறுதி குடுங்க போதும்.

6. மூத்த குடிமக்களுக்கு டாஸ்மாக் சரக்கில் 70%
தள்ளுபடி, பெண்களுக்கு ஜவுளி கடைகளில் 33%
சிறப்பு சலுகை. புதுசா கல்யாணம் செய்யறவங்களுக்கு
ஊட்டி அல்லது கொடைக்கானலில் இலவச தேனிலவு.
காதலர்களுக்கு மாதம் 1000 ரூபாய்க்கு இலவச டாப் அப்
போன்ற சின்ன சின்ன சலுகைகளையும் அறிவிக்கலாம்.

7. இறுதியாய் விவசாயிகள் மட்டுமின்றி நாட்டில் உள்ள
அத்தனை பேரும் வங்கியில், மார்வாடி கடையில், பக்கத்து
வீட்டுக்காரரிடம், பண்ணையாரிடம் என எங்கு கடன் வாங்கி
இருந்தாலும், எவ்வளவு கடன் வாங்கி இருந்தாலும் அத்தனையும்
தள்ளுபடி என்று அறிவிப்பதோடு போனஸாக பெண்கள்
பக்கத்து வீட்டில் அவசரத்துக்கு வாங்கிய காபி பொடிக்கும்
சேர்த்து தள்ளுபடி அறிவியுங்கள். அத்தனை ஓட்டும்
உங்களுக்கே ....நாளை நமதே...நாநூற்று முப்பத்தி நாலும் நமதே.


சலுகைகள் தொடரும் ......

பின்குறிப்பு : படித்து விட்டு tamilish-ல் ஓட்டு போடுபவர்களுக்கும்
விரைவில் சலுகைகள் அறிவிக்கலாம் என்று இருக்கிறேன்.


படித்து விட்டு பிடித்திருந்தால் உங்கள் கருத்தையும்
தவறாமல் பதிவு செய்யவும்.

Wednesday, March 25, 2009

நைட் ஓட்டல்களும் ..நடக்கும் அநியாயங்களும்

Posted by மின்னல்ப்ரியன் at 11:07 AM 9 comments

தலைப்ப பாத்ததும் பார்ட்டி, பப், குடி, கூத்துன்னு நம்ம
சென்னை நைட் ஓட்டல்கள் பத்தின பதிவுன்னு நீங்க
நினச்சடாதிங்க... அது வேற ஓட்டல்..இது வேற ஓட்டல்!
சென்னைல இருந்து கோவை, திருச்சி, மதுரைன்னு பஸ்ல
வெளியூர் போகும் போதோ, வரும் போதோ டிரைவர் ஒரு
இடத்துல வண்டிய நிறுத்திட்டு " பஸ் ஒரு பத்து நிமிஷம்
நிக்கும்
, டீ, காபி,டிபன் சாப்பிடறவங்க ... பாத்ரூம்
போறவங்க
எல்லாம் போயிட்டு வந்துடுங்கன்னு...
சவுண்ட்
குடுப்பார் பாத்திங்களா அந்த ஓட்டலுங்க
பத்தின மேட்டர்தான் இது.

சுத்தம் சோறு போடுங்கறது எல்லாம் சும்மா.. உட்டாலக்கிடி,
இந்த மாதிரி ஓட்டல் ஓனருகிட்ட கேட்டா அசுத்தம் சோறு,
பிரியாணி
, சிக்கன் 65 எல்லாம் போடும்னு புதுசா பழமொழி
சொல்லுவாங்க. கையேந்தி பவன்தான் மோசமான நோய்
பரப்பும் ஒட்டல்ன்னு சொல்றவங்க ஒரே ஒரு தடவ இங்க
வந்து சாப்பிடுங்க ,அதுக்கப்பறம் நீங்க உங்க பரம்பரைக்கே
நோய் பரப்ப ஆரம்பிச்சுடுவிங்க.. அவ்வளவு கேவலமான
உணவுகள், வாயிலேயே வெக்க முடியாத டேஸ்ட்,
கன்னாபின்னான்னு ரேட்டு, ஏதாவது கேள்வி கேட்டா
இஷ்டம்னா சாப்பிடு ,இல்ல எடத்த காலி பண்ணுங்கர
அவங்க தெனாவெட்டு எல்லாம் பாக்கும் போது நம்ம
பஸ் டிரைவரையும், கண்டக்டரையும் தர்ம அடி அடிக்கணும்
போல கோபம் வரும். பின்ன என்ன அவங்களுக்கு கிடைக்கற
ஓசி
டீ, சிகரெட்க்குக்காக நம்ம அனுபவிக்கற கஷ்டம் நம்ம
எதிரிக்கு கூட வர கூடாது.

இதுகூட பரவாயில்ல.. இன்னொரு அநியாயம் இருக்கே
இன்னும் கொடுமை. யூரின் போக ஒரு ஆளுக்கு அஞ்சு
ரூபா, அஞ்சு ரூபா கொடுத்துட்டு என்ன அமெரிக்காவுக்கா
போகமுடியும். அரையுங் குறையுமா தென்னங்கீத்து வெச்சு
அவனுங்க கட்டி இருக்கற toilet தான் போகமுடியும்.
( இதுக்குதான் பஸ் ஏறும் போது பீர் குடிக்க கூடாதுன்னு
பெரியவங்க
சொல்லி இருக்காங்க)அத toiletன்னு சொன்னா
toiletஅ நாம என்னான்னு சொல்றது அப்படின்னு யாராவது
கேள்வி கேட்க நெனச்சிங்கன்னா அந்த கேள்விய அப்படியே
குமுதம் அரசு பதில்கள் பகுதிக்கு அனுபிச்சிடுங்க. நாம
மேட்டருக்கு வருவோம், நான் எதுக்கு அஞ்சு ரூபா
குடுக்கணும் அதான் சுத்தி பொட்டல் காடா இருக்கே
நான் அங்க போய்க்கறன்னு யாராவது அந்த பக்கம்
போலான்னு நினைச்சா அங்க நாலு குண்டர்கள்
கைல லத்தி மாதிரி ஒரு குச்சிய வெச்சுட்டு நிப்பாங்க.
நீங்க அந்த பக்கம் போனாலே அசிங்க அசிங்கமா
பேசுவானுங்க, அதையும் மீறி நான் இங்கதான் யூரின்
போவன்னு நீங்க குழந்தை மாதிரி அடம் புடிச்சா நீங்க
அடி வாங்கறதா எந்த ஹீரோவாலயும் தடுக்க
முடியாது. ஆம்பளைங்க நிலைமையே இப்படின்னா..
பஸ்ல ட்ராவல் பண்ற லேடீஸ் நிலம இன்னும் கொடுமை.
தவிர்க்கவே முடியாத இயற்கை உபாதைக்காக இவங்க
இந்த toilet யூஸ் பண்ணும் போது அங்க காசு வாங்க
உட்கார்ந்து இருப்பவனே பெண்களை அசிங்கமாய்
பேசுவதும், திட்டுவதும் என இவர்கள் பண்ணும்
அராஜகத்தையும் , மாமூல் வாங்கி கொண்டு இந்த
மாதிரி ஓட்டல்களை கண்டும் காணாமலும் இருக்கும்
அதிகாரிகளையும், இங்கு பஸ் நிறுத்துவது
தெரிந்தும், இங்கு நடக்கும் அநியாயங்கள் தெரிந்தும்
கண்டு கொள்ளாமல் இருக்கும் அரசு மற்றும் தனியார்
பஸ் நிறுவனதாறையும் கண்டித்து எல்லோரும் ஒரு
நிமிடம் அவர்களை நினைத்து கெட்ட வார்த்தைகளில்
அசிங்க அசிங்கமாய் திட்டுங்கள்.

திட்டி முடித்த பாதிக்கபட்ட அத்தனை பேரும் இந்த
பிரச்சனையை புகாராய் தனியார் மற்றும் அரசு பஸ்
நிறுவனங்களுக்கு போனில் சொல்லுங்கள். ஏதாவது
மாற்றம் நடக்கிறதா என்று பார்ப்போம்.

பின் குறிப்பு: இந்த ஓட்டல்களில் எனக்கு புரியாத ஒரு
விஷயம் எல்லா ஓட்டல்களிலும் ஒரு ஆடியோ கேசட்
கடை இருக்கும். அதில் எதாவது ஒரு இரட்டை அர்த்த
கானா பாடல் எப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கும்.
காலம் மாறிவிட்டது இப்போது கேசட்டுக்கு பதிலாய் சிடி
விக்கிறார்கள். மற்றபடி அந்த செட்அப் இன்னும்
அப்படியேதான் இருக்கிறது.முன்னாடியாவது பஸ்
டிரைவர்கள் அங்கு விக்கும் கேசட்டை வாங்குவதை
அவ்வப்போது பார்த்துருக்கிறேன்.இப்போது எல்லா
வண்டியும் video coach ஆன பிறகு அங்கு யார் கேசட்
வாங்குகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.


படித்து விட்டு பிடித்திருந்தால் உங்கள் கருத்தையும் ஓட்டையும் தவறாமல் பதிவு செய்யுங்கள்.

Friday, March 20, 2009

மெரீனா நேற்று நடந்ததும் Zee தமிழ் தொலைக்காட்சியும் ....

Posted by மின்னல்ப்ரியன் at 5:13 PM 6 comments

முதல்ல மெரீனா மேட்டரு... பகல்லயே மெரினால
நடக்கற கூத்து தாங்கமுடியாது .. கொளுத்தற
கட்டுமரத்துக்கு பின்னாடி ஒரு 100, 200 ஜோடி
உட்கார்ந்து இருக்கும், அங்க இடம்
குடைய விரிச்சு உட்கார்ந்து இருப்பாங்க.
இப்படி மறைவான இடத்துல ஒருத்தர ஒருத்தர்
மனச தொறந்து(!) காதல் பண்றத பார்க்கறதுக்கின்னே
ஒரு 50 பேர் வேல வெட்டிய உட்டுட்டு வந்து
அங்க சுத்துவானுங்க... பகல்லயே இப்படின்னா
நைட்ல கேக்கவா வேணும்... நேத்து ஒரு 7 மணிக்கு
மேல பீச்சுக்கு நான் மட்டும் தனியா போயிருந்தன்.
பைக்க பார்க் பண்ணிட்டு நீச்சல் குளத்துக்கு பின்னாடி
கொஞ்ச தூரம் மணல்ல நடந்து ஒரு இடத்துல உட்கார்ந்து
ஒரு 10 நிமிஷம் ஆயிருக்கும்..
"உட்காரவா " என்று குரல் திரும்பி பார்த்தா
சேலையும், புல் மேக்கப்புமா கையில hand bag
வெச்சுக்கிட்டு ஒரு அரவாணி நின்னுட்டு இருந்தாங்க..
நான் திரும்பி பார்த்ததும் "50 ரூபாதான்"
என்றார். நான் மறுத்து தலையசைத்தவாறே
"வேணாம் கிளம்பு" என்றதும் அவர் என்னை விட்டு
நகர்ந்து தனியாய் உட்கார்ந்திருந்த
ஒருவரிடம் போய் நின்றார். அவரும் வேணாம்னு
சொல்லி இருப்பார் போல சுற்றிலும் தேடிக்
தனியாய் உட்கார்ந்திருந்த இன்னொருவரிடம் போனார்.
அவர் அவர் அருகில் உட்கார்ந்துவிட்டு 5 நிமிடம் கழித்து
எழுந்து போனார் (or)போனாள்.

இது போன்ற அனுபவம் தனியாய் போன சில
சமயம் முன்னரே எனக்கு வாய்த்திருந்தது.
உங்களில் பலருக்கு கூட இந்த அனுபவம்
நேர்ந்திருக்கலாம். இதே மெரீனாவில் சில
மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு ஒரு
இளைனனும், அரவாணியும் மறைவான இடத்தில்
கூட பண்ண தயங்கும் விஷயத்தை பண்ணிக் கொண்டு
இருக்க அதையும் ஒரு 50 பேர் சுற்றி நின்று வேடிக்கை
பார்த்து கொண்டு இருந்ததுதான் உச்சகட்ட கொடுமை.

குழந்தைகள், பெண்கள் , சுற்றுலா வருபவர்கள்
என ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர்
செல்லும் மெரீனா திறந்தவெளி விபச்சார
விடுதியாய் மாறுவது கலாச்சார காவலர்கள்
எவன் கண்ணிலும் படவில்லையா?

அடுத்து Zee தமிழ் .... இந்த சேனல் லான்ச் ஆனப்ப
என் பிரண்ட்ஸ் நிறைய பேரு apply பண்ணாங்க..
என்ன கூட apply பண்ண சொல்லி சொன்னானுங்க..
மச்சான் நீ வேணுன்னா பாரு விஜய் டிவிக்கு
சரியான போட்டியா இவங்கதான் இருக்க போறாங்கன்னு
ஓவரா பில்டப் எல்லாம் வேற குடுத்தானுங்க.. சரி அந்த
அளவுக்கு இல்லன்னாலும் ராஜ் டிவி, கலைஞர் டிவிய விட
பெட்டரா இருப்பாங்கன்னு நானும் நெனச்சன். அப்படி நான்
நெனச்சதுக்கு என்ன நானே ___ , ________ , ___________
_____ , ___________ அடிச்சுக்கணும். ( கோடிட்ட இடத்த
நீங்களே நிரப்பிக்கங்க !).

இந்த சேனல்ல போடற சினிமாவ எல்லாம் யாராவது
பாத்து இருக்கிங்களா? அந்த கொடுப்பின எனக்கு
கிடைச்சது. அப்படி நான் போன வாரம் பாத்த சில
உலக காவியங்கள் "ஆச வெச்சேன் , துள்ளுற வயசு,
சுட்ட பழம், பத்து பத்து" . இப்படி எல்லாம் தமிழ்ல
படம் இருக்கான்னு யோசிக்காதிங்க.. இந்த காவியங்கள்
எல்லாம் விஜய், ரஜினி மாதிரி மசாலா நாயகன்கள்
நடிச்ச படமா இருந்தா உங்களுக்கு தெரிஞ்சுருக்கும்.
இந்த உலக சினிமா எல்லாம் சைதை ராஜ் ,
அமிஞ்சக்கரை லட்சுமி மாதிரி தியேட்டர்ல
காலை காட்சியா ஒரு நாள், ரெண்டு நாள் ஓடுன
படங்கள். மக்கள் பார்வைக்கே வராம போன
இந்த காவியங்கள காசுகொடுத்து ரைட்ஸ் வாங்கி
போடற Zee தமிழுக்கு சிட்டு குருவி லேகிய
விளம்பரமாவது யாராவது கொடுத்தால் அவர்களும்
பிழைப்பார்கள், நாமும் இந்த மாதிரி உலக சினிமாக்களை
தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த மாதிரி சினிமாக்களை போட்டு பேரை கெடுத்து
கொள்வதற்க்கு பதில் அந்த ஸ்லாட்டை பேசாமல்
சித்த வைத்தியர், நியூமராலாஜிஸ்ட்
போன்றவர்களுக்கு கொடுத்தால் அவர்கள்
ஆவது ஏதாவது சுமாரான பிகருடன் உடகார்ந்து
ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். அதை
பார்த்து ஒரு பத்து பேர் அந்தரங்க
வைத்தியம் பார்ப்பார்கள், ஒரு இருபது பேர்
பேரையாவது மாற்றுவார்கள். சேனலுக்கும் ஏதாவது
வருமானம் கிடைக்கும். பாக்கலாம் என்ன நடக்குதுன்னு!

பின் குறிப்பு : மேலே சொன்ன உலக சினிமாவில்
"ஆச வெச்சேன் " படத்தில் ஹீரோவின் விக்கலை
நிறுத்துவதுக்கு ஹீரோயின் யூஸ்
பண்ணும் டெக்னிக்கை பாத்த அதிர்சசியில்
இனி எனக்கு ஜென்மத்துக்கும் விக்கல் வராது
என்று நினைக்கிறேன். (அந்த டெக்னிக்கை இங்க
சொல்லமுடியாது , ம்ம்ம் .. உங்க கொடுப்பின அவ்வளவுதான்).

இந்த பதிவு புடிச்சிருந்தா உங்கள் பொன்னான
வாக்குகளை தமிழிஸ் போட்டுடுங்க.Monday, March 2, 2009

SMS -- நீங்க கருத்து சொன்னீ ங்களா ?

Posted by மின்னல்ப்ரியன் at 1:54 PM 2 comments

நேத்து சாந்திசிவா மனசுல சக்தி பாக்க
போயிருந்தன்
.இண்டர்வெல்ல காபிய குடிச்சுட்டு
dust bin தேடுனப்பதான் இது கண்ல பட்டுச்சு,
உங்க
பீலிங்க இங்க கொட்டுங்கன்னு
எழுதி ஒரு ஓரமா இந்த box வெச்சிருந்தாங்க,
பாத்ததும்
இது நல்ல idea-வா இருக்கே
எத்தன பேர்தான் பீலிங்க்ச கொட்டி இருக்காங்கன்னு
எட்டி பாத்தன், உள்ள வெறும் கோக், காபி கப்புன்னு
குப்பையா
கிடந்துச்சு!

எது dust bin எது comment box-ன்னு வித்தியாசம்
கூட
தெரியாம இப்படி குப்பையா போட்டு வெச்சு
இருக்கானுங்களேன்னு நான் feel பண்றத பாத்துட்டு
என்
பிரண்ட் சொன்னான், ' மச்சி நம்மாளுங்க
வெவரமானவனுங்க படம் எப்படின்னு
சிம்பாலிக்கா காட்டிட்டு போயிருக்கானுங்க'
என்று
சொன்னபடியே அவனும் தன்
கையில் வைத்திருந்த காபி கப்பை அதுக்குள்
போட்டுவிட்டு
என்னை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு
சிரித்தான்
. ம்ம்ம்... ஒவ்வொரு மனுசனுக்கும்
ஒவ்வொரு பீலிங் ... படத்த பத்துன உங்க பீலிங்க
அப்படியே
கமெண்டா போட்டுருங்க.