Monday, February 1, 2010

தமிழ்ப்படம் உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி !

Posted by மின்னல்ப்ரியன் at 7:59 PM 40 comments
சத்தியமா இவ்ளோ பெரிய வரவேற்ப நாங்களே
எதிர்பார்க்கலைங்க, என்னாமா பீல் பண்ணி எழுதி
இருக்கீங்க எல்லாரும் ! உங்களுக்கு எல்லாம் எனது
மனமார்ந்த "கிபாக்கோ " (பண்டோரா பாஷைல நன்றின்னு
அர்த்தம்பா ).முக்கியமா போன் பண்ணி வாழ்த்து சொன்ன
பரிசல்காரன் , கேபிள் சங்கர் , கார்க்கி ஆகிய மூவருக்கும்
டபுள் கிபாக்கோ . கூடவே பின்னூட்டத்துல படத்த பத்தி பீல்
பண்ணின அனைத்து பதிவர்களுக்கும் ஒரு குட்டி கிபாக்கோ .

வழக்கமா பதிவர்கள் எழுதற விமர்சனத்த படிக்கும் போது
சன் ஆப் சாரு நிவேதிதா எழுதி இருப்பாரோன்னு யோசிக்கற
அளவுக்கு செம டரியலா இருக்கும் . அந்த பயத்தோடவே
உங்க விமர்சனங்கள எதிர் பார்த்துட்டு இருந்தோம் . ஆனா உங்க
விமர்சனம் எல்லாம் படிக்கும் போது ஒரு நல்ல படத்த
குடுத்து இருக்கோம்ங்கற சந்தோசம் மனசுக்குள்ள ஓடிட்டே
இருக்கு . கூடவே படமும் நல்லா ஓடறதால இரட்டிப்பு சந்தோசம் .

அண்ணன் கேபிள் சங்கர் எங்க டீமோட ஒரு பதிவர் சந்திப்பு
ஏற்பாடு செய்ய சொல்லி இன்று பேசினார் . நிச்சயமாக முயற்சி
செய்கிறேன் . நன்றி .

Wednesday, December 23, 2009

தமிழ்படம் ட்ரைலர்

Posted by மின்னல்ப்ரியன் at 7:59 PM 13 comments
தமிழ்படத்தின் முதல் ட்ரைலர் .....பாத்துட்டு எப்புடி இருக்குன்னு சொல்லுங்க .

Saturday, October 31, 2009

சில கவிதைகள் ....பல நினைவுகள்

Posted by மின்னல்ப்ரியன் at 10:33 PM 2 commentsஉன்னை பாக்கும் போதெல்லாம்
மனசு
மழை நீரில் குழந்தை விட்ட
கப்பலாய்
மிதக்கிறது .


நீ நடக்கும் போது உன்னுடன்
வருவது
உன் நிழலல்ல
என் இதயம்.

இரவெல்லாம் வருகின்றது
கனவுகள்
கனவெல்லாம்
நீ விட்டு சென்ற சுவடுகள்.


வானவில்லை விட அழகு
வெட்கத்தில்
சிவக்கும்
உன் கன்னங்கள் .


நூறு யுகங்கள் வேண்டுமானாலும்
காத்திருக்கிறேன் ஒரு நொடி திரும்பி
பார்த்து
விட்டு போ !


நான் உனக்கு குறுந்தகவல்
அனுப்பும்
போதெல்லாம் காற்றில்
கடந்து
வருகிறது காதல்.

Thursday, October 22, 2009

செத்தாலும் விடமாட்டானுங்கடா இவனுங்க !

Posted by மின்னல்ப்ரியன் at 8:09 PM 1 comments

போன வாரத்துல ஒரு நாள் AVM ஸ்டியோவுக்கு பின்னாடி இருக்கற
கல்லறைல சூட்டிங். நாங்க பாட்டுக்கு சூட் பண்ணிட்டு இருந்தோம்.
சைடுல நாலஞ்சு பேரு குழி தோண்டிட்டு இருந்தாங்க. என்னடா
மேட்டர்ன்னு பாத்தா அன்னிக்கு மட்டும் ஏழு டெட்பாடிய அடக்கம்
பண்ண போறதா சொன்னாங்க. குழி தோண்டும் போது ஒரு சில
இடத்துல எலும்பு , மண்டை ஓடுன்னு நிறைய வந்து விழுந்துச்சு.
நாங்க அதிர்ச்சியா பாத்தா குழி தோண்டரவரு அசால்ட்டா
கிரிக்கெட் பால் மாதிரி அத எல்லாம் தூக்கி போட்டுட்டு அவரு
வேலைய பாத்துட்டு இருந்தாரு.

நாங்க பாத்துட்டு இருக்கும் போதே மூணு பாடிய அடக்கம்
பண்ணாங்க. நாலாவதா ஒரு டெட்பாடி வந்துச்சு .. அதுக்கு
அப்புறம் நடந்ததுதான் அதிர்ச்சி ...(இதுக்கு மேல படிக்கறவங்க
நீங்களா ஒரு பேய் படம் பாக்கற எபக்கட்டுக்கு வந்துடுங்க)..
நாலாவது டெட்பாடிய அடக்கம் பண்ண நம்ம வெட்டியான்
இடம் தேடுனாரு ,எல்லாம் புல்லா இருந்துது. கல்லறை
முழுக்க ஒரு ரவுண்டு வந்தாரு. ஒரு இடத்த செலக்ட்
பண்ணாரு ..அந்த இடத்துல எற்கனவே ஒரு டெட் பாடிய
பொதச்சு இருந்தாங்க. நம்மாளு கவலையே இல்லாம அந்த
எடத்த
தோண்ட ஆரம்பிச்சாரு. பல முறை தோண்டி இருப்பாங்க
போல மண்ணு சும்மா நெகு...நெகுன்னு ஈசியா வந்து விழுந்துச்சு ..
தோண்டி முடிச்சாரு ...உள்ள எட்டி பாத்தா ........எட்டி பாத்தா..............................................................
அரைகுறையா மக்கி போன ஒரு வயசானவரோட பிணம்.
ஒரு பெரிய சேலை துணில சுத்தி வெச்சிருந்தாங்க ..
நம்ம வெட்டியான் பர பரன்னு குழிக்குள்ள இறங்குனாரு ..
இன்னொரு சைடு அவரோட பையன் (13 வயசுதான் இருக்கும் )
இறங்குனான். ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கம் புடிச்சு
அப்படியே தூக்கி வெளிய போட்டாங்க. போட்டதும் அவரு
அந்த குழிய அடுத்த டெட்பாடிக்கு ரெடி பண்ண ஆரம்பிச்சாரு ..
அந்த பையனும் இன்னொரு பையனும் சேர்ந்து அந்த பாடிய
தூக்கி கொண்டு போய் கல்லறைலையே ஒரு ஓரமா
தூக்கி போட்டாங்க. அதுக்கு அப்புறம் என்னால அத பாக்க
முடியல ... கிளம்பும் போது அந்த பையன்கிட்ட தூக்கி போட்ட
டெட்பாடிய என்ன பண்ணுவிங்கன்னு கேட்டன். ரொம்ப கூலா
எரிச்சிடுவம்ன்னு சொன்னான் . எவ்வளவு சொத்து
வெச்சிருந்தாலும் கடைசில ஆறடி நிலம்தான்னு
சொல்லுவாங்க.. மக்களே இனி அது கூட கிடையாது ...
பாத்து சூதானமா இருந்துக்கங்க.

டிஸ்கி : இந்த கொடுமை பாத்துட்டு இருக்கும் போதே ரெண்டு
பேமிலி அவங்க அடக்கம் பண்ணுன இடத்துல அஞ்சலி
செலுத்திட்டு இருந்தாங்க ..பாவம் ... அவங்க அடக்கம் பண்ணுன
இடத்துல இப்ப யார் உறங்கிட்டு இருக்காங்களோ !

Saturday, October 10, 2009

ஏன் இப்படி மயக்கினாய் ?அண்ணன் வால்பையனுக்காக ஒரு கவிதை

Posted by மின்னல்ப்ரியன் at 10:15 PM 2 comments
உன்னை கடக்கும் போதெல்லாம்
கால்கள் தள்ளாடுகின்றன ,
மனசு உன்னை நினைத்து நினைத்தே
மறுஅடி எடுத்து வைக்காமல்
மறுத்து பேசுகிறது ,
சுரக்கும் ஹார்மோன்கள் உன்னை
நோக்கி சுண்டி இழுக்கிறது ,
நீ இல்லாமல் என் உலகம் ஒரு
சூன்யமாய் சுழல்கிறது ,
நீ என் இதயத்தில் நுழைந்து
கல்லீரலை கரைக்கிறாய்,
உன் பேரை உச்சரிக்கும் போதே
உள்ளுக்குள் நிகழும் மாற்றங்கள்
உலுக்கி எடுக்கிறது என்னை ,
சூரியனை சுற்றுகிறது பூமி
உன்னை சுற்றுகிறேன் நான் ,
உன்னை நினைக்கும் போதே
உலரும் உதடுகள் ஈரமாகின்றன,
நீ இல்லாத உலகம் நீர் இல்லாத தாவரம் ,
மனசு பட படக்க இதயம் தட தடக்க
நுழைகிறேன் உன்னில் பூச்சி பற பறக்க
வருகிறேன் என் கண்ணில் ,
என் அன்பு ஒயின்ஸாப்பே நீ
மட்டும் என்னை ஏன் இப்படி
மயக்கினாய் ?
ஏன் இப்படி
மயக்கினாய் ?

Wednesday, September 30, 2009

முத்திப்போன தேசபக்தி!

Posted by மின்னல்ப்ரியன் at 10:37 PM 1 comments
இந்தியன் டீம் செமி பைனலுக்கு போகணும் ...அதுக்காக இந்தியாவ
ஈயம் ....பித்தளை பேரீச்சம்பழத்துக்கு போட கூட நாம தயாராத்தான்
இருந்தோம்.பாகிஸ்தான் ஜெயிக்கனனுன்னு பழனி முருகனுக்கு
பால் காவடி பன்னீர் காவடி எடுக்காததுதான் பாக்கி.ரெண்டு நாளா
இந்த கணித மேதைகள் வேற இந்தியா ஜெயிக்க பாகிஸ்தான் பத்து
ரன்னுல ஜெயிக்கணும் . ஆஸ்தேரேலியா அஞ்சு விக்கெட்டுல
தோக்கனும் , அமெரிக்கால அணுகுண்டு போடணும் .. ஆப்ப்ரிகாவுல
வறுமைய ஒழிக்கனும்ன்னு பத்திரிக்கை டிவின்னு எல்லாத்துலயும்
கணக்கு மேல கணக்கா போட்டு சொல்லிட்டு இருந்தாங்க.

தெரியாமத்தான் கேக்கறன் ... அப்படி நாம செமி பைனலுக்கு என்னாத்த
கிழிக்க போறம்.உங்க தேசபக்திய நெனச்சா கை .. கால் எல்லாம் அரிக்குதய்யா!
முடியல ... நான் போய் சொரிஞ்சிக்கிரன். போறதுக்கு முன்னாடி பாகிஸ்தான்
ஜெயிச்சாவது இந்தியா செமி பைனல் போகனன்னு நினச்ச உங்க எல்லாருக்கும்
இந்தியன் டீம் சார்பா என் அன்பு பரிசுகள் கீழே.... எடுத்துக்குங்க.


ஏதோ என்னால முடிஞ்ச பரிசு ... திட்டாம கமெண்டும் ..வோட்டும்
போட்டுடுங்க..

Sunday, September 20, 2009

சூடான கிசு கிசுக்கள் ஏழு !

Posted by மின்னல்ப்ரியன் at 3:46 PM 2 comments


கிசு கிசு 1:
வேட்டையாடும் படம் முடிந்ததும் அரசியலுக்கு வருவார்
என்று சொல்லப்படும் ஹீரோ. இப்போது எல்லாம் சூட்டிங்
முடிந்தாலும் வீட்டுக்கு வருவது இல்லையாம் . "ஸ்கா"
நடிகையுடன் தினமும் ஒரே கும்மாளமாம். அப்பா என்ன
செய்வதென்று தெரியாமல் முழி பிதுங்கி போய் இருக்கிறாராம்.

கிசு கிசு 2:
எந்திரமான படம் முடிந்த பிறகு உச்ச நட்சத்திரத்தின் படத்தை
இயக்க பெரிய இயக்கனர்களுக்குள் பெரும் போட்டியே நடந்து
கொண்டு இருக்க சைலண்டாய் உச்சம் ஊர் பெயரில் படம் எடுக்கும்
அரசு இயக்குனருக்கு கால்சீட் கொடுத்து விட்டாராம். பட்டையை
கிளப்பும் பன்ச் டயலாகோடு ஸ்கிரிப்ட் தயாராகி வருகிறதாம். நம்ப
முடியாமல் புழுங்கி கொண்டு இருக்கிறது கோடம்பாக்கம் .

கிசு கிசு 3:
முருகனின் பெயர் முன்னணி காமெடி நடிகருக்கும் ,கந்தசாமி நாயகிக்கும்
இருக்கும் கனெக்சனை பார்த்து முன்னணி ஹீரோக்களே மூக்கின் மேல்
விரலை வைக்கிறார்களாம். எல்லாம் ஒரு பாட்டுக்கு ஆடியதால் வந்த
உறவு என காமெடியின் அடிபொடிகள் பப்ளிசிட்டி செய்கிறார்கள்.

கிசு கிசு 4:
மூணு ஸா நடிகை தெலுங்கு நடிகர் ஒருவரின் காதல் வலையில்
வசமாக சிக்கி உள்ளார் . அந்த நடிகரும் இவருக்காக ஆந்திராவில்
அழகான பங்களா கட்டி வருகிறாராம். நடிகை இனி தமிழில் நடிப்பது
சந்தேகம்தான்.

கிசு கிசு 5:
நடன நடிகரின் காதல் பார்வை இப்போது நயன நடிகையிடம் இருந்து
விலகி தமன நடிகையிடம் திரும்பி விட்டதாம். எல்லாம் ஒரு விழாவில்
முதல் பார்வையில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றம் என்கிறார்கள்.

கிசு கிசு 6:
தமிழ் சினிமாவின் பொக்கிசமான இயக்குனருக்கு இது போதாத காலம்
அவர் அடுத்து ஹீரோவாக நடிக்க இருந்த இரண்டு படங்களில் இருந்தும்
அவரை தூக்கி விட்டார்களாம்.

கிசு கிசு 7:
மின்னலான பெயரில் பதிவு எழுதும் அந்த வலை பதிவர் சூடான கிசு கிசு
என்ற தலைப்பில் எழுதிய டுபாக்கூர் கிசு கிசுக்களை உண்மை என நம்பி
விழுந்து விழுந்து படித்து கொண்டு இருக்கும் வலைப்பதிவர்களை
பார்த்து கோடம்பாக்கமே கை கொட்டி சிரிக்கிறதாம்.

பின் குறிப்பு:
ஏழாவது கிசு கிசுவை படித்தும் மேலே உள்ளது எல்லாமே பொய்
என்று புரியாதவர்கள் தயவு செய்து இனி கிசு கிசு படிப்பதை
நிறுத்தி கொள்ளவும் .மற்றபடி ஏமாந்த அனைத்து அன்பு
நெஞ்சங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.எப்பூடி?

இது சும்மா ஜாலிக்காக மட்டுமே படிச்சிட்டு திட்டாம கமெண்டும் ,
வோட்டும் போட்டுடுங்க ..