Monday, March 2, 2009

SMS -- நீங்க கருத்து சொன்னீ ங்களா ?

Posted by மின்னல்ப்ரியன் at 1:54 PM

நேத்து சாந்திசிவா மனசுல சக்தி பாக்க
போயிருந்தன்
.இண்டர்வெல்ல காபிய குடிச்சுட்டு
dust bin தேடுனப்பதான் இது கண்ல பட்டுச்சு,
உங்க
பீலிங்க இங்க கொட்டுங்கன்னு
எழுதி ஒரு ஓரமா இந்த box வெச்சிருந்தாங்க,
பாத்ததும்
இது நல்ல idea-வா இருக்கே
எத்தன பேர்தான் பீலிங்க்ச கொட்டி இருக்காங்கன்னு
எட்டி பாத்தன், உள்ள வெறும் கோக், காபி கப்புன்னு
குப்பையா
கிடந்துச்சு!

எது dust bin எது comment box-ன்னு வித்தியாசம்
கூட
தெரியாம இப்படி குப்பையா போட்டு வெச்சு
இருக்கானுங்களேன்னு நான் feel பண்றத பாத்துட்டு
என்
பிரண்ட் சொன்னான், ' மச்சி நம்மாளுங்க
வெவரமானவனுங்க படம் எப்படின்னு
சிம்பாலிக்கா காட்டிட்டு போயிருக்கானுங்க'
என்று
சொன்னபடியே அவனும் தன்
கையில் வைத்திருந்த காபி கப்பை அதுக்குள்
போட்டுவிட்டு
என்னை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு
சிரித்தான்
. ம்ம்ம்... ஒவ்வொரு மனுசனுக்கும்
ஒவ்வொரு பீலிங் ... படத்த பத்துன உங்க பீலிங்க
அப்படியே
கமெண்டா போட்டுருங்க.

2 comments on "SMS -- நீங்க கருத்து சொன்னீ ங்களா ?"

on March 2, 2009 at 6:09 PM said...

kalakkal comment by yr friend


Senthil, Bahrain

Anonymous said...

சரியாக சொன்னிர்கள் , வேறு படமாய் இருந்தால் "முதல் பாதி சவ சவ , இரண்டாம் பாதி மொக்கை " ஏன் பிரித்து கிழிப்பவர்கள் , தங்கள் படத்தை ஆ வீ இல் விமர்சனத்திற்கு எடுத்ததே தவறு , இந்த லட்சனத்திற்கு ஆஹா ஓஹ்ஹோ ன்னு மதிப்பெண் வேற.

நேற்று தான் பார்தேர்ன் ஒரு பாடலின் ஆர்ரம்பம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது தெரியுமா ,

கதாநாயகியின் low skirt in low angle இல் இருந்து,

ஊருக்கு தான் உபதேசம்