Thursday, October 23, 2008

கவிதை

Posted by மின்னல்ப்ரியன் at 11:39 AM 4 comments

தம் அடிக்காதே.. தண்ணி அடிக்காதே
அவன்
கூட சேராத.. இவன் கூட சேராத
அஞ்சு
மணிக்கு எழு.. அப்பா பேச்ச கேளு
ஊர் சுத்தாத.. உருப்படற வழிய பாரு
இப்படி
என்ன சொன்னாலும் செய்கிறேன்
நீ என்னை காதல் செய் ....

Saturday, October 18, 2008

பயணங்கள் முடிவதில்லை

Posted by மின்னல்ப்ரியன் at 11:46 AM 1 comments

எப்போதாவது பேருந்து வரும் உனது
ஊரின் நிழற்குடை இல்லாத பேருந்து
நிறுத்ததில்தான் நாம் முதலில் சந்தித்து
கொண்டோம்.

நாம் பேருந்துக்காக காத்திருந்தோம்
காதல் நமக்காக காத்திருந்தது அதன்
பின் நீ எனக்காகவும் நான் உனக்காகவும்
காத்திருக்க தொடங்கினோம்.

உன் கடைக்கண் பார்வையும் கடிதங்களும்
என் வீட்டு ரோஜாவுமாய் நம் காதல் பயணம்
நிரம்பி
வழிந்தது.

இந்த
எல்லையற்ற பயணத்தில் நாம்
திளைத்திருந்த
ஒரு நாளில் நீ மட்டும்
பேருந்திலிருந்து பாதி வழியிலேயே
இறங்கி
கொண்டாய்,யாருமற்ற அந்த
பேருந்து பயணத்தில் நான் இன்னும் பின்
இருக்கையிலேயே
அமர்ந்து இருக்கிறேன்.

Friday, October 17, 2008

தெரியும் ஆனா தெரியாது ............

Posted by மின்னல்ப்ரியன் at 4:39 PM 3 comments

1. உங்களுக்கு புது பட திருட்டு டிவிடி வேணுமா நேரா பர்மா பஜார் போங்க,
நீங்க வேணுங்கறத வாங்கிட்டு வரலாம் .

2.உங்க வீட்டுக்கோ,கடைக்கோ ஆள் வேணுமா? இருக்கவே இருக்காங்க
குழந்தைங்க
குறைஞ்ச சம்பளம், நெறைய வேல, நமக்கு லாபம்.

3. நீங்க அரசியல்ல சேர்ந்தா கோடி,கோடியா லஞ்சம் வாங்கி சம்பாதிக்கலாம்.

4. உங்களுக்கு படிப்பே வராதா? பரவாயில்ல கரன்சிய வெட்டுங்க,டாக்டர்
இல்லன்னா என்ஜினீயர் ஆய்டலாம்.

5. மீட்டர் என்ன வீலே இல்லாம கூட நீங்க சிட்டில ஆட்டோ ஓட்டலாம்.

6. நீங்க ஹெல்மெட் இல்லாம,லைசென்ஸ் இல்லாம ஏன் வண்டி ஓட்டவே
தெரியாம
வண்டி ஓட்டலாம்,தி.நகர்ல 70 மாடி கட்டடம் கட்டலாம்.
கொல
பண்ணலாம், கொள்ளையடிக்கலாம்,காசு இருந்தா காக்காய
கழுதைன்னு
கூட நம்ப வைக்கலாம்.

மேல சொன்ன விஷயம் எல்லாமே நம்ம இந்திய ஜனநாயக சட்டப்படி
தப்புங்க,, இந்த மாதிரிஇன்னும் ஆயிரம் சொல்லலாம். இப்படி எல்லாம்
தெரிஞ்சும் நாம தெரியாத மாதிரி சொரணகெட்டுப்போய் வாழ்ந்துட்டு
இருக்கோம்
. அதுக்கு காரணம் இது எல்லாத்துலயும் நம்மளுக்கும்
ஏதோ ஒரு விதத்துல பங்கு இருக்கரதனாலதான்னு நான் நெனைக்கறன்.
நீங்க என்ன சொல்லறீங்க?

Tuesday, October 14, 2008

சென்னையில் ஒரு மழைக்காலம்

Posted by மின்னல்ப்ரியன் at 5:16 PM 1 comments

டைட்டில் பாத்த உடனே நான் ஏதோ கெளதம் மேனன் படத்த பத்தி சொல்லுவன்னு நினைக்கறவங்களுக்கு ஆசை,தோசை,அப்பளம்,வடை. இந்த ரெண்டு நாளா சென்னையில மழை பெஞ்சிட்டு இருந்த டைம் தி.நகர் பக்கமா போய் இருந்தன். கோடம்பாக்கம் புது பிரிட்ஜ் தாண்டி உஸ்மான் ரோடு என்டெர் ஆன உடனே 'நான் அப்படியே ஷாக் ஆயிட்டன்'. ரோட பாத்தா தூர் வாருன ஏரி மாதிரி இருந்துச்சு. பக்கத்துல இருந்த டீ கடை மாஸ்டர்கிட்ட 'என்னண்ணே உஸ்மான் ரோட் பூகம்பம் ஏதாவது வந்துச்சான்னு கேட்டதுக்கு பொது இடத்துல 'தம்' அடிக்க கூடாதுன்னு சட்டம் போட்ட மாதிரி, இனி பொது இடத்துல மழையும்பெய்ய கூடாதுன்னு சட்டம் போட சொல்லுன்னு அவரு யார் மேலயோ இருந்த கோபத்த என்கிட்ட காட்டுன அப்பத்தான் மழைதான் இதுக்கு காரணம்னு புரிஞ்சுது.

எனக்கு தெரிஞ்சு 2, 3 மாசத்துக்கு முன்னால புது பிரிட்ஜ் ஓப்பன் பண்ணறப்ப போட்ட ரோடு அது, ஒரு மழைக்கே இந்த கதி ஆயிடிச்சுன்னா அந்த ரோட்ட என்ன லச்சனத்துல போட்டு இருப்பாங்க, எவ்ளோ சுருட்டி இருப்பாங்க ?

ஒண்ணு மட்டும் நல்லா தெருஞ்சுக்கங்க மக்களே இந்த உலகத்துலயே குறைஞ்ச ஆயுள் கொண்டது நம்ம கவர்மென்ட் போடற ரோடுதான்.இந்த மழையால காண்ராக்ட் எடுக்கறவங்களுக்கு பண மழை கொட்ட போகுது. எப்படியும் அந்த ரோட்ட மறுபடியும் போட போறாங்க, மறுபடியும் மழை வர போகுது. என்ன கொடுமை சரவணன் இது ?

Friday, October 10, 2008

மின்சாரம் இல்லாமல் வாழ்வது எப்படி?

Posted by மின்னல்ப்ரியன் at 1:13 PM 4 comments

மின்வெட்டு துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தரும் 6 அற்புத யோசனைகள்:

1.இருட்டில் வெட்டியாக பொழுதை போக்காமல் தமிழக மக்கள் எல்லோரும் மின்சாரம் வேண்டி அமெரிக்க அதிபர் ஜார்ஜ். புஷுக்கு sms அனுப்பலாம் , டைம் பாஸ் ஆவதோடு உங்கள் விரல்களுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும் .

2. யோகா , தியானம் எல்லாம் கத்துக்கரதால உங்க உள்ளத்துல ஒரு ஒளி வருமாம் , அந்த வெளிச்சத்துல வாழ கத்துக்கங்க .

3. அலுவலகத்தில் எல்லோரும் ஜாலியாக உட்கார்ந்து கொண்டு உங்கள் பகுதியில் மின்சாரம் இருந்த 1 மணி நேரத்தில் கலைஞர் டிவியில் நீங்கள் பார்த்த சீரியல் கதைகளை ஒருவருக்கொருவர் பேசி மகிழுங்கள் .

4.
எல்லா ஊர்லயும் கழக கண்மணிகள் மின்சாரம் வருமா? வராதான்னு தினமும் பட்டிமன்றம் நடத்துவாங்க , வரும் ஆனா வராதுன்னு நடுவர் சொல்லற தீர்ப்ப கேட்டு நீங்க சிரிச்சு மகிழலாம் .

5.
கடவுள் இருக்கிறார் ,கரன்டார் இருக்கிறார் என்கிறார் அம்மையார் ,இரண்டுமே கண்ணுக்கு தெரிவதில்லை , அதை நம்புவது மடமை , இதுவே நம் கொள்கை என முரசொலியில் கலைஞர் எழுதும் கவிதைகளை படித்து நீங்கள் வாழ்வாங்கு வாழலாம் .

6.
பொழுது போகவில்லை என்றால் ஊரெங்கும் உள்ள மின்கம்பிகளில் கொக்கி மாட்டி ஜாலியாக ஊஞ்சல் விளையாடுங்கள் .

சாரல்

Posted by மின்னல்ப்ரியன் at 11:23 AM 1 comments

ஒரு மழை நாளில் உன்னை முதலில்
பார்த்த பரவச நிமிடங்கள் வெயில்
தகிக்கும் கோடையிலும் நெஞ்சுக்குள்
கொட்டி தீர்க்கிறது குத்தால சாரலை..