Monday, March 30, 2009

" இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" உண்மை என்னன்னா?

Posted by மின்னல்ப்ரியன் at 4:13 PM
முதல்ல இந்த பதிவோட ட்ரைலர்--- குங்குமம் இந்த
வாரம் சன் டிவிக்கு போட்டி கிங் டிவியா? மறுக்கிறார்
மாறன். கிங் டிவிக்கு போட்டி கிங் டிவி 2 தான் மார்
தட்டுகிறார் NKKP.ராஜா. இந்த இதழுடன்
இலவச கலர் டிவி மற்றும் இரண்டு ரூபாய் அரிசி.


இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக"
அப்படின்னு சன் டிவியில ( இப்ப கலைஞர் டிவிலயும்)
போடற படம் எல்லாம் உண்மையிலேயே இந்திய
தொலைக்காட்சிகளில்
முதல் முறையாகத்தான் போடறாங்கன்னு
நீங்க நினச்சா நீங்க இன்னும் வளரனும் தம்பி .(உங்க அண்ணன் கிட்ட சொல்லுங்க குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி தருவாரு).

உண்மை என்னன்னா நீங்க பாக்கறது முதல் முறை இல்ல.
ஒரு 20, 25வது முறைதான் நீங்க பாக்கிறிங்க. தொலைக்காட்சி
வரலாற்றுல முதல் முறையா எங்க ஊரு கிங் டிவில முதல்ல
பாக்கறது நாங்கதான். ( கிங் டிவி மற்றும் கிங் டிவி 2 ஈரோடு MLA
முன்னாள் அமைச்சர் NKKP. ராஜாவால் நடத்தப்படுகிறது.)
நாங்க கிங் டிவில பாத்து சலிச்ச படங்களைத்தான் நீங்க
சன் டிவில முதல் முறையா பாக்கிறிங்க. என்ன பண்ணறது
உங்க கொடுப்பின அவ்வளவுதான். இதுக்குதான் ஈரோடு
மாவட்டத்துல பொறக்கனும். விடுங்க இப்ப பீல் பண்ணி
என்ன பிரயோஜனம்.

கலைஞர் இலவசமா டிவி குடுத்துட்டாரு ஓகே. படம் யாரு
போடறதுன்னு தொகுதி மக்கள் யாரும் கேட்டுடகூடாதுனு
ரெண்டு டிவி சேனல் ஆரம்பிச்சு புது புது படமா காட்ற எங்க
MLA வோட நல்ல மனசு உங்க யாருக்காவது வருமாய்யா?
பாவம் படத்துக்கு இடையில கொஞ்சமா விளம்பரம் போட்டு
கொஞ்சமா சம்பாதிக்கற அவர போய் ஆள கடத்துனாருன்னு
சொல்லி இருந்த அமைச்சர் பதவியும் புடிங்கிட்டிங்க. அப்படி
இருந்தும் அவரு எங்களுக்காக ரைட்ஸ் பத்தி எல்லாம்
கவலபடாம இன்னிக்கு ரிலீஸ் ஆகற படத்த இன்னிக்கே
போட்டு காட்டறாரு. அடுத்த எலக்சன்லயும் அவரையே
MLA ஆக்கி எந்திரன்ல இருந்து மருதநாயகம் வரைக்கும்
ரிலீஸ்க்கு முன்னாடியே பாக்கல நாங்க ஈரோட்டுக்காரங்க
இல்ல!

பின் குறிப்பு :
கொஞ்ச நாள் முன்னால் ஜுனியர் விகடனில் இதை
பற்றிய செய்தி வெளியாகி இருந்தது. நிருபர் கேட்ட
கேள்விக்கு இது தன் கவனத்துக்கு வரவில்லை
என்றும் இனி இது போல் நடக்காது என்றும் ராஜா
பதில் சொல்லி
இருந்தார். போன வாரம் நான் ஊருக்கு
போயிருந்தப்ப கிங் டிவில சந்தோஷ் சுப்பிரமணியம்
ஓடிட்டு இருந்துது. கீழ ஓடற விளம்பரத்த பாத்தா செம
அதிர்ச்சி... ஜுனியர் விகடன் விளம்பரம் ஓடிட்டு
இருந்துது. என்ன பண்ணறது பாத்துட்டு சிரிக்க
வேண்டியதுதான்.


படித்துவிட்டு பிடித்திருந்தால் உங்கள் கருத்தையும்,
ஓட்டையும் தவறாமல் பதிவு செய்யவும்.

2 comments on "" இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" உண்மை என்னன்னா?"

on March 31, 2009 at 7:35 PM said...

கிங் டீவீ சென்னையில தெரியுதா?
அது ஈரோடுல மட்டும்னு நான் நினைச்சிகிட்டு இருக்கேன்

on March 31, 2009 at 7:37 PM said...

ஓ ஈரோடு வந்ததிருந்த போதா!

போன வாரம் அபியும் நானும்!

கூடவே கரண் டீவீ
எம்.சி.என் டீவின்னு இரவான புதுப்படம் தான்!