எழுதுவதுக்கு எதுவுமே தோணாம போகும் போதுதான்
இந்த மாதிரி தலைப்பு எல்லாம் வைக்க தோணும் .
எதுவுமே தோணலன்னா எழுதாம விட வேண்டியதுதானன்னு
நீங்க கேக்கலாம் . ஆனா என்ன நம்பி 8 followers இருக்காங்க.
அண்ணன் ஏதாவது எழுதுவாரு அத படிச்சு அறிவ
வளத்துக்கலான்னு நம்பிக்கிட்டு இருக்கற அந்த விசிறிகள
ஏமாத்த விரும்பல... அதனால எல்லாரும்
நல்லா பாத்துக்குங்க நான் எழுத போறன்...நான் எழுத போறன்.
எப்படியோ 20-20ல இருந்து நீங்க ஆடுனது போதும்
போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்கடான்னு நம்மள
துரத்தி அடிச்சிட்டாங்க.நம்மளும் இங்க ஒருத்தன் சிக்கி
இருக்கான் வாடா மாப்பிளைன்னு தோனிய போட்டு
பொளந்து கட்டிட்டு இருக்கோம். நம்ம டீம் ஏன் இப்படி
ஆய்டுச்சுன்னு நான் பயங்கரமா யோசிச்சதல ஒண்ண
கண்டுபிடிச்சன். எல்லாத்துக்கும் காரணம் இந்த IPLதான்.
IPL ல விளையாடறப்ப ரோகித் சர்மாவ எப்படி அவுட்
பண்ணறதுன்னு Flintoff -க்கு டோனி சொல்லி இருப்பாரு,
டோனிய எப்படி அவுட் பண்ணறதுன்னு மென்டிஸ்க்கு
கங்குலி சொல்லி இருப்பாரு. இப்படி மாறி மாறி நம்ம டீம
பத்தின எல்லா மேட்டரையும் நம்மாளுங்களே போட்டு
குடுத்திருப்பாங்க..இப்ப அது நம்மளுக்கே ஆப்பு வெச்சிடுச்சு..
அதனால நான் என்ன சொல்றன்னா IPL மேட்ச்ல
பாரின் players விளையாடகூடாது.(நீ பயங்கரமா யோசிச்சது
இததானவான்னு யாரும் யோசிக்காதிங்க. )
......................................................................................................................................
இன்னொரு முக்கியமான மேட்டர் என்னன்னா நான்
எழுதற பதிவ என்னால Tamilishல ஈசியா இணைக்க முடியுது.
ஆனா தமிழ் மணத்துல இணைக்க முடியல.. font problemன்னு
Error msg வருது. நான் இதுவரைக்கும் டைப் பண்ணறது எல்லாமே
நம்ம bloggerலதான். தங்கிலிஷ்ல டைப் பண்ணா
தமிழா மாறிடும். இத பத்தி யாரவது கொஞ்சம் விளக்கமா
கிளாஸ்எடுத்திங்கன்னா தூங்காம கேக்கறன். கொஞ்சம்
கருணை காட்டுங்க உங்க computer காலா காலத்துக்கும் வைரஸ்
தொல்ல இல்லாம நல்லா இருக்கும்.
Friday, June 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments on "என்ன எழுதறது?"
Post a Comment