Wednesday, March 25, 2009

நைட் ஓட்டல்களும் ..நடக்கும் அநியாயங்களும்

Posted by மின்னல்ப்ரியன் at 11:07 AM

தலைப்ப பாத்ததும் பார்ட்டி, பப், குடி, கூத்துன்னு நம்ம
சென்னை நைட் ஓட்டல்கள் பத்தின பதிவுன்னு நீங்க
நினச்சடாதிங்க... அது வேற ஓட்டல்..இது வேற ஓட்டல்!
சென்னைல இருந்து கோவை, திருச்சி, மதுரைன்னு பஸ்ல
வெளியூர் போகும் போதோ, வரும் போதோ டிரைவர் ஒரு
இடத்துல வண்டிய நிறுத்திட்டு " பஸ் ஒரு பத்து நிமிஷம்
நிக்கும்
, டீ, காபி,டிபன் சாப்பிடறவங்க ... பாத்ரூம்
போறவங்க
எல்லாம் போயிட்டு வந்துடுங்கன்னு...
சவுண்ட்
குடுப்பார் பாத்திங்களா அந்த ஓட்டலுங்க
பத்தின மேட்டர்தான் இது.

சுத்தம் சோறு போடுங்கறது எல்லாம் சும்மா.. உட்டாலக்கிடி,
இந்த மாதிரி ஓட்டல் ஓனருகிட்ட கேட்டா அசுத்தம் சோறு,
பிரியாணி
, சிக்கன் 65 எல்லாம் போடும்னு புதுசா பழமொழி
சொல்லுவாங்க. கையேந்தி பவன்தான் மோசமான நோய்
பரப்பும் ஒட்டல்ன்னு சொல்றவங்க ஒரே ஒரு தடவ இங்க
வந்து சாப்பிடுங்க ,அதுக்கப்பறம் நீங்க உங்க பரம்பரைக்கே
நோய் பரப்ப ஆரம்பிச்சுடுவிங்க.. அவ்வளவு கேவலமான
உணவுகள், வாயிலேயே வெக்க முடியாத டேஸ்ட்,
கன்னாபின்னான்னு ரேட்டு, ஏதாவது கேள்வி கேட்டா
இஷ்டம்னா சாப்பிடு ,இல்ல எடத்த காலி பண்ணுங்கர
அவங்க தெனாவெட்டு எல்லாம் பாக்கும் போது நம்ம
பஸ் டிரைவரையும், கண்டக்டரையும் தர்ம அடி அடிக்கணும்
போல கோபம் வரும். பின்ன என்ன அவங்களுக்கு கிடைக்கற
ஓசி
டீ, சிகரெட்க்குக்காக நம்ம அனுபவிக்கற கஷ்டம் நம்ம
எதிரிக்கு கூட வர கூடாது.

இதுகூட பரவாயில்ல.. இன்னொரு அநியாயம் இருக்கே
இன்னும் கொடுமை. யூரின் போக ஒரு ஆளுக்கு அஞ்சு
ரூபா, அஞ்சு ரூபா கொடுத்துட்டு என்ன அமெரிக்காவுக்கா
போகமுடியும். அரையுங் குறையுமா தென்னங்கீத்து வெச்சு
அவனுங்க கட்டி இருக்கற toilet தான் போகமுடியும்.
( இதுக்குதான் பஸ் ஏறும் போது பீர் குடிக்க கூடாதுன்னு
பெரியவங்க
சொல்லி இருக்காங்க)அத toiletன்னு சொன்னா
toiletஅ நாம என்னான்னு சொல்றது அப்படின்னு யாராவது
கேள்வி கேட்க நெனச்சிங்கன்னா அந்த கேள்விய அப்படியே
குமுதம் அரசு பதில்கள் பகுதிக்கு அனுபிச்சிடுங்க. நாம
மேட்டருக்கு வருவோம், நான் எதுக்கு அஞ்சு ரூபா
குடுக்கணும் அதான் சுத்தி பொட்டல் காடா இருக்கே
நான் அங்க போய்க்கறன்னு யாராவது அந்த பக்கம்
போலான்னு நினைச்சா அங்க நாலு குண்டர்கள்
கைல லத்தி மாதிரி ஒரு குச்சிய வெச்சுட்டு நிப்பாங்க.
நீங்க அந்த பக்கம் போனாலே அசிங்க அசிங்கமா
பேசுவானுங்க, அதையும் மீறி நான் இங்கதான் யூரின்
போவன்னு நீங்க குழந்தை மாதிரி அடம் புடிச்சா நீங்க
அடி வாங்கறதா எந்த ஹீரோவாலயும் தடுக்க
முடியாது. ஆம்பளைங்க நிலைமையே இப்படின்னா..
பஸ்ல ட்ராவல் பண்ற லேடீஸ் நிலம இன்னும் கொடுமை.
தவிர்க்கவே முடியாத இயற்கை உபாதைக்காக இவங்க
இந்த toilet யூஸ் பண்ணும் போது அங்க காசு வாங்க
உட்கார்ந்து இருப்பவனே பெண்களை அசிங்கமாய்
பேசுவதும், திட்டுவதும் என இவர்கள் பண்ணும்
அராஜகத்தையும் , மாமூல் வாங்கி கொண்டு இந்த
மாதிரி ஓட்டல்களை கண்டும் காணாமலும் இருக்கும்
அதிகாரிகளையும், இங்கு பஸ் நிறுத்துவது
தெரிந்தும், இங்கு நடக்கும் அநியாயங்கள் தெரிந்தும்
கண்டு கொள்ளாமல் இருக்கும் அரசு மற்றும் தனியார்
பஸ் நிறுவனதாறையும் கண்டித்து எல்லோரும் ஒரு
நிமிடம் அவர்களை நினைத்து கெட்ட வார்த்தைகளில்
அசிங்க அசிங்கமாய் திட்டுங்கள்.

திட்டி முடித்த பாதிக்கபட்ட அத்தனை பேரும் இந்த
பிரச்சனையை புகாராய் தனியார் மற்றும் அரசு பஸ்
நிறுவனங்களுக்கு போனில் சொல்லுங்கள். ஏதாவது
மாற்றம் நடக்கிறதா என்று பார்ப்போம்.

பின் குறிப்பு: இந்த ஓட்டல்களில் எனக்கு புரியாத ஒரு
விஷயம் எல்லா ஓட்டல்களிலும் ஒரு ஆடியோ கேசட்
கடை இருக்கும். அதில் எதாவது ஒரு இரட்டை அர்த்த
கானா பாடல் எப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கும்.
காலம் மாறிவிட்டது இப்போது கேசட்டுக்கு பதிலாய் சிடி
விக்கிறார்கள். மற்றபடி அந்த செட்அப் இன்னும்
அப்படியேதான் இருக்கிறது.முன்னாடியாவது பஸ்
டிரைவர்கள் அங்கு விக்கும் கேசட்டை வாங்குவதை
அவ்வப்போது பார்த்துருக்கிறேன்.இப்போது எல்லா
வண்டியும் video coach ஆன பிறகு அங்கு யார் கேசட்
வாங்குகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.


படித்து விட்டு பிடித்திருந்தால் உங்கள் கருத்தையும் ஓட்டையும் தவறாமல் பதிவு செய்யுங்கள்.

9 comments on "நைட் ஓட்டல்களும் ..நடக்கும் அநியாயங்களும்"

on March 25, 2009 at 6:48 PM said...

Good .. Appreciate.. All drivers and conductors are bastard.

Anonymous said...

yes only drivers and conductors are bastard. we are all very clean???

all of us are corrupted at some place. Let us not use dirty language.

Let us Try to rectify the problem.

on March 25, 2009 at 7:43 PM said...

நான் கூட ரெண்டு கேசட் வாங்கி தொலைச்சிட்டேனே!

படம் வருமா வராதா?


வேர்டு வெரிபிகேசனை எடுங்க
அப்ப தான் பின்னூட்டம் வரும்!

on March 25, 2009 at 8:17 PM said...

//அதில் எதாவது ஒரு இரட்டை அர்த்த
கானா பாடல் எப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கும்.//

பெரும்பான்மையான பெண்களுக்கு எரிச்சல் வரும் விசயமிது.
அந்த சமயத்தில்,அங்கே வண்டியை ஓரங்கட்டிய ஓட்டுனர்,நடத்துனர் மீது ஆத்திரமாக வரும்.

on March 25, 2009 at 9:46 PM said...

நீங்கள் சொல்வது உண்மையிலும் உண்மை.நான் இந்தியா வந்திருந்தபோது இந்த வேதனையை நானே அனுபவத்திருக்கிறேன்.ஒரு நாய்(வேன் டிரைவர்) எங்களை (நாங்கள் 16 பேர் மொத்தம்) இரவு சாப்பாடு சாப்பிட ஒரு ஓட்டலில் நிறுத்தியது.அப்பவும் நான் காசைப் பற்றி கவலையில்லை நல்ல ஒட்டலில் நிறுத்து என்று சொல்லியிருந்தேன் அப்படியும் அந்த
நாய் எங்களை அந்த மட்டமான
ஓட்டலிலி நிறுத்தியது. சப்பாத்தி
காய்ந்து போயிருந்தது,சாள்னா ஊசை வாடை அடித்தது மற்ரவர்கள் எப்படியோ குறைச் சொல்லிக் கொண்டேசாப்பிட்டு முடித்தனர்.
என்னால் இரண்டு வய்க்குமேல் சாப்பிட முடியவில்லை சாரி ஒரு
டீயாவது சாப்பிடலாம் என்று நினைத்து ஒரு டீ வாங்கினேன்
கடவுளெ,பால் ஒரே முரப்பு வாடை
டிரைவரை ஏர்பொர்ட்வரை திட்டிக்
கொண்டே வந்ததுதான் மிச்சம்
அவர்கள் கண்களில் இப்படி மட்டமான்
சர்வீசை தருகிறோமே நாளைக்கு
பின் கஸ்டமர்கள் வருவார்களா
என்கிற கவலைத் தெரியவே இல்லை
அதுதான் டிரைவர்கள் இருக்கிறார்களே
என்னத்த சொல்வது எல்லாம் நேரம்
என்று போகவேண்டியதுதான்

on March 26, 2009 at 11:19 AM said...

//வேர்டு வெரிபிகேசனை எடுங்க
அப்ப தான் பின்னூட்டம் வரும்!///

தல அத தூக்கியாச்சு... நன்றி.

on March 26, 2009 at 1:37 PM said...

ஓஹோ
என்ன மாதிரியே நெறைய உள்ளங்கள் இந்த சோகத்தை அனுபவிச்சிருக்கா ... ?
என்ன கொடுமை மின்னல் பிரியன் இது ?

on March 27, 2009 at 10:14 PM said...

நன்றி மின்னல் பிரியன் அவர்களே.... இதுபற்றி நானும் ஒரு பதிவு எழுதலாம் என்று எண்ணியிருந்தேன். தாங்கள் தைரியமாக தட்டிக் கேட்டதற்கு நன்றி. ஹோட்டல்களில் நாம் சாப்பிட உட்கார்ந்தால் புரோட்டாவுக்கு சால்னா கேட்டால் அது சிக்கன் பீஸோடுதான் வரும். அதுவும் இரண்டு பீஸ்தான் இருக்கும். அதன் விலை என்னவென்று கேட்டாலும் மிரட்டும் தொனியில் பார்த்துவிட்டு எந்தப்பதிலும் சொல்லாமல் சென்றுவிடுவார். ஓகே இதுதான் சால்னா என்று நாம் சாப்பிட்டு விட்டு எழுந்தவுடன் சிக்கன் குழம்பு என்று சொல்லி அந்த சால்னாவிற்கும் சேர்த்து பில் போடுவார்கள். நாம் தட்டிக் கேட்டால் நாம் மட்டும்தான் பேசிக்கொண்டிருப்போம் நமக்கு எதிராக அந்த ஓட்டலின் கிளீன் பாய் வரை நம்மிடம் எதிர்த்து பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த விஷயத்தில் நாம் அந்த ஓட்டல்காரர்களை மட்டும் குறை சொன்னால் போதாது. நம் மக்களையும் சேர்த்துதான் சொல்லவேண்டும். நாம் அனைவரின் கைகளும் ஒன்று சேர்ந்தால்தான் நாம் இதுபோன்ற பகல் கொள்ளையர்களை ஒழிக்க முடியும். இதுபோன்ற கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக 20 கிலோ மீட்டர் தள்ளி இருந்தாலும் பரவாயில்லை. ஊரிலிருந்து சுமார் 1லிருந்து அரைக் கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கும். ஓசி டிபன் மற்றும் டீக்காக நாக்கை தொங்கப்போட்டு அலையும் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களின் கொட்டம் எப்பொழுது விடிவுக்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இனிமேலாவது நமது மக்கள் சிந்திப்பார்களா... ஒன்று சேருங்கள். வெற்றி நமக்கே.

Anonymous said...

very well captured. Every one who uses overnight busses undergo this torture. As far as I understand, the Audio shop is only to wake everyone one in the bus. No one buys or sells.

If you eat the food, you are def'tly going ot have life time problem. Reg. Toilet - it is a "lifetime" experiecne and ladies suffer the most.

Sometime, I wonder why, our governmanet act like deaf and dumb even after several compliants.