Saturday, April 4, 2009

மரியாதை -- ட்ரைலர் விமர்சனம்

Posted by மின்னல்ப்ரியன் at 3:02 PM

2000 -ல் வானத்தை போல... 2009 -- ல் மரியாதை
என வானத்தை போல படத்தின் ஒரு காட்சியோடு
ட்ரைலர் துவங்கும் போதே 9 வருடங்களுக்கு பிறகு
மனதுக்குள் ஒரு இனம் புரியா பயம் பரவ தொடங்குகிறது.
டைட்டில் முடிந்ததும் அப்பா விஜயகாந்த் செவ்வானத்தின்
பின்னணியில் கம்பீரமாக நடந்து வரும் போது நமக்கு
அப்படியே ரிமோட்டை கீழே போட்டுவிட்டு எழுந்து
கும்பிட வேண்டும் போல் தோன்றுவது அந்த கேரக்டருக்கு
கிடைத்த வெற்றி.

இப்படி மெதுவாய் ஆரம்பிக்கும் ட்ரைலர் அடுத்தடுத்த
காட்சிகளில் பாசம்,அன்பு ,நேசம், சோகம்,காமெடி,
செண்டிமெண்ட்
,ஆக்சன்,டுயட் என எக்ஸ்பிரஸ் வேகம்
எடுக்கிறது
. "யார் வந்தது" பாடலில் கேப்டன் மீனாவுடன்
டான்ஸ் ஆடும்போது மீனா கேப்டனுக்கு அக்கா போல்
இருப்பது
கொஞ்சம் நெருடல். ஆனால் இந்த குறையை
அடுத்து
மீரா ஜாஸ்மினுடன் ஆடும் மூன்று டூயட் நிவர்த்தி
செய்கிறது
. சீனா, ஸ்பெயின் என பாரின் லொகேசன்களில்
இருவரும்
ஆடி பாடும் போது நமக்கு அப்படியே ஒரு இருபது
வயது
குறைந்து குழந்தை பருவத்துக்கே சென்றது போல்
ஒரு
பீலிங். நானெல்லாம் பீடிங் பாட்டில் வாங்கி
ஒரு வாரமாய் பால் குடித்து கொண்டு இருக்கிறேன் என்றால்
பாருங்களேன் . அதிலும் " இன்பமே " ரீமிக்ஸ் பாடலில்
இருவருக்கும் கெமிஸ்ட்ரி செமையாய் வொர்க் அவுட் ஆகிறது!.
வழக்கமாக ஹீரோ , ஹீரோயின்களுக்கு மட்டும் டூயட்
வைக்கும் தமிழ் சினிமாவில் தாத்தாவிற்கும், பேத்திக்கும்
3 டூயட் வைத்து டைரக்டர் புரட்சி செய்திருக்கிறார்.

அப்பா விஜயகாந்துக்கு ஜோடி அம்பிகா. நாலு பிரேம் வந்தாலும்
ரெண்டு பேரும் கொஞ்சம் கூட நடிக்கல. அப்படியே புருஷன்,
பொண்டாட்டியா வாழ்ந்திருக்காங்க. வயசான கெட்டப்
அம்பிகாவுக்கு நல்லா பொருந்துது. கேப்டனுக்குதான் பாவம்
மேக்கப்பயும் மீறி அவரு இளமை பளிச்சுன்னு வெளில தெரியுது.
மேக்கப்ல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

அடுத்து குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் வசனம் ,
"வாய்க்கு ருசியா சமைக்கன்னுன்னா சமையக்காரி போதும்,
சம்சாரம் எதுக்குன்னு" அம்பிகாகிட்ட சொல்லும் போதும்
"மீன் பிடிக்கறவன் சில நேரம் தூங்கிகிட்டே வலைய வீசுவான்
அதுல முழிச்சுட்டு இருக்கற மீன் வந்து மாட்டிக்கும் அதுக்கு
பேர்தாம்பா விதின்னு" பையன் விஜயகாந்துக்கிட்ட சொல்லும்
போதும் வசனங்கள் அப்படியே நம்ம வாயிக்குள்ள கைய
விட்டு நெஞ்சுல எழுதுன மாதிரி மனசுல காப்பி ஆய்டுது. என்ன
ஒன்னு இந்த வசனங்கள் வர இடத்துல எல்லாம் வழக்கம்
லாலா ....லாலா ....லாலா ...லாலான்னு RR வந்து இருந்தா
இன்னும் நல்லா இருந்திருக்கும். என்ன ஆச்சு விக்ரமன் சார்
உங்களுக்கு? மறந்துட்டிங்களா?

ரமேஷ் கண்ணா, நாசர், தலைவாசல் விஜய், சம்பத் என நிறைய
நட்சத்திரங்கள் தலையை காட்டிவிட்டு செல்கிறார்கள். ரமேஷ்
கண்ணா காமெடி என்ற பெயரில் சில இடங்களில் கடுப்பேற்றுகிறார்.
கேப்டனுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் , செண்டிமெண்ட், டூயட்
என படம் முழுக்க ஏகப்பட்ட காமெடியை வைத்து
கொண்டு தனியாக ரமேஷ் கண்ணா வேறு? ட்ரைலர் முழுதும்
பாத்தாலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷயம் இதில்
கேப்டன் டபுள் ஆக்சனா, ட்ரிபிள் ஆக்சனா என்பதுதான்.
மீனாவோடு டூயட் பாடும் கேப்டனும், மீரா ஜாஸ்மினோடு
டூயட் பாடும் கேப்டனும் ஒரு மாதிரி இருப்பதுதான் இந்த
குழப்பத்துக்கு காரணம். இருவரையும் பள்ளிக்கூட
மாணவர்கள் போல் காட்டியதுக்கு பதிலாய் ஒருவரை
கல்லூரி மாணவர் போல் காட்டி இருக்கலாம்.

இப்படி சில நிறை, குறைகள் இருந்தாலும் ட்ரைலர் முடியும்
போது ஒரு 1000 ரூபாய்க்கு டாப் அப் பண்ணி அண்ணன் ,
தம்பி, அக்கான்னு சொந்த பந்தத்துக்கெல்லாம் போன் போட்டு
பேசனும் போல ஒரு உணர்வை ஏற்படுத்தி நமக்கு தண்டசெலவு
வைப்பதில் இயக்குனர் வெற்றி கண்டு இருக்கிறார்.

பின் குறிப்பு: எங்கள் மீரா ஜாஸ்மின் ரசிகர் மன்றத்தின் சார்பில்
அவருக்கு எதிர் காலத்தில் இது போன்ற கொடுமையான
துன்பங்கள் நேரக்கூடாது என்று எல்லோரும் நாளை
10- ல் இருந்து 10.05 வரை ஒரு 5 நிமிடம்
பிரார்த்தனை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.


கொஞ்சம் மொக்கதான் இருந்தாலும் பாத்து ஓட்டும்
கமெண்டும் போட்டுடுங்க.

3 comments on "மரியாதை -- ட்ரைலர் விமர்சனம்"

on April 4, 2009 at 9:21 PM said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

on April 6, 2009 at 7:39 AM said...

போட்டுவிட்டேன்

on April 9, 2009 at 7:35 PM said...

மின்னல் பிரியன் அவர்களே,

நானும் பார்த்துத் தொலைத்தேன் இந்த அபத்தக் களஞ்சியத்தை!

டபுள் ரோல் விஜயகாந்த், பழசாய்ப் போனா மீனா , இன்னும் அரதப் பழசான 'அந்த ஏழு நாட்கள்', 'சகலகலாவல்லவன்' காலத்து அம்பிகா என்று ஏதோ 1998-99 இல் ரிலீஸான விக்ரமன் படம் பார்ப்பது போல் இருக்கிறது! தப்பித் தவறி actual படம் நன்றாக இருக்குமா என்று காத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

'மரியாதை', ரசிகனின் சுயமரியாதைக்கு அவமரியாதை!

நன்றி!

சினிமா விரும்பி