Friday, March 27, 2009

பாராளுமன்ற தேர்தலும் பட்டய கிளப்பும் சலுகைகளும் .

Posted by மின்னல்ப்ரியன் at 2:17 PM
முக்கிய அறிவிப்பு :
இங்கு குறிப்பிடபட்டிருக்கும் ஆலோசனைகளை
கலைஞர், அம்மா, வைகோ, திருமா, சோனியா, அத்வானி
என யார் வேண்டுமானாலும் எந்த கட்சி வேண்டுமானாலும்
பயன்படுத்தி கொள்ளலாம்.கட்டணம் எதுவும் கிடையாது.
மேலும் idea- சொன்னா திருடிடுவாங்க என்று சொல்லும்
விஜயகாந்த் போன்றோரின் சுயநல போக்கும் எனக்கு
கிடையாது என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன்.

இனி ஆலோசனைகள் :

1. நீங்க நோட்டு குடுக்க போகும் போது ஸாரி... ஸாரி ..
நீங்க ஓட்டு கேட்க போகும் போது சும்மா போயி எங்க ஆட்சியின் சாதனைகளை பாருங்கள்ன்னு எல்லாம் மொக்க போடறத
விட்டுட்டு " நீங்க எங்களுக்கு ஓட்டு போட்டா ஓட்டு போடற
உங்க எல்லாரு பேரையும் குலுக்கி போட்டு நாலு பேருக்கு
மாநில அமைச்சர் போஸ்டும், பம்பர் பரிசா ஒருத்தருக்கு
மத்திய அமைச்சர் போஸ்டும் தருவோம்னு ஒரு பிட்ட
போடுங்க " அப்புறம் பாருங்க அந்த முட்டாள் ஜனங்க
பூரா பேராசைல ஓட்ட உங்களுக்கு போட்டுடுங்க.

2. ரெண்டு ஏக்கர் நிலமல்லாம் இப்ப வொர்க் அவுட் ஆகாது.
என்ன பண்ணுங்க ஓட்டு கேட்க போகும் போதே எல்லார்
கைலயும் ரெண்டு ரெண்டு பட்டாவ குடுத்து " அய்யா
உங்களுக்கு நிலாவுல 500 ஏக்கரும் , செவ்வாயில 1000
ஏக்கரும் ஒதுக்கி இருக்கோம், நீங்க நாளைக்கே கூட போயி
விவசாயம் பண்ணலாம்னு ஒரு மேட்டர போடுங்க. பய
புள்ளைக முடிஞ்சா போயி விவசாயம் பாத்து பொழச்சு
போறானுங்க.

3. 18 வயசுக்கு மேலஇருக்கற கல்லூரி மாணவர்கள்
யாருக்கும் எக்ஸாம் கிடையாது , பாஸ், பெயில் எதுவும்
கிடையாது, வருசத்துக்கு ரெண்டு நாள் காலேஜ் போனா
போதும். மீதி நாள் நீங்க பொழுதைபோக்க அரசே இலவச
சினிமா பாஸ் குடுக்கும். அது மட்டும் இல்லாம நீங்க படிச்சு
முடிச்ச உடனே ஒபாமாகிட்ட சொல்லி உங்களுக்கு எல்லாம்
அமெரிக்காவுல வேல வாங்கி தருவோம்ன்னு சொல்லி
பாருங்க மாணவர் ஓட்டு எல்லாம் உங்களுக்குத்தான்.

4. இப்ப குடுத்து இருக்கற சின்ன டிவிய எக்சேஞ்ல
எடுத்துக்கிட்டு புதுசா LCD Tv யும் கூடவே சன் டைரக்ட்
DTH சேர்த்து குடுக்கலாம். அது மட்டுமில்லாம பெண்
வாக்காளர்கள கவர சீரியலுக்கின்னே ஒரு 24 மணி
நேர தனி சேனல் ஆரம்பிக்கலாம் .

5. நாங்க ஆட்சிக்கு வந்தா அப்பப்ப எங்க ஆளுங்கள
ராஜினாமா பண்ண வெச்சு அடிக்கடி இடைத்தேர்தல்
நடத்தி அண்டா, குண்டா , அரிசி, பருப்பு செல்போன்
உட்பட உங்கள் இல்லத்துக்கு தேவையான அனைத்து
பொருட்களையும் இனாமா தருவோம்னு ஒரு
வாக்குறுதி குடுங்க போதும்.

6. மூத்த குடிமக்களுக்கு டாஸ்மாக் சரக்கில் 70%
தள்ளுபடி, பெண்களுக்கு ஜவுளி கடைகளில் 33%
சிறப்பு சலுகை. புதுசா கல்யாணம் செய்யறவங்களுக்கு
ஊட்டி அல்லது கொடைக்கானலில் இலவச தேனிலவு.
காதலர்களுக்கு மாதம் 1000 ரூபாய்க்கு இலவச டாப் அப்
போன்ற சின்ன சின்ன சலுகைகளையும் அறிவிக்கலாம்.

7. இறுதியாய் விவசாயிகள் மட்டுமின்றி நாட்டில் உள்ள
அத்தனை பேரும் வங்கியில், மார்வாடி கடையில், பக்கத்து
வீட்டுக்காரரிடம், பண்ணையாரிடம் என எங்கு கடன் வாங்கி
இருந்தாலும், எவ்வளவு கடன் வாங்கி இருந்தாலும் அத்தனையும்
தள்ளுபடி என்று அறிவிப்பதோடு போனஸாக பெண்கள்
பக்கத்து வீட்டில் அவசரத்துக்கு வாங்கிய காபி பொடிக்கும்
சேர்த்து தள்ளுபடி அறிவியுங்கள். அத்தனை ஓட்டும்
உங்களுக்கே ....நாளை நமதே...நாநூற்று முப்பத்தி நாலும் நமதே.


சலுகைகள் தொடரும் ......

பின்குறிப்பு : படித்து விட்டு tamilish-ல் ஓட்டு போடுபவர்களுக்கும்
விரைவில் சலுகைகள் அறிவிக்கலாம் என்று இருக்கிறேன்.


படித்து விட்டு பிடித்திருந்தால் உங்கள் கருத்தையும்
தவறாமல் பதிவு செய்யவும்.

4 comments on "பாராளுமன்ற தேர்தலும் பட்டய கிளப்பும் சலுகைகளும் ."

on March 29, 2009 at 12:15 AM said...

சலுகைகள் தொடரும் ......

பின்குறிப்பு : படித்து விட்டு tamilish-ல் ஓட்டு போடுபவர்களுக்கும்
விரைவில் சலுகைகள் அறிவிக்கலாம் என்று இருக்கிறேன்

anga vechi inga vechi ippa yengalukkum alwa kudukka try pandreengla....palanikey pachamirthama?....polachi ponga nalla irukku

on March 29, 2009 at 6:51 AM said...

Nice ideas :)

Anonymous said...

sssssssssssss appa, mudiyala

Reena

on March 31, 2009 at 7:40 PM said...

இரண்டும் அஞ்சும் சூப்பர்