Friday, June 26, 2009

எனது ரீமிக்ஸ் வீடியோ 2

Posted by மின்னல்ப்ரியன் at 4:42 PM 1 comments
நானே எடிட் செய்த ரீமிக்ஸ் வீடியோ இது,
பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

Monday, June 22, 2009

தமிழ்நாட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்கும் ?

Posted by மின்னல்ப்ரியன் at 4:29 PM 13 comments
விஜய் கட்சி (மக்கள் இயக்கம் !) ஆரம்பித்துவிட்டார்..
அண்ணன் J.K.ரித்தீஸ் எம்.பி ஆகிவிட்டார் இப்படியே
போனால் தமிழ்நாட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்கும் ?
சும்மா ஒரு கற்பனை.....

இயக்குனர் பேரரசு நாமக்கல் என்ற படத்தில் ஹீரோவாக
நடிக்கிறார். ஹீரோயின் இலியானா, படத்தில் பேரரசு
மொத்தம் 136 பஞ்ச் டயலாக் பேசபோகிறார்.

சிம்பு படமும் T.R படமும் ஒரே நேரத்தில் வெளி
வரகூடாது என தயாரிப்பாளர்கள் கோரிக்கை
வைத்துள்ளனர்.இரண்டு படங்களும் ஒரே நேரத்தில்
வருவதால் ரசிகர்களுக்குள் பெரும் மோதல் வெடிக்கிறது.
இதையும் மீறி இருவரின் படமும் தீபாவளியன்று ரிலீஸ்
ஆவதால் கட்டுக்கடங்காமல் கூடும் கூட்டத்தை
கட்டுபடுத்த ராணுவத்தை வரவழைக்க போவதாக
கமிசனர் தெரிவித்து உள்ளார்.

பா.மா.க நிறுவனர் ராமதாஸ் இனிமேல் தான் சாகும்
வரை ஜெயலிதாவோடோ,கருணாநிதியோடோ
கூட்டணி வைக்க மாட்டேன் என்றும் அப்படி மீறினால்
பொதுமக்கள் தன்னையும் தன் குடும்பத்தையும்
நடுரோட்டில் கட்டி வைத்து உருட்டு கட்டையால்
அடிக்கலாம் என்று சத்தியம் செய்துள்ளார். இவர்
சொன்னால் சொன்ன சொல்லை காப்பாத்துவார்
என்பதால் அரசியல் வட்டாரம் பெரும் பரபரப்பு
அடைந்துள்ளது.

நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க தி.மு.கவுடன் கூட்டணி
அமைத்து உள்ளது.இதை பற்றி கருத்து தெரிவித்த
கருணாநிதி அவர்கள் இரண்டு இதயங்கள்
துடித்தது.. மூக்கு புடைத்தது ,, கூட்டணி மலர்ந்தது
என்று வர்ணித்தார். மேலும் அவர் கூறுகையில்
விஜயகாந்தின் கல்யாண மண்டபத்தை தாங்கள்
இடிக்கவில்லை என்றும் அது பாலம் கட்டும் போது
அங்கு வேலை செய்த ஒருவர் குழி தோண்டும் போது
கடப்பாரை தெரியாமல் மண்டபத்தின் மேல்
பட்டதால் இடிந்து விழுந்து விட்டது என்றார். அரசே
சொந்த செலவில் அதை கட்டி தரும் என்றும் உறுதி அளித்தார்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்த கோஸ்டி மோதல்
முடிவுக்கு வந்தது.இனிமேல் நாங்கள் அனைவரும்
ஒற்றுமையாக செயல்படுவோம் என்று 1334 கோஸ்டி
தலைவர்களும் ஒன்றாய் நின்று பேட்டி கொடுத்தனர்.
மேலும் அவர்கள் அனைவரும் ஒன்றாய் சிரித்தபடியே
குரூப் போட்டோவுக்கு போசும் குடுத்தனர்.(இடி இடித்தது,
மின்னல் மின்னியது, மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது).

J.K.ரித்தீசை தான் ஒரு போதும் எனக்கு போட்டியாக
நினைக்கவில்லை என்று நடிகர் சாம் ஆண்டர்சன்
தெளிவுபட அறிவித்துள்ளார்.இப்போதைக்கு இவ்வளவுதான் படிச்சிட்டு பிடிச்சிருந்தா
உங்க கமெண்டையும் ஓட்டையும் மறக்காம பதிவு
பண்ணுங்க.

Friday, June 19, 2009

என்ன எழுதறது?

Posted by மின்னல்ப்ரியன் at 12:19 PM 1 comments
எழுதுவதுக்கு எதுவுமே தோணாம போகும் போதுதான்
இந்த மாதிரி தலைப்பு எல்லாம் வைக்க தோணும் .
எதுவுமே
தோணலன்னா எழுதாம விட வேண்டியதுதானன்னு
நீங்க கேக்கலாம் . ஆனா என்ன நம்பி 8 followers இருக்காங்க.
அண்ணன் ஏதாவது எழுதுவாரு அத படிச்சு அறிவ
வளத்துக்கலான்னு
நம்பிக்கிட்டு இருக்கற அந்த விசிறிகள
ஏமாத்த விரும்பல... அதனால எல்லாரும்
நல்லா பாத்துக்குங்க நான் எழுத போறன்...நான் எழுத போறன்.

எப்படியோ 20-20 இருந்து நீங்க ஆடுனது போதும்
போய்
புள்ள குட்டிங்கள படிக்க வைங்கடான்னு ம்மள
துரத்தி அடிச்சிட்டாங்க.நம்மளும் இங்க ஒருத்தன் சிக்கி
இருக்கான்
வாடா மாப்பிளைன்னு தோனிய போட்டு
பொளந்து
கட்டிட்டு இருக்கோம். நம்ம டீம் ஏன் இப்படி
ஆய்டுச்சுன்னு நான் பயங்கரமா யோசிச்சதல ண்ண
கண்டுபிடிச்சன்
. எல்லாத்துக்கும் காரணம் இந்த IPLதான்.
IPL
விளையாடறப்ப ரோகித் சர்மாவ எப்படி அவுட்
பண்ணறதுன்னு
Flintoff -க்கு டோனி சொல்லி இருப்பாரு,
டோனிய எப்படி அவுட் பண்ணறதுன்னு மென்டிஸ்க்கு
கங்குலி
சொல்லி இருப்பாரு. இப்படி மாறி மாறி நம்ம டீம
பத்தின
எல்லா மேட்டரையும் நம்மாளுங்களே போட்டு
குடுத்திருப்பாங்க
..இப்ப அது நம்மளுக்கே ஆப்பு வெச்சிடுச்சு..
அதனால
நான் என் சொல்றன்னா IPL மேட்ச்
பாரின் players விளையாடகூடாது.(நீ பயங்கரமா யோசிச்சது
இததானவான்னு யாரும் யோசிக்காதிங்க. )

......................................................................................................................................

இன்னொரு முக்கியமான மேட்டர் என்னன்னா நான்
எழுதற பதிவ என்னால Tamilish ஈசியா இணைக்க முடியுது.
ஆனா தமிழ் மணத்துல இணைக்க முடியல.. font problemன்னு
Error msg வருது. நான் இதுவரைக்கும் டைப் பண்ணறது எல்லாமே
நம்ம bloggerதான். தங்கிலிஷ்ல டைப் பண்ணா
தமிழா மாறிடும். இத பத்தி யாரவது கொஞ்சம் விளக்கமா
கிளாஸ்எடுத்திங்கன்னா தூங்காம கேக்கறன். கொஞ்சம்
கருணை காட்டுங்க உங்க computer காலா காலத்துக்கும் வைரஸ்
தொல்ல இல்லாம நல்லா இருக்கும்.

Tuesday, June 2, 2009

எனது ரீமிக்ஸ் வீடியோ!

Posted by மின்னல்ப்ரியன் at 4:58 PM 3 comments
நானே எடிட் செய்த ரீமிக்ஸ் சாங் .. Youtube- ல்
ஒரு லட்சம் பார்வையாளர்களை தொடபோகிறது.
பார்த்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.