Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Saturday, October 10, 2009

ஏன் இப்படி மயக்கினாய் ?அண்ணன் வால்பையனுக்காக ஒரு கவிதை

Posted by மின்னல்ப்ரியன் at 10:15 PM 2 comments
உன்னை கடக்கும் போதெல்லாம்
கால்கள் தள்ளாடுகின்றன ,
மனசு உன்னை நினைத்து நினைத்தே
மறுஅடி எடுத்து வைக்காமல்
மறுத்து பேசுகிறது ,
சுரக்கும் ஹார்மோன்கள் உன்னை
நோக்கி சுண்டி இழுக்கிறது ,
நீ இல்லாமல் என் உலகம் ஒரு
சூன்யமாய் சுழல்கிறது ,
நீ என் இதயத்தில் நுழைந்து
கல்லீரலை கரைக்கிறாய்,
உன் பேரை உச்சரிக்கும் போதே
உள்ளுக்குள் நிகழும் மாற்றங்கள்
உலுக்கி எடுக்கிறது என்னை ,
சூரியனை சுற்றுகிறது பூமி
உன்னை சுற்றுகிறேன் நான் ,
உன்னை நினைக்கும் போதே
உலரும் உதடுகள் ஈரமாகின்றன,
நீ இல்லாத உலகம் நீர் இல்லாத தாவரம் ,
மனசு பட படக்க இதயம் தட தடக்க
நுழைகிறேன் உன்னில் பூச்சி பற பறக்க
வருகிறேன் என் கண்ணில் ,
என் அன்பு ஒயின்ஸாப்பே நீ
மட்டும் என்னை ஏன் இப்படி
மயக்கினாய் ?
ஏன் இப்படி
மயக்கினாய் ?

Wednesday, September 30, 2009

முத்திப்போன தேசபக்தி!

Posted by மின்னல்ப்ரியன் at 10:37 PM 0 comments
இந்தியன் டீம் செமி பைனலுக்கு போகணும் ...அதுக்காக இந்தியாவ
ஈயம் ....பித்தளை பேரீச்சம்பழத்துக்கு போட கூட நாம தயாராத்தான்
இருந்தோம்.பாகிஸ்தான் ஜெயிக்கனனுன்னு பழனி முருகனுக்கு
பால் காவடி பன்னீர் காவடி எடுக்காததுதான் பாக்கி.ரெண்டு நாளா
இந்த கணித மேதைகள் வேற இந்தியா ஜெயிக்க பாகிஸ்தான் பத்து
ரன்னுல ஜெயிக்கணும் . ஆஸ்தேரேலியா அஞ்சு விக்கெட்டுல
தோக்கனும் , அமெரிக்கால அணுகுண்டு போடணும் .. ஆப்ப்ரிகாவுல
வறுமைய ஒழிக்கனும்ன்னு பத்திரிக்கை டிவின்னு எல்லாத்துலயும்
கணக்கு மேல கணக்கா போட்டு சொல்லிட்டு இருந்தாங்க.

தெரியாமத்தான் கேக்கறன் ... அப்படி நாம செமி பைனலுக்கு என்னாத்த
கிழிக்க போறம்.உங்க தேசபக்திய நெனச்சா கை .. கால் எல்லாம் அரிக்குதய்யா!
முடியல ... நான் போய் சொரிஞ்சிக்கிரன். போறதுக்கு முன்னாடி பாகிஸ்தான்
ஜெயிச்சாவது இந்தியா செமி பைனல் போகனன்னு நினச்ச உங்க எல்லாருக்கும்
இந்தியன் டீம் சார்பா என் அன்பு பரிசுகள் கீழே.... எடுத்துக்குங்க.


ஏதோ என்னால முடிஞ்ச பரிசு ... திட்டாம கமெண்டும் ..வோட்டும்
போட்டுடுங்க..

Monday, June 22, 2009

தமிழ்நாட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்கும் ?

Posted by மின்னல்ப்ரியன் at 4:29 PM 12 comments
விஜய் கட்சி (மக்கள் இயக்கம் !) ஆரம்பித்துவிட்டார்..
அண்ணன் J.K.ரித்தீஸ் எம்.பி ஆகிவிட்டார் இப்படியே
போனால் தமிழ்நாட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்கும் ?
சும்மா ஒரு கற்பனை.....

இயக்குனர் பேரரசு நாமக்கல் என்ற படத்தில் ஹீரோவாக
நடிக்கிறார். ஹீரோயின் இலியானா, படத்தில் பேரரசு
மொத்தம் 136 பஞ்ச் டயலாக் பேசபோகிறார்.

சிம்பு படமும் T.R படமும் ஒரே நேரத்தில் வெளி
வரகூடாது என தயாரிப்பாளர்கள் கோரிக்கை
வைத்துள்ளனர்.இரண்டு படங்களும் ஒரே நேரத்தில்
வருவதால் ரசிகர்களுக்குள் பெரும் மோதல் வெடிக்கிறது.
இதையும் மீறி இருவரின் படமும் தீபாவளியன்று ரிலீஸ்
ஆவதால் கட்டுக்கடங்காமல் கூடும் கூட்டத்தை
கட்டுபடுத்த ராணுவத்தை வரவழைக்க போவதாக
கமிசனர் தெரிவித்து உள்ளார்.

பா.மா.க நிறுவனர் ராமதாஸ் இனிமேல் தான் சாகும்
வரை ஜெயலிதாவோடோ,கருணாநிதியோடோ
கூட்டணி வைக்க மாட்டேன் என்றும் அப்படி மீறினால்
பொதுமக்கள் தன்னையும் தன் குடும்பத்தையும்
நடுரோட்டில் கட்டி வைத்து உருட்டு கட்டையால்
அடிக்கலாம் என்று சத்தியம் செய்துள்ளார். இவர்
சொன்னால் சொன்ன சொல்லை காப்பாத்துவார்
என்பதால் அரசியல் வட்டாரம் பெரும் பரபரப்பு
அடைந்துள்ளது.

நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க தி.மு.கவுடன் கூட்டணி
அமைத்து உள்ளது.இதை பற்றி கருத்து தெரிவித்த
கருணாநிதி அவர்கள் இரண்டு இதயங்கள்
துடித்தது.. மூக்கு புடைத்தது ,, கூட்டணி மலர்ந்தது
என்று வர்ணித்தார். மேலும் அவர் கூறுகையில்
விஜயகாந்தின் கல்யாண மண்டபத்தை தாங்கள்
இடிக்கவில்லை என்றும் அது பாலம் கட்டும் போது
அங்கு வேலை செய்த ஒருவர் குழி தோண்டும் போது
கடப்பாரை தெரியாமல் மண்டபத்தின் மேல்
பட்டதால் இடிந்து விழுந்து விட்டது என்றார். அரசே
சொந்த செலவில் அதை கட்டி தரும் என்றும் உறுதி அளித்தார்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்த கோஸ்டி மோதல்
முடிவுக்கு வந்தது.இனிமேல் நாங்கள் அனைவரும்
ஒற்றுமையாக செயல்படுவோம் என்று 1334 கோஸ்டி
தலைவர்களும் ஒன்றாய் நின்று பேட்டி கொடுத்தனர்.
மேலும் அவர்கள் அனைவரும் ஒன்றாய் சிரித்தபடியே
குரூப் போட்டோவுக்கு போசும் குடுத்தனர்.(இடி இடித்தது,
மின்னல் மின்னியது, மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது).

J.K.ரித்தீசை தான் ஒரு போதும் எனக்கு போட்டியாக
நினைக்கவில்லை என்று நடிகர் சாம் ஆண்டர்சன்
தெளிவுபட அறிவித்துள்ளார்.



இப்போதைக்கு இவ்வளவுதான் படிச்சிட்டு பிடிச்சிருந்தா
உங்க கமெண்டையும் ஓட்டையும் மறக்காம பதிவு
பண்ணுங்க.

Friday, June 19, 2009

என்ன எழுதறது?

Posted by மின்னல்ப்ரியன் at 12:19 PM 0 comments
எழுதுவதுக்கு எதுவுமே தோணாம போகும் போதுதான்
இந்த மாதிரி தலைப்பு எல்லாம் வைக்க தோணும் .
எதுவுமே
தோணலன்னா எழுதாம விட வேண்டியதுதானன்னு
நீங்க கேக்கலாம் . ஆனா என்ன நம்பி 8 followers இருக்காங்க.
அண்ணன் ஏதாவது எழுதுவாரு அத படிச்சு அறிவ
வளத்துக்கலான்னு
நம்பிக்கிட்டு இருக்கற அந்த விசிறிகள
ஏமாத்த விரும்பல... அதனால எல்லாரும்
நல்லா பாத்துக்குங்க நான் எழுத போறன்...நான் எழுத போறன்.

எப்படியோ 20-20 இருந்து நீங்க ஆடுனது போதும்
போய்
புள்ள குட்டிங்கள படிக்க வைங்கடான்னு ம்மள
துரத்தி அடிச்சிட்டாங்க.நம்மளும் இங்க ஒருத்தன் சிக்கி
இருக்கான்
வாடா மாப்பிளைன்னு தோனிய போட்டு
பொளந்து
கட்டிட்டு இருக்கோம். நம்ம டீம் ஏன் இப்படி
ஆய்டுச்சுன்னு நான் பயங்கரமா யோசிச்சதல ண்ண
கண்டுபிடிச்சன்
. எல்லாத்துக்கும் காரணம் இந்த IPLதான்.
IPL
விளையாடறப்ப ரோகித் சர்மாவ எப்படி அவுட்
பண்ணறதுன்னு
Flintoff -க்கு டோனி சொல்லி இருப்பாரு,
டோனிய எப்படி அவுட் பண்ணறதுன்னு மென்டிஸ்க்கு
கங்குலி
சொல்லி இருப்பாரு. இப்படி மாறி மாறி நம்ம டீம
பத்தின
எல்லா மேட்டரையும் நம்மாளுங்களே போட்டு
குடுத்திருப்பாங்க
..இப்ப அது நம்மளுக்கே ஆப்பு வெச்சிடுச்சு..
அதனால
நான் என் சொல்றன்னா IPL மேட்ச்
பாரின் players விளையாடகூடாது.(நீ பயங்கரமா யோசிச்சது
இததானவான்னு யாரும் யோசிக்காதிங்க. )

......................................................................................................................................

இன்னொரு முக்கியமான மேட்டர் என்னன்னா நான்
எழுதற பதிவ என்னால Tamilish ஈசியா இணைக்க முடியுது.
ஆனா தமிழ் மணத்துல இணைக்க முடியல.. font problemன்னு
Error msg வருது. நான் இதுவரைக்கும் டைப் பண்ணறது எல்லாமே
நம்ம bloggerதான். தங்கிலிஷ்ல டைப் பண்ணா
தமிழா மாறிடும். இத பத்தி யாரவது கொஞ்சம் விளக்கமா
கிளாஸ்எடுத்திங்கன்னா தூங்காம கேக்கறன். கொஞ்சம்
கருணை காட்டுங்க உங்க computer காலா காலத்துக்கும் வைரஸ்
தொல்ல இல்லாம நல்லா இருக்கும்.

Saturday, April 11, 2009

எப்படி எல்லாம் யோசிக்கறாங்கய்யா!

Posted by மின்னல்ப்ரியன் at 12:03 PM 1 comments
இந்த விளம்பரத்த பாருங்க.. உங்க சிரிப்புக்கு
நான் கியாரண்டி ....

Saturday, April 4, 2009

மரியாதை -- ட்ரைலர் விமர்சனம்

Posted by மின்னல்ப்ரியன் at 3:02 PM 3 comments

2000 -ல் வானத்தை போல... 2009 -- ல் மரியாதை
என வானத்தை போல படத்தின் ஒரு காட்சியோடு
ட்ரைலர் துவங்கும் போதே 9 வருடங்களுக்கு பிறகு
மனதுக்குள் ஒரு இனம் புரியா பயம் பரவ தொடங்குகிறது.
டைட்டில் முடிந்ததும் அப்பா விஜயகாந்த் செவ்வானத்தின்
பின்னணியில் கம்பீரமாக நடந்து வரும் போது நமக்கு
அப்படியே ரிமோட்டை கீழே போட்டுவிட்டு எழுந்து
கும்பிட வேண்டும் போல் தோன்றுவது அந்த கேரக்டருக்கு
கிடைத்த வெற்றி.

இப்படி மெதுவாய் ஆரம்பிக்கும் ட்ரைலர் அடுத்தடுத்த
காட்சிகளில் பாசம்,அன்பு ,நேசம், சோகம்,காமெடி,
செண்டிமெண்ட்
,ஆக்சன்,டுயட் என எக்ஸ்பிரஸ் வேகம்
எடுக்கிறது
. "யார் வந்தது" பாடலில் கேப்டன் மீனாவுடன்
டான்ஸ் ஆடும்போது மீனா கேப்டனுக்கு அக்கா போல்
இருப்பது
கொஞ்சம் நெருடல். ஆனால் இந்த குறையை
அடுத்து
மீரா ஜாஸ்மினுடன் ஆடும் மூன்று டூயட் நிவர்த்தி
செய்கிறது
. சீனா, ஸ்பெயின் என பாரின் லொகேசன்களில்
இருவரும்
ஆடி பாடும் போது நமக்கு அப்படியே ஒரு இருபது
வயது
குறைந்து குழந்தை பருவத்துக்கே சென்றது போல்
ஒரு
பீலிங். நானெல்லாம் பீடிங் பாட்டில் வாங்கி
ஒரு வாரமாய் பால் குடித்து கொண்டு இருக்கிறேன் என்றால்
பாருங்களேன் . அதிலும் " இன்பமே " ரீமிக்ஸ் பாடலில்
இருவருக்கும் கெமிஸ்ட்ரி செமையாய் வொர்க் அவுட் ஆகிறது!.
வழக்கமாக ஹீரோ , ஹீரோயின்களுக்கு மட்டும் டூயட்
வைக்கும் தமிழ் சினிமாவில் தாத்தாவிற்கும், பேத்திக்கும்
3 டூயட் வைத்து டைரக்டர் புரட்சி செய்திருக்கிறார்.

அப்பா விஜயகாந்துக்கு ஜோடி அம்பிகா. நாலு பிரேம் வந்தாலும்
ரெண்டு பேரும் கொஞ்சம் கூட நடிக்கல. அப்படியே புருஷன்,
பொண்டாட்டியா வாழ்ந்திருக்காங்க. வயசான கெட்டப்
அம்பிகாவுக்கு நல்லா பொருந்துது. கேப்டனுக்குதான் பாவம்
மேக்கப்பயும் மீறி அவரு இளமை பளிச்சுன்னு வெளில தெரியுது.
மேக்கப்ல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

அடுத்து குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் வசனம் ,
"வாய்க்கு ருசியா சமைக்கன்னுன்னா சமையக்காரி போதும்,
சம்சாரம் எதுக்குன்னு" அம்பிகாகிட்ட சொல்லும் போதும்
"மீன் பிடிக்கறவன் சில நேரம் தூங்கிகிட்டே வலைய வீசுவான்
அதுல முழிச்சுட்டு இருக்கற மீன் வந்து மாட்டிக்கும் அதுக்கு
பேர்தாம்பா விதின்னு" பையன் விஜயகாந்துக்கிட்ட சொல்லும்
போதும் வசனங்கள் அப்படியே நம்ம வாயிக்குள்ள கைய
விட்டு நெஞ்சுல எழுதுன மாதிரி மனசுல காப்பி ஆய்டுது. என்ன
ஒன்னு இந்த வசனங்கள் வர இடத்துல எல்லாம் வழக்கம்
லாலா ....லாலா ....லாலா ...லாலான்னு RR வந்து இருந்தா
இன்னும் நல்லா இருந்திருக்கும். என்ன ஆச்சு விக்ரமன் சார்
உங்களுக்கு? மறந்துட்டிங்களா?

ரமேஷ் கண்ணா, நாசர், தலைவாசல் விஜய், சம்பத் என நிறைய
நட்சத்திரங்கள் தலையை காட்டிவிட்டு செல்கிறார்கள். ரமேஷ்
கண்ணா காமெடி என்ற பெயரில் சில இடங்களில் கடுப்பேற்றுகிறார்.
கேப்டனுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் , செண்டிமெண்ட், டூயட்
என படம் முழுக்க ஏகப்பட்ட காமெடியை வைத்து
கொண்டு தனியாக ரமேஷ் கண்ணா வேறு? ட்ரைலர் முழுதும்
பாத்தாலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷயம் இதில்
கேப்டன் டபுள் ஆக்சனா, ட்ரிபிள் ஆக்சனா என்பதுதான்.
மீனாவோடு டூயட் பாடும் கேப்டனும், மீரா ஜாஸ்மினோடு
டூயட் பாடும் கேப்டனும் ஒரு மாதிரி இருப்பதுதான் இந்த
குழப்பத்துக்கு காரணம். இருவரையும் பள்ளிக்கூட
மாணவர்கள் போல் காட்டியதுக்கு பதிலாய் ஒருவரை
கல்லூரி மாணவர் போல் காட்டி இருக்கலாம்.

இப்படி சில நிறை, குறைகள் இருந்தாலும் ட்ரைலர் முடியும்
போது ஒரு 1000 ரூபாய்க்கு டாப் அப் பண்ணி அண்ணன் ,
தம்பி, அக்கான்னு சொந்த பந்தத்துக்கெல்லாம் போன் போட்டு
பேசனும் போல ஒரு உணர்வை ஏற்படுத்தி நமக்கு தண்டசெலவு
வைப்பதில் இயக்குனர் வெற்றி கண்டு இருக்கிறார்.

பின் குறிப்பு: எங்கள் மீரா ஜாஸ்மின் ரசிகர் மன்றத்தின் சார்பில்
அவருக்கு எதிர் காலத்தில் இது போன்ற கொடுமையான
துன்பங்கள் நேரக்கூடாது என்று எல்லோரும் நாளை
10- ல் இருந்து 10.05 வரை ஒரு 5 நிமிடம்
பிரார்த்தனை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.


கொஞ்சம் மொக்கதான் இருந்தாலும் பாத்து ஓட்டும்
கமெண்டும் போட்டுடுங்க.

Monday, March 30, 2009

" இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" உண்மை என்னன்னா?

Posted by மின்னல்ப்ரியன் at 4:13 PM 2 comments
முதல்ல இந்த பதிவோட ட்ரைலர்--- குங்குமம் இந்த
வாரம் சன் டிவிக்கு போட்டி கிங் டிவியா? மறுக்கிறார்
மாறன். கிங் டிவிக்கு போட்டி கிங் டிவி 2 தான் மார்
தட்டுகிறார் NKKP.ராஜா. இந்த இதழுடன்
இலவச கலர் டிவி மற்றும் இரண்டு ரூபாய் அரிசி.


இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக"
அப்படின்னு சன் டிவியில ( இப்ப கலைஞர் டிவிலயும்)
போடற படம் எல்லாம் உண்மையிலேயே இந்திய
தொலைக்காட்சிகளில்
முதல் முறையாகத்தான் போடறாங்கன்னு
நீங்க நினச்சா நீங்க இன்னும் வளரனும் தம்பி .(உங்க அண்ணன் கிட்ட சொல்லுங்க குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி தருவாரு).

உண்மை என்னன்னா நீங்க பாக்கறது முதல் முறை இல்ல.
ஒரு 20, 25வது முறைதான் நீங்க பாக்கிறிங்க. தொலைக்காட்சி
வரலாற்றுல முதல் முறையா எங்க ஊரு கிங் டிவில முதல்ல
பாக்கறது நாங்கதான். ( கிங் டிவி மற்றும் கிங் டிவி 2 ஈரோடு MLA
முன்னாள் அமைச்சர் NKKP. ராஜாவால் நடத்தப்படுகிறது.)
நாங்க கிங் டிவில பாத்து சலிச்ச படங்களைத்தான் நீங்க
சன் டிவில முதல் முறையா பாக்கிறிங்க. என்ன பண்ணறது
உங்க கொடுப்பின அவ்வளவுதான். இதுக்குதான் ஈரோடு
மாவட்டத்துல பொறக்கனும். விடுங்க இப்ப பீல் பண்ணி
என்ன பிரயோஜனம்.

கலைஞர் இலவசமா டிவி குடுத்துட்டாரு ஓகே. படம் யாரு
போடறதுன்னு தொகுதி மக்கள் யாரும் கேட்டுடகூடாதுனு
ரெண்டு டிவி சேனல் ஆரம்பிச்சு புது புது படமா காட்ற எங்க
MLA வோட நல்ல மனசு உங்க யாருக்காவது வருமாய்யா?
பாவம் படத்துக்கு இடையில கொஞ்சமா விளம்பரம் போட்டு
கொஞ்சமா சம்பாதிக்கற அவர போய் ஆள கடத்துனாருன்னு
சொல்லி இருந்த அமைச்சர் பதவியும் புடிங்கிட்டிங்க. அப்படி
இருந்தும் அவரு எங்களுக்காக ரைட்ஸ் பத்தி எல்லாம்
கவலபடாம இன்னிக்கு ரிலீஸ் ஆகற படத்த இன்னிக்கே
போட்டு காட்டறாரு. அடுத்த எலக்சன்லயும் அவரையே
MLA ஆக்கி எந்திரன்ல இருந்து மருதநாயகம் வரைக்கும்
ரிலீஸ்க்கு முன்னாடியே பாக்கல நாங்க ஈரோட்டுக்காரங்க
இல்ல!

பின் குறிப்பு :
கொஞ்ச நாள் முன்னால் ஜுனியர் விகடனில் இதை
பற்றிய செய்தி வெளியாகி இருந்தது. நிருபர் கேட்ட
கேள்விக்கு இது தன் கவனத்துக்கு வரவில்லை
என்றும் இனி இது போல் நடக்காது என்றும் ராஜா
பதில் சொல்லி
இருந்தார். போன வாரம் நான் ஊருக்கு
போயிருந்தப்ப கிங் டிவில சந்தோஷ் சுப்பிரமணியம்
ஓடிட்டு இருந்துது. கீழ ஓடற விளம்பரத்த பாத்தா செம
அதிர்ச்சி... ஜுனியர் விகடன் விளம்பரம் ஓடிட்டு
இருந்துது. என்ன பண்ணறது பாத்துட்டு சிரிக்க
வேண்டியதுதான்.


படித்துவிட்டு பிடித்திருந்தால் உங்கள் கருத்தையும்,
ஓட்டையும் தவறாமல் பதிவு செய்யவும்.

Friday, March 27, 2009

பாராளுமன்ற தேர்தலும் பட்டய கிளப்பும் சலுகைகளும் .

Posted by மின்னல்ப்ரியன் at 2:17 PM 4 comments
முக்கிய அறிவிப்பு :
இங்கு குறிப்பிடபட்டிருக்கும் ஆலோசனைகளை
கலைஞர், அம்மா, வைகோ, திருமா, சோனியா, அத்வானி
என யார் வேண்டுமானாலும் எந்த கட்சி வேண்டுமானாலும்
பயன்படுத்தி கொள்ளலாம்.கட்டணம் எதுவும் கிடையாது.
மேலும் idea- சொன்னா திருடிடுவாங்க என்று சொல்லும்
விஜயகாந்த் போன்றோரின் சுயநல போக்கும் எனக்கு
கிடையாது என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன்.

இனி ஆலோசனைகள் :

1. நீங்க நோட்டு குடுக்க போகும் போது ஸாரி... ஸாரி ..
நீங்க ஓட்டு கேட்க போகும் போது சும்மா போயி எங்க ஆட்சியின் சாதனைகளை பாருங்கள்ன்னு எல்லாம் மொக்க போடறத
விட்டுட்டு " நீங்க எங்களுக்கு ஓட்டு போட்டா ஓட்டு போடற
உங்க எல்லாரு பேரையும் குலுக்கி போட்டு நாலு பேருக்கு
மாநில அமைச்சர் போஸ்டும், பம்பர் பரிசா ஒருத்தருக்கு
மத்திய அமைச்சர் போஸ்டும் தருவோம்னு ஒரு பிட்ட
போடுங்க " அப்புறம் பாருங்க அந்த முட்டாள் ஜனங்க
பூரா பேராசைல ஓட்ட உங்களுக்கு போட்டுடுங்க.

2. ரெண்டு ஏக்கர் நிலமல்லாம் இப்ப வொர்க் அவுட் ஆகாது.
என்ன பண்ணுங்க ஓட்டு கேட்க போகும் போதே எல்லார்
கைலயும் ரெண்டு ரெண்டு பட்டாவ குடுத்து " அய்யா
உங்களுக்கு நிலாவுல 500 ஏக்கரும் , செவ்வாயில 1000
ஏக்கரும் ஒதுக்கி இருக்கோம், நீங்க நாளைக்கே கூட போயி
விவசாயம் பண்ணலாம்னு ஒரு மேட்டர போடுங்க. பய
புள்ளைக முடிஞ்சா போயி விவசாயம் பாத்து பொழச்சு
போறானுங்க.

3. 18 வயசுக்கு மேலஇருக்கற கல்லூரி மாணவர்கள்
யாருக்கும் எக்ஸாம் கிடையாது , பாஸ், பெயில் எதுவும்
கிடையாது, வருசத்துக்கு ரெண்டு நாள் காலேஜ் போனா
போதும். மீதி நாள் நீங்க பொழுதைபோக்க அரசே இலவச
சினிமா பாஸ் குடுக்கும். அது மட்டும் இல்லாம நீங்க படிச்சு
முடிச்ச உடனே ஒபாமாகிட்ட சொல்லி உங்களுக்கு எல்லாம்
அமெரிக்காவுல வேல வாங்கி தருவோம்ன்னு சொல்லி
பாருங்க மாணவர் ஓட்டு எல்லாம் உங்களுக்குத்தான்.

4. இப்ப குடுத்து இருக்கற சின்ன டிவிய எக்சேஞ்ல
எடுத்துக்கிட்டு புதுசா LCD Tv யும் கூடவே சன் டைரக்ட்
DTH சேர்த்து குடுக்கலாம். அது மட்டுமில்லாம பெண்
வாக்காளர்கள கவர சீரியலுக்கின்னே ஒரு 24 மணி
நேர தனி சேனல் ஆரம்பிக்கலாம் .

5. நாங்க ஆட்சிக்கு வந்தா அப்பப்ப எங்க ஆளுங்கள
ராஜினாமா பண்ண வெச்சு அடிக்கடி இடைத்தேர்தல்
நடத்தி அண்டா, குண்டா , அரிசி, பருப்பு செல்போன்
உட்பட உங்கள் இல்லத்துக்கு தேவையான அனைத்து
பொருட்களையும் இனாமா தருவோம்னு ஒரு
வாக்குறுதி குடுங்க போதும்.

6. மூத்த குடிமக்களுக்கு டாஸ்மாக் சரக்கில் 70%
தள்ளுபடி, பெண்களுக்கு ஜவுளி கடைகளில் 33%
சிறப்பு சலுகை. புதுசா கல்யாணம் செய்யறவங்களுக்கு
ஊட்டி அல்லது கொடைக்கானலில் இலவச தேனிலவு.
காதலர்களுக்கு மாதம் 1000 ரூபாய்க்கு இலவச டாப் அப்
போன்ற சின்ன சின்ன சலுகைகளையும் அறிவிக்கலாம்.

7. இறுதியாய் விவசாயிகள் மட்டுமின்றி நாட்டில் உள்ள
அத்தனை பேரும் வங்கியில், மார்வாடி கடையில், பக்கத்து
வீட்டுக்காரரிடம், பண்ணையாரிடம் என எங்கு கடன் வாங்கி
இருந்தாலும், எவ்வளவு கடன் வாங்கி இருந்தாலும் அத்தனையும்
தள்ளுபடி என்று அறிவிப்பதோடு போனஸாக பெண்கள்
பக்கத்து வீட்டில் அவசரத்துக்கு வாங்கிய காபி பொடிக்கும்
சேர்த்து தள்ளுபடி அறிவியுங்கள். அத்தனை ஓட்டும்
உங்களுக்கே ....நாளை நமதே...நாநூற்று முப்பத்தி நாலும் நமதே.


சலுகைகள் தொடரும் ......

பின்குறிப்பு : படித்து விட்டு tamilish-ல் ஓட்டு போடுபவர்களுக்கும்
விரைவில் சலுகைகள் அறிவிக்கலாம் என்று இருக்கிறேன்.


படித்து விட்டு பிடித்திருந்தால் உங்கள் கருத்தையும்
தவறாமல் பதிவு செய்யவும்.

Friday, October 10, 2008

மின்சாரம் இல்லாமல் வாழ்வது எப்படி?

Posted by மின்னல்ப்ரியன் at 1:13 PM 4 comments

மின்வெட்டு துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தரும் 6 அற்புத யோசனைகள்:

1.இருட்டில் வெட்டியாக பொழுதை போக்காமல் தமிழக மக்கள் எல்லோரும் மின்சாரம் வேண்டி அமெரிக்க அதிபர் ஜார்ஜ். புஷுக்கு sms அனுப்பலாம் , டைம் பாஸ் ஆவதோடு உங்கள் விரல்களுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும் .

2. யோகா , தியானம் எல்லாம் கத்துக்கரதால உங்க உள்ளத்துல ஒரு ஒளி வருமாம் , அந்த வெளிச்சத்துல வாழ கத்துக்கங்க .

3. அலுவலகத்தில் எல்லோரும் ஜாலியாக உட்கார்ந்து கொண்டு உங்கள் பகுதியில் மின்சாரம் இருந்த 1 மணி நேரத்தில் கலைஞர் டிவியில் நீங்கள் பார்த்த சீரியல் கதைகளை ஒருவருக்கொருவர் பேசி மகிழுங்கள் .

4.
எல்லா ஊர்லயும் கழக கண்மணிகள் மின்சாரம் வருமா? வராதான்னு தினமும் பட்டிமன்றம் நடத்துவாங்க , வரும் ஆனா வராதுன்னு நடுவர் சொல்லற தீர்ப்ப கேட்டு நீங்க சிரிச்சு மகிழலாம் .

5.
கடவுள் இருக்கிறார் ,கரன்டார் இருக்கிறார் என்கிறார் அம்மையார் ,இரண்டுமே கண்ணுக்கு தெரிவதில்லை , அதை நம்புவது மடமை , இதுவே நம் கொள்கை என முரசொலியில் கலைஞர் எழுதும் கவிதைகளை படித்து நீங்கள் வாழ்வாங்கு வாழலாம் .

6.
பொழுது போகவில்லை என்றால் ஊரெங்கும் உள்ள மின்கம்பிகளில் கொக்கி மாட்டி ஜாலியாக ஊஞ்சல் விளையாடுங்கள் .