Tuesday, October 14, 2008
சென்னையில் ஒரு மழைக்காலம்
டைட்டில் பாத்த உடனே நான் ஏதோ கெளதம் மேனன் படத்த பத்தி சொல்லுவன்னு நினைக்கறவங்களுக்கு ஆசை,தோசை,அப்பளம்,வடை. இந்த ரெண்டு நாளா சென்னையில மழை பெஞ்சிட்டு இருந்த டைம்ல தி.நகர் பக்கமா போய் இருந்தன். கோடம்பாக்கம் புது பிரிட்ஜ் தாண்டி உஸ்மான் ரோடுல என்டெர் ஆன உடனே 'நான் அப்படியே ஷாக் ஆயிட்டன்'. ரோட பாத்தா தூர் வாருன ஏரி மாதிரி இருந்துச்சு. பக்கத்துல இருந்த டீ கடை மாஸ்டர்கிட்ட 'என்னண்ணே உஸ்மான் ரோட்ல பூகம்பம் ஏதாவது வந்துச்சான்னு கேட்டதுக்கு பொது இடத்துல 'தம்' அடிக்க கூடாதுன்னு சட்டம் போட்ட மாதிரி, இனி பொது இடத்துல மழையும்பெய்ய கூடாதுன்னு சட்டம் போட சொல்லுன்னு அவரு யார் மேலயோ இருந்த கோபத்த என்கிட்ட காட்டுன அப்பத்தான் மழைதான் இதுக்கு காரணம்னு புரிஞ்சுது.
எனக்கு தெரிஞ்சு 2, 3 மாசத்துக்கு முன்னால புது பிரிட்ஜ் ஓப்பன் பண்ணறப்ப போட்ட ரோடு அது, ஒரு மழைக்கே இந்த கதி ஆயிடிச்சுன்னா அந்த ரோட்ட என்ன லச்சனத்துல போட்டு இருப்பாங்க, எவ்ளோ சுருட்டி இருப்பாங்க ?
ஒண்ணு மட்டும் நல்லா தெருஞ்சுக்கங்க மக்களே இந்த உலகத்துலயே குறைஞ்ச ஆயுள் கொண்டது நம்ம கவர்மென்ட் போடற ரோடுதான்.இந்த மழையால காண்ராக்ட் எடுக்கறவங்களுக்கு பண மழை கொட்ட போகுது. எப்படியும் அந்த ரோட்ட மறுபடியும் போட போறாங்க, மறுபடியும் மழை வர போகுது. என்ன கொடுமை சரவணன் இது ?
Subscribe to:
Post Comments (Atom)
1 comments on "சென்னையில் ஒரு மழைக்காலம்"
அந்த கொடுமையை பத்தின பதிவு இங்கே.
http://amarkkalam.blogspot.com/2008/11/rain-politics.html
Post a Comment