Monday, February 1, 2010

தமிழ்ப்படம் உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி !

Posted by மின்னல்ப்ரியன் at 7:59 PM
சத்தியமா இவ்ளோ பெரிய வரவேற்ப நாங்களே
எதிர்பார்க்கலைங்க, என்னாமா பீல் பண்ணி எழுதி
இருக்கீங்க எல்லாரும் ! உங்களுக்கு எல்லாம் எனது
மனமார்ந்த "கிபாக்கோ " (பண்டோரா பாஷைல நன்றின்னு
அர்த்தம்பா ).முக்கியமா போன் பண்ணி வாழ்த்து சொன்ன
பரிசல்காரன் , கேபிள் சங்கர் , கார்க்கி ஆகிய மூவருக்கும்
டபுள் கிபாக்கோ . கூடவே பின்னூட்டத்துல படத்த பத்தி பீல்
பண்ணின அனைத்து பதிவர்களுக்கும் ஒரு குட்டி கிபாக்கோ .

வழக்கமா பதிவர்கள் எழுதற விமர்சனத்த படிக்கும் போது
சன் ஆப் சாரு நிவேதிதா எழுதி இருப்பாரோன்னு யோசிக்கற
அளவுக்கு செம டரியலா இருக்கும் . அந்த பயத்தோடவே
உங்க விமர்சனங்கள எதிர் பார்த்துட்டு இருந்தோம் . ஆனா உங்க
விமர்சனம் எல்லாம் படிக்கும் போது ஒரு நல்ல படத்த
குடுத்து இருக்கோம்ங்கற சந்தோசம் மனசுக்குள்ள ஓடிட்டே
இருக்கு . கூடவே படமும் நல்லா ஓடறதால இரட்டிப்பு சந்தோசம் .

அண்ணன் கேபிள் சங்கர் எங்க டீமோட ஒரு பதிவர் சந்திப்பு
ஏற்பாடு செய்ய சொல்லி இன்று பேசினார் . நிச்சயமாக முயற்சி
செய்கிறேன் . நன்றி .

37 comments on "தமிழ்ப்படம் உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி !"

அண்ணாமலையான் on February 1, 2010 at 8:08 PM said...

வாழ்த்துக்கள், உங்களுக்கும் மற்றும் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும்.. உங்கள் வெற்றி தொடரட்டும்...

சங்கர் on February 1, 2010 at 8:31 PM said...

வாழ்த்துகள் நண்பரே, நல்லதொரு முயற்சி, நல்லதொரு துவக்கமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்

கார்த்திகைப் பாண்டியன் on February 1, 2010 at 9:42 PM said...

ரொம்ப நாள் கழிச்சு படம் பூராவும் வாய் விட்டு சிரிக்க வச்சு இருக்கீங்க.. இது போதாதா நண்பா? வாழ்த்துகள்..

சதீஷ் குமார் on February 1, 2010 at 9:52 PM said...

பிடிச்சமாதிரி பொரியல் வெச்சுட்டு... டரியல் விமரிசனம் எதிர்பார்க்கலாமா?? பின்னி பெடல் எடுத்துட்டீங்க...

இனியாவது தமிழ் சினிமா திருந்துமா??? அந்த அளவுக்கு உங்களுக்கு கான்பிடன்ஸ் இருக்கா பாசு??

தருமி on February 1, 2010 at 9:56 PM said...

நல்ல படத்துக்கு மிக நல்லா வசனம் எழுதியதுக்கு ..
உங்களுக்கு டிரிப்பிள் கிபாக்கோ !!

கார்க்கிபவா on February 1, 2010 at 9:58 PM said...

கிபாக்கோ நாங்க சொல்லனும் பாஸ்..

அது இருக்கட்டும், எல்லோரும் ஏன் தமிழ்சினிமா திருந்துமான்னு கேட்கறாங்க? எவ்ளோ நல்ல படம் எடுத்தாலும் அதை spoof பண்ன முடியுமே!!!லொள்ளு சபா எந்த படத்தை விட்டார்கள்?

போலவே, இதே போல் இனி வரவிருக்கும் படங்கள் நிச்சயம் தோல்விய்டையும். குறைந்தபட்சம் ஒரு வருட இடைவெளியாவது வேண்டும் அடுத்த ஸ்பூஃபிற்கு.

எப்படியோ, டீமிற்கு வாழ்த்துகள்.. ஹீரொயின் இன்னும் கொஞ்சம் பெட்டரா இருந்திருக்கலாம் :))

Raju on February 1, 2010 at 10:45 PM said...

அன்பு முத்தங்கள் பாஸ்..!
பாட்டுகளுக்கு ஸ்பெஷல் முத்தங்கள்..!
வசனங்களுக்கு இஸ்பெஷல் முத்தங்கள்..!

(அனைத்துமே எச்சில் படாதவாறுதான்)

வால்பையன் on February 1, 2010 at 11:10 PM said...

ஜெயிச்சிடிங்க நன்பரே!

Unknown on February 1, 2010 at 11:38 PM said...

உங்களுக்கு எங்க கிபாக்கோ..

கார்க்கி சொல்வது போல உடனே அடுத்த ஸ்பூஃப் எடுத்துவிடாதீர்கள் ப்ளீஸ்..

செ.சரவணக்குமார் on February 2, 2010 at 12:42 AM said...

அனைவரும் ரசிக்கும்படி ஒரு அருமையான திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar on February 2, 2010 at 4:47 AM said...

ரொம்ப நாள் கழித்து, கண்ணில் தண்ணி வர, ஒவ்வொரு நொடியும் ரசித்துச் சிரித்த படம். படக்குழுவுக்கு வாழ்த்துகள்.

பாலா on February 2, 2010 at 6:40 AM said...

உங்க ப்ரொடியூஸர் கிட்ட சொல்லி ‘எங்க ஊர்ல’ ரிலீஸ் பண்ணச் சொல்லுங்க தல.

இல்லீன்னா... திருட்டு டிவிடி-தான்.

பாலா on February 2, 2010 at 6:42 AM said...

ஸாரி.. எல்லாரும்.. ”சூப்பர் சூப்பர்” சொல்லியே, படத்தை தியேட்டரில் பார்க்க முடியாத எங்களை வெறுப்பேத்திகிட்டு இருக்காங்களா... அந்த கடுப்புல வாழ்த்து சொல்ல மறந்துட்டேன்.

வாழ்த்துகள்! :) :)

செந்தில் நாதன் Senthil Nathan on February 2, 2010 at 7:20 AM said...

// ஹாலிவுட் பாலா said...
உங்க ப்ரொடியூஸர் கிட்ட சொல்லி ‘எங்க ஊர்ல’ ரிலீஸ் பண்ணச் சொல்லுங்க தல.

இல்லீன்னா... திருட்டு டிவிடி-தான்.
//
இதை வழிமொழிகிறேன்!!

நல்ல படம் தந்ததிற்கு வாழ்த்துகள்!! இன்னும் பல வெற்றி பெற வாழ்த்துகள்!!

பரிசல்காரன் on February 2, 2010 at 9:48 AM said...

ஹலோ.. கேபிள் சங்கர்கிட்ட உங்களைக் கூப்பிடச் சொல்லி ’நீங்க சந்துருகிட்ட பேசறீங்களா.. இல்ல நான் மிரட்டி கூட்டீட்டு வரவா’ன்னு கேட்டது நானு. ஞாபகம் வெச்சுக்கோங்க! நாங்க D யோட ஆளுக!

Deepan Mahendran on February 2, 2010 at 9:57 AM said...

தலை...படம் கொச்சின்ல இன்னும் ரிலீஸ் ஆகலை.... :(
பார்க்க ஆவலாக இருக்கிறோம்...

வரதராஜலு .பூ on February 2, 2010 at 10:43 AM said...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் பதிவர்களின் விமர்சனம், படத்தை பற்றிய டாக் ஆகியவை ஆவலைத் கிளப்பியுள்ளதால் நிச்சயம் படம் பார்த்துவிடுவேன் (தியேட்டரில்தான்).

உங்கள் வெற்றி தொடர வாழ்த்துக்கள்.

கீப் இட் அப்

Balakumar Vijayaraman on February 2, 2010 at 11:03 AM said...

வாழ்த்துகள், தொடருங்கள்.

அகல்விளக்கு on February 2, 2010 at 11:19 AM said...

ரொம்ப நாள் கழிச்சு நல்ல தமிழ்படத்தை கொடுத்ததுக்கு

உங்களுக்கு ட்ரிபிள் கிபாக்கோ....

டைமிங்ஸ்ல கலக்கிட்டீங்க தலைவா...

ஜீவன்பென்னி on February 2, 2010 at 12:08 PM said...

அமீரகத்தில் இன்னும் வெளியாகல. பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கின்றேன்.

வாழ்த்துக்கள்.

அன்பேசிவம் on February 2, 2010 at 4:51 PM said...

தலைவரே! தேங்க்ஸ் ஃபார் யுவர் கிபாக்கோ. மீட்டிங் எப்போன்னு சொல்லுங்க... வீ ஆர் வெய்ட்டிங்

ஷாஜி on February 2, 2010 at 6:27 PM said...

வாழ்த்துகள், தொடருங்கள்

shortfilmindia.com on February 3, 2010 at 9:45 AM said...

சந்துரு.. உங்களுடய காலுக்காக காத்திருக்கிறேன்.

கேபிள் சங்கர்

Suresh on February 3, 2010 at 10:00 AM said...

Sema padam boss kalakal muyarchigal :-)

Suresh on February 3, 2010 at 10:21 AM said...

Nanbare sema padam family oda sirichu sirichu vairu valichathu than mitcham , neenga sikirama oru vettri padam iyakka valthukkal

மின்னல்ப்ரியன் on February 3, 2010 at 11:40 AM said...

வாழ்த்திய அனைவருக்கும் கிபாக்கோ ..கிபாக்கோ ..கிபாக்கோ .

மின்னல்ப்ரியன் on February 3, 2010 at 11:42 AM said...

///ஹாலிவுட் பாலா said...///

உங்க ப்ரொடியூஸர் கிட்ட சொல்லி ‘எங்க ஊர்ல’ ரிலீஸ் பண்ணச் சொல்லுங்க தல.

இல்லீன்னா... திருட்டு டிவிடி-தான்.///

படத்திற்கு சிறந்த வரவேற்பு உள்ளதால் விரைவில் அங்கு வெளியிடப்படும்
என்று சொல்லி உள்ளார்கள் . சற்று காத்திருங்கள் .

Naadodigal on February 3, 2010 at 1:48 PM said...

தமிழ் சினிமா இன்னும் நல்லா
வளரனும்-ன்னு நினைக்கிற கூட்டத்தில நானும் ஒருவன்....என்ன, எங்கள மாதிரி நாட்ட விட்டு வேலைக்காக ஓடி வந்தவங்களுக்கு, சினிமா தான் ஒரு துணைவன்....

இன்னும் உங்க படம் பாக்கல...இந்த ஊர்ல வேற வழி இல்ல...திருட்டு தனமா தான் பாக்கணும்....சாரி பாஸ்...

மனமார்ந்த வாழ்த்துக்கள்...

sen said...

வாழ்த்துகள், தொடருங்கள்.

பாலா on February 4, 2010 at 9:59 PM said...

///படத்திற்கு சிறந்த வரவேற்பு உள்ளதால் விரைவில் அங்கு வெளியிடப்படும் என்று சொல்லி உள்ளார்கள் . சற்று காத்திருங்கள் ./////

ரொம்ப நன்றிங்க தல. ஆனா.. இது நடக்காதுன்னு மட்டும் தெரியும். :) :)

அமெரிக்காவில் படங்களை வெளியிட நிறைய முறைகள் இருக்கு. ஆனா தியேட்டரில் மட்டும்தான் ரிலீஸ் பண்ணுவேன்னு எல்லோரும் அடம் பிடிக்கறீங்க.

இந்தியாவை விட மூணு மடங்கு பெரிய நாடு இது. கேபிளில் ரிலீஸ் பண்ணினா கூட.. தியேட்டரில் கிடைப்பதை விட அதிக காசு கிடைக்கலாம்.

இந்த லிங்கை பாருங்க.
http://indiablogs.searchindia.com/2010/02/03/tamil-padam-coming-to-u-s-this-friday/

எப்பவும்... 2-3 இடத்தில் மட்டும்தான்.. தமிழ்ப்படங்கள் ரிலீஸ் பண்ணுவாங்க.

அல்ரெடி படத்துக்கு கேமரா ப்ரிண்ட் வந்துடுச்சிங்க தல. இனிமே நீங்க ரிலீஸ் பண்ணினாலும்.. ரொம்ப லேட்டுன்னுதான் சொல்லுவேன்.

எங்களை மாதிரி மத்த ஏரியாக்களில் இருக்கறவங்க எல்லாம்.. திருட்டு டிவிடிலதான் பார்க்க முடியும்.

இதையெல்லாம் சொல்லுறதுக்கு வெட்கமே படுறதில்லை!! :)

எங்க நிலைமை அப்படி!! :( :(

தயாநிதிக்கு எங்க வாழ்த்துகளை சொல்லிடுங்க!! :)

பாலா on February 4, 2010 at 10:11 PM said...

இது.. உங்கள் வருங்கால வெளியீடுகளுக்கு உபயோகப்படலாம்.

http://economictimes.indiatimes.com/news/news-by-industry/media/entertainment-/entertainment/Premiere-of-Striker-on-YouTube/articleshow/5511489.cms


”தமிழ் படம்” - இது போல.. யூட்யூபில் $5.00 - $10.00ன்னு சொல்லி.. நல்லா விளம்பரப் படுத்தி.. அமெரிக்காவில் (HD-யில்) வெளியிட்டு இருந்தீங்கன்னா...

‘படத்தோட டாக்’ ப்லாகில் தெரியறதுக்குள்ள நல்லா காசு பார்த்திட முடியும்.

☼ வெயிலான் on February 4, 2010 at 10:38 PM said...

வாழ்த்துக்கள் சந்துரு!!!!

cheena (சீனா) on February 7, 2010 at 1:55 PM said...

அன்பின் சந்துரு

நல்ல படம் - திருப்தியுடன் பார்த்தோம் -நல்வாழ்த்துகள்

Unknown on February 10, 2010 at 3:20 PM said...

வாழ்த்துக்கள் சார்

மரா on February 12, 2010 at 9:42 PM said...

ஆகா, தலைவரே உங்களத் தான் தேடிக்கிட்டிருந்தேன். அருமையான வசனம்,பாடல்கள் தல. காலையில 6.30 மணிக்கு ஒருக்கா ‘தயிர்ல போட்டா தயிர் வடை’ யைக் கேட்டுட்டுதான் வேலைக்கே கிளம்பறேன். எவ்வளவு பிஸியானாலும் ‘blog' எழுதுறத விட்டுராதீங்க தல.ஞாயிறு கேபிள் புத்தக விழாவில் சந்திப்போம்..வாழ்த்துக்கள் பாஸ்.

www.bogy.in on April 14, 2010 at 9:17 AM said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

வால்பையன் on February 25, 2012 at 10:38 AM said...

அடுத்து எப்போ பதிவு நண்பரே!?