Friday, October 10, 2008

மின்சாரம் இல்லாமல் வாழ்வது எப்படி?

Posted by மின்னல்ப்ரியன் at 1:13 PM

மின்வெட்டு துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தரும் 6 அற்புத யோசனைகள்:

1.இருட்டில் வெட்டியாக பொழுதை போக்காமல் தமிழக மக்கள் எல்லோரும் மின்சாரம் வேண்டி அமெரிக்க அதிபர் ஜார்ஜ். புஷுக்கு sms அனுப்பலாம் , டைம் பாஸ் ஆவதோடு உங்கள் விரல்களுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும் .

2. யோகா , தியானம் எல்லாம் கத்துக்கரதால உங்க உள்ளத்துல ஒரு ஒளி வருமாம் , அந்த வெளிச்சத்துல வாழ கத்துக்கங்க .

3. அலுவலகத்தில் எல்லோரும் ஜாலியாக உட்கார்ந்து கொண்டு உங்கள் பகுதியில் மின்சாரம் இருந்த 1 மணி நேரத்தில் கலைஞர் டிவியில் நீங்கள் பார்த்த சீரியல் கதைகளை ஒருவருக்கொருவர் பேசி மகிழுங்கள் .

4.
எல்லா ஊர்லயும் கழக கண்மணிகள் மின்சாரம் வருமா? வராதான்னு தினமும் பட்டிமன்றம் நடத்துவாங்க , வரும் ஆனா வராதுன்னு நடுவர் சொல்லற தீர்ப்ப கேட்டு நீங்க சிரிச்சு மகிழலாம் .

5.
கடவுள் இருக்கிறார் ,கரன்டார் இருக்கிறார் என்கிறார் அம்மையார் ,இரண்டுமே கண்ணுக்கு தெரிவதில்லை , அதை நம்புவது மடமை , இதுவே நம் கொள்கை என முரசொலியில் கலைஞர் எழுதும் கவிதைகளை படித்து நீங்கள் வாழ்வாங்கு வாழலாம் .

6.
பொழுது போகவில்லை என்றால் ஊரெங்கும் உள்ள மின்கம்பிகளில் கொக்கி மாட்டி ஜாலியாக ஊஞ்சல் விளையாடுங்கள் .

4 comments on "மின்சாரம் இல்லாமல் வாழ்வது எப்படி?"

on October 13, 2008 at 3:54 PM said...

யோகா ....
வரும்...ஆனா...வராது..,
மின்கம்பிகளில் கொக்கி மாட்ற மேட்டரு
எல்லாம் நல்ல காமெடி!
பகிந்தமைக்கு நன்றி

on October 13, 2008 at 4:11 PM said...

என்னோட ப்ளாக்ல முதல் கமெண்ட் எழுதி சரித்தரத்தல இடம் பிடிச்ச உங்களுக்கு என் நன்றிகள் .

on October 13, 2008 at 9:41 PM said...

hai visit my blog.

on October 14, 2008 at 11:28 AM said...

//என்னோட ப்ளாக்ல முதல் கமெண்ட் எழுதி சரித்தரத்தல இடம் பிடிச்ச உங்களுக்கு என் நன்றிகள் .//

:) அப்படியா சேதி .... இன்னும் எழுதுனா கமெண்ட் நிச்சயம் வரும் ... கலக்குங்க சந்துரு :)