Monday, June 22, 2009

தமிழ்நாட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்கும் ?

Posted by மின்னல்ப்ரியன் at 4:29 PM
விஜய் கட்சி (மக்கள் இயக்கம் !) ஆரம்பித்துவிட்டார்..
அண்ணன் J.K.ரித்தீஸ் எம்.பி ஆகிவிட்டார் இப்படியே
போனால் தமிழ்நாட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்கும் ?
சும்மா ஒரு கற்பனை.....

இயக்குனர் பேரரசு நாமக்கல் என்ற படத்தில் ஹீரோவாக
நடிக்கிறார். ஹீரோயின் இலியானா, படத்தில் பேரரசு
மொத்தம் 136 பஞ்ச் டயலாக் பேசபோகிறார்.

சிம்பு படமும் T.R படமும் ஒரே நேரத்தில் வெளி
வரகூடாது என தயாரிப்பாளர்கள் கோரிக்கை
வைத்துள்ளனர்.இரண்டு படங்களும் ஒரே நேரத்தில்
வருவதால் ரசிகர்களுக்குள் பெரும் மோதல் வெடிக்கிறது.
இதையும் மீறி இருவரின் படமும் தீபாவளியன்று ரிலீஸ்
ஆவதால் கட்டுக்கடங்காமல் கூடும் கூட்டத்தை
கட்டுபடுத்த ராணுவத்தை வரவழைக்க போவதாக
கமிசனர் தெரிவித்து உள்ளார்.

பா.மா.க நிறுவனர் ராமதாஸ் இனிமேல் தான் சாகும்
வரை ஜெயலிதாவோடோ,கருணாநிதியோடோ
கூட்டணி வைக்க மாட்டேன் என்றும் அப்படி மீறினால்
பொதுமக்கள் தன்னையும் தன் குடும்பத்தையும்
நடுரோட்டில் கட்டி வைத்து உருட்டு கட்டையால்
அடிக்கலாம் என்று சத்தியம் செய்துள்ளார். இவர்
சொன்னால் சொன்ன சொல்லை காப்பாத்துவார்
என்பதால் அரசியல் வட்டாரம் பெரும் பரபரப்பு
அடைந்துள்ளது.

நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க தி.மு.கவுடன் கூட்டணி
அமைத்து உள்ளது.இதை பற்றி கருத்து தெரிவித்த
கருணாநிதி அவர்கள் இரண்டு இதயங்கள்
துடித்தது.. மூக்கு புடைத்தது ,, கூட்டணி மலர்ந்தது
என்று வர்ணித்தார். மேலும் அவர் கூறுகையில்
விஜயகாந்தின் கல்யாண மண்டபத்தை தாங்கள்
இடிக்கவில்லை என்றும் அது பாலம் கட்டும் போது
அங்கு வேலை செய்த ஒருவர் குழி தோண்டும் போது
கடப்பாரை தெரியாமல் மண்டபத்தின் மேல்
பட்டதால் இடிந்து விழுந்து விட்டது என்றார். அரசே
சொந்த செலவில் அதை கட்டி தரும் என்றும் உறுதி அளித்தார்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்த கோஸ்டி மோதல்
முடிவுக்கு வந்தது.இனிமேல் நாங்கள் அனைவரும்
ஒற்றுமையாக செயல்படுவோம் என்று 1334 கோஸ்டி
தலைவர்களும் ஒன்றாய் நின்று பேட்டி கொடுத்தனர்.
மேலும் அவர்கள் அனைவரும் ஒன்றாய் சிரித்தபடியே
குரூப் போட்டோவுக்கு போசும் குடுத்தனர்.(இடி இடித்தது,
மின்னல் மின்னியது, மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது).

J.K.ரித்தீசை தான் ஒரு போதும் எனக்கு போட்டியாக
நினைக்கவில்லை என்று நடிகர் சாம் ஆண்டர்சன்
தெளிவுபட அறிவித்துள்ளார்.



இப்போதைக்கு இவ்வளவுதான் படிச்சிட்டு பிடிச்சிருந்தா
உங்க கமெண்டையும் ஓட்டையும் மறக்காம பதிவு
பண்ணுங்க.

12 comments on "தமிழ்நாட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்கும் ?"

on June 22, 2009 at 7:36 PM said...

ஹா ஹா ஹா

செம காமெடி தல!
கல்யாணமண்டபம் தெரியாம கடப்பாரை பட்டு இடிஞ்சிருச்சா!

on June 22, 2009 at 8:14 PM said...

அண்ணா சூப்பர்ங்கண்ணா....ஆனால் கடைசி பஞ்சை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...

on June 22, 2009 at 10:13 PM said...

செம நக்கலுங்கண்ணா உங்களுக்கு... பார்த்து வீட்டுக்கு ஆட்டோ வராம இருந்தா சரிதான்......

on June 23, 2009 at 3:57 PM said...

//கருணாநிதி அவர்கள் இது இரண்டு இதயங்கள்
துடித்தது.. மூக்கு புடைத்தது ,, //

//அங்கு வேலை செய்த ஒருவர் குழி தோண்டும் போது
கடப்பாரை தெரியாமல் மண்டபத்தின் //

//1334 கோஸ்டி
தலைவர்களும் ஒன்றாய் நின்று பேட்டி கொடுத்தனர்.
//


வாய் விட்டு சிரித்தேன் நண்பா
சூப்பர்

on June 23, 2009 at 5:40 PM said...

It is a good imagination... Hilarious

on June 23, 2009 at 6:23 PM said...

////விஜயகாந்தின் கல்யாண மண்டபத்தை தாங்கள்
இடிக்கவில்லை என்றும் அது பாலம் கட்டும் போது
அங்கு வேலை செய்த ஒருவர் குழி தோண்டும் போது
கடப்பாரை தெரியாமல் மண்டபத்தின் மேல்
பட்டதால் இடிந்து விழுந்து விட்டது////

நல்ல காமெடி.சொன்னாலும் சொல்லுவாரு...

on June 23, 2009 at 6:27 PM said...

உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

on June 23, 2009 at 8:29 PM said...

Super..

on June 24, 2009 at 10:27 AM said...

arumayana nagaisuvai.valtukkal

Anonymous said...

JK Ritheesh & Sam Anderson..Enna oru comparision...mudiyala...Sam Anderson-a nenaicha siripu sirippa varuthu..

-Raj

on June 24, 2009 at 3:51 PM said...

heheeeeeeheeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

on June 24, 2009 at 4:17 PM said...

Well imagined ,Nothing surprise they come true,keep it up,,, thaminaatulé yetuvenunaalum nadakkalaam!!!!!!