Friday, March 20, 2009

மெரீனா நேற்று நடந்ததும் Zee தமிழ் தொலைக்காட்சியும் ....

Posted by மின்னல்ப்ரியன் at 5:13 PM

முதல்ல மெரீனா மேட்டரு... பகல்லயே மெரினால
நடக்கற கூத்து தாங்கமுடியாது .. கொளுத்தற
கட்டுமரத்துக்கு பின்னாடி ஒரு 100, 200 ஜோடி
உட்கார்ந்து இருக்கும், அங்க இடம்
குடைய விரிச்சு உட்கார்ந்து இருப்பாங்க.
இப்படி மறைவான இடத்துல ஒருத்தர ஒருத்தர்
மனச தொறந்து(!) காதல் பண்றத பார்க்கறதுக்கின்னே
ஒரு 50 பேர் வேல வெட்டிய உட்டுட்டு வந்து
அங்க சுத்துவானுங்க... பகல்லயே இப்படின்னா
நைட்ல கேக்கவா வேணும்... நேத்து ஒரு 7 மணிக்கு
மேல பீச்சுக்கு நான் மட்டும் தனியா போயிருந்தன்.
பைக்க பார்க் பண்ணிட்டு நீச்சல் குளத்துக்கு பின்னாடி
கொஞ்ச தூரம் மணல்ல நடந்து ஒரு இடத்துல உட்கார்ந்து
ஒரு 10 நிமிஷம் ஆயிருக்கும்..
"உட்காரவா " என்று குரல் திரும்பி பார்த்தா
சேலையும், புல் மேக்கப்புமா கையில hand bag
வெச்சுக்கிட்டு ஒரு அரவாணி நின்னுட்டு இருந்தாங்க..
நான் திரும்பி பார்த்ததும் "50 ரூபாதான்"
என்றார். நான் மறுத்து தலையசைத்தவாறே
"வேணாம் கிளம்பு" என்றதும் அவர் என்னை விட்டு
நகர்ந்து தனியாய் உட்கார்ந்திருந்த
ஒருவரிடம் போய் நின்றார். அவரும் வேணாம்னு
சொல்லி இருப்பார் போல சுற்றிலும் தேடிக்
தனியாய் உட்கார்ந்திருந்த இன்னொருவரிடம் போனார்.
அவர் அவர் அருகில் உட்கார்ந்துவிட்டு 5 நிமிடம் கழித்து
எழுந்து போனார் (or)போனாள்.

இது போன்ற அனுபவம் தனியாய் போன சில
சமயம் முன்னரே எனக்கு வாய்த்திருந்தது.
உங்களில் பலருக்கு கூட இந்த அனுபவம்
நேர்ந்திருக்கலாம். இதே மெரீனாவில் சில
மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு ஒரு
இளைனனும், அரவாணியும் மறைவான இடத்தில்
கூட பண்ண தயங்கும் விஷயத்தை பண்ணிக் கொண்டு
இருக்க அதையும் ஒரு 50 பேர் சுற்றி நின்று வேடிக்கை
பார்த்து கொண்டு இருந்ததுதான் உச்சகட்ட கொடுமை.

குழந்தைகள், பெண்கள் , சுற்றுலா வருபவர்கள்
என ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர்
செல்லும் மெரீனா திறந்தவெளி விபச்சார
விடுதியாய் மாறுவது கலாச்சார காவலர்கள்
எவன் கண்ணிலும் படவில்லையா?

அடுத்து Zee தமிழ் .... இந்த சேனல் லான்ச் ஆனப்ப
என் பிரண்ட்ஸ் நிறைய பேரு apply பண்ணாங்க..
என்ன கூட apply பண்ண சொல்லி சொன்னானுங்க..
மச்சான் நீ வேணுன்னா பாரு விஜய் டிவிக்கு
சரியான போட்டியா இவங்கதான் இருக்க போறாங்கன்னு
ஓவரா பில்டப் எல்லாம் வேற குடுத்தானுங்க.. சரி அந்த
அளவுக்கு இல்லன்னாலும் ராஜ் டிவி, கலைஞர் டிவிய விட
பெட்டரா இருப்பாங்கன்னு நானும் நெனச்சன். அப்படி நான்
நெனச்சதுக்கு என்ன நானே ___ , ________ , ___________
_____ , ___________ அடிச்சுக்கணும். ( கோடிட்ட இடத்த
நீங்களே நிரப்பிக்கங்க !).

இந்த சேனல்ல போடற சினிமாவ எல்லாம் யாராவது
பாத்து இருக்கிங்களா? அந்த கொடுப்பின எனக்கு
கிடைச்சது. அப்படி நான் போன வாரம் பாத்த சில
உலக காவியங்கள் "ஆச வெச்சேன் , துள்ளுற வயசு,
சுட்ட பழம், பத்து பத்து" . இப்படி எல்லாம் தமிழ்ல
படம் இருக்கான்னு யோசிக்காதிங்க.. இந்த காவியங்கள்
எல்லாம் விஜய், ரஜினி மாதிரி மசாலா நாயகன்கள்
நடிச்ச படமா இருந்தா உங்களுக்கு தெரிஞ்சுருக்கும்.
இந்த உலக சினிமா எல்லாம் சைதை ராஜ் ,
அமிஞ்சக்கரை லட்சுமி மாதிரி தியேட்டர்ல
காலை காட்சியா ஒரு நாள், ரெண்டு நாள் ஓடுன
படங்கள். மக்கள் பார்வைக்கே வராம போன
இந்த காவியங்கள காசுகொடுத்து ரைட்ஸ் வாங்கி
போடற Zee தமிழுக்கு சிட்டு குருவி லேகிய
விளம்பரமாவது யாராவது கொடுத்தால் அவர்களும்
பிழைப்பார்கள், நாமும் இந்த மாதிரி உலக சினிமாக்களை
தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த மாதிரி சினிமாக்களை போட்டு பேரை கெடுத்து
கொள்வதற்க்கு பதில் அந்த ஸ்லாட்டை பேசாமல்
சித்த வைத்தியர், நியூமராலாஜிஸ்ட்
போன்றவர்களுக்கு கொடுத்தால் அவர்கள்
ஆவது ஏதாவது சுமாரான பிகருடன் உடகார்ந்து
ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். அதை
பார்த்து ஒரு பத்து பேர் அந்தரங்க
வைத்தியம் பார்ப்பார்கள், ஒரு இருபது பேர்
பேரையாவது மாற்றுவார்கள். சேனலுக்கும் ஏதாவது
வருமானம் கிடைக்கும். பாக்கலாம் என்ன நடக்குதுன்னு!

பின் குறிப்பு : மேலே சொன்ன உலக சினிமாவில்
"ஆச வெச்சேன் " படத்தில் ஹீரோவின் விக்கலை
நிறுத்துவதுக்கு ஹீரோயின் யூஸ்
பண்ணும் டெக்னிக்கை பாத்த அதிர்சசியில்
இனி எனக்கு ஜென்மத்துக்கும் விக்கல் வராது
என்று நினைக்கிறேன். (அந்த டெக்னிக்கை இங்க
சொல்லமுடியாது , ம்ம்ம் .. உங்க கொடுப்பின அவ்வளவுதான்).

இந்த பதிவு புடிச்சிருந்தா உங்கள் பொன்னான
வாக்குகளை தமிழிஸ் போட்டுடுங்க.6 comments on "மெரீனா நேற்று நடந்ததும் Zee தமிழ் தொலைக்காட்சியும் ...."

on March 21, 2009 at 6:22 PM said...

அடப்போங்க
நேற்று நைட்டு கோழி கூவுதுனு ஒரு படம் ,சூப்பர் ஹிட் திரைப்படம்
போட்டாங்க. இது வேணா கண்டிப்பா சூப்பர்னு நினைக்கிறேன்.

அப்புறம் இன்னொன்னு தமிழ் நாட்டுல நிறைய பேரு தூர்தர்சன் டீடிஎச் மட்டுமே
வெச்சுறக்கிறதுனால கலைஞர் டீவிக்கு சரியான மாற்று Zee தமிழ் தான்
அப்படினு நினைக்கிறேன்.

ஆனா இன்னொரு விசயம் ஒன்பது மணி இரவு நியூஸ் பாருங்க , நிச்சயம்
நல்லாருக்கும்.

இந்திய தொல்லைக்காட்சி வரலாற்றிலேயே முதன்முறையா
விஷால் நடித்த "பையா" அப்படினு ஒரு தெலுங்குப்படத்தைப் இன்னைக்குப்
போட்டு கொஞ்ச நஞ்சம் பேரையையும் கெடுத்த ஒரே புண்ணியம் நம்ம‌
Zee தமிழ் அன்றி வேற யாருக்கும் இல்லை.

on March 21, 2009 at 6:59 PM said...

//போன வாரம் பாத்த சில
உலக காவியங்கள் "ஆச வெச்சேன் , துள்ளுற வயசு,
சுட்ட பழம், பத்து பத்து" //

இந்த மாதிரி படங்கள் போடுவதை வண்மையாக கண்டிக்கிறேன்... (அண்ணே... எத்தன மணிக்கு படம் போடுராய்ங்கனு கொஞ்சம் சொல்லுங்களேன்)

Anonymous said...

//ஒரு 50 பேர் வேல வெட்டிய உட்டுட்டு வந்து
அங்க சுத்துவானுங்க... //

அதில் நீரும் ஒரு நபரா?

on March 24, 2009 at 1:34 PM said...

பீச் மேட்டர் ரொம்பவும் கொடுமை!

நான் சென்னையில் இருந்த காலத்தில் நிறைய அனுபவபட்டிருக்கிறேன்.

என்ன செய்ய எதாவது சொன்னா திருநங்கைகளுக்கு எதிரானவன்னு சண்டைக்கு வருவாங்க!

on March 25, 2009 at 11:11 AM said...

''\\\என்ன செய்ய எதாவது சொன்னா திருநங்கைகளுக்கு எதிரானவன்னு சண்டைக்கு வருவாங்க!///

விடுங்க தல... சொல்றவங்கள ஒரு நாளைக்கு பீச்சுக்கு
அனுப்பிடலாம்.. அனுபவிக்கட்டும்.

கமென்ட் போட்டதுக்கு நன்றி.

on March 25, 2009 at 11:16 AM said...

''// இந்த மாதிரி படங்கள் போடுவதை வண்மையாக கண்டிக்கிறேன்... (அண்ணே... எத்தன மணிக்கு படம் போடுராய்ங்கனு கொஞ்சம் சொல்லுங்களேன்)///'

டைம சொல்லி உங்கள நான் கெடுக்க விரும்பல..எப்பவும்
நல்ல பையனாவே இருங்க ...என்ன மாதிரி...!