Monday, April 20, 2009

விஷுவல் விருந்து!

Posted by மின்னல்ப்ரியன் at 7:30 PM 9 comments
நான் ரொம்ப ரசிச்ச படங்கள் .... பாத்து
என்ஜாய் பண்ணுங்க...இதுல ஒரு படத்த
நம்ம தமிழ் சினிமாகாரங்க சமீபத்துல
சுட்டுட்டாங்க...முடிஞ்சா கண்டுபுடுச்சு
கமெண்டா போடுங்க....( போட்டோவ "க்ளிக்"
பண்ணி பெருசா பாருங்க)













Saturday, April 11, 2009

எப்படி எல்லாம் யோசிக்கறாங்கய்யா!

Posted by மின்னல்ப்ரியன் at 12:03 PM 1 comments
இந்த விளம்பரத்த பாருங்க.. உங்க சிரிப்புக்கு
நான் கியாரண்டி ....

Saturday, April 4, 2009

மரியாதை -- ட்ரைலர் விமர்சனம்

Posted by மின்னல்ப்ரியன் at 3:02 PM 3 comments

2000 -ல் வானத்தை போல... 2009 -- ல் மரியாதை
என வானத்தை போல படத்தின் ஒரு காட்சியோடு
ட்ரைலர் துவங்கும் போதே 9 வருடங்களுக்கு பிறகு
மனதுக்குள் ஒரு இனம் புரியா பயம் பரவ தொடங்குகிறது.
டைட்டில் முடிந்ததும் அப்பா விஜயகாந்த் செவ்வானத்தின்
பின்னணியில் கம்பீரமாக நடந்து வரும் போது நமக்கு
அப்படியே ரிமோட்டை கீழே போட்டுவிட்டு எழுந்து
கும்பிட வேண்டும் போல் தோன்றுவது அந்த கேரக்டருக்கு
கிடைத்த வெற்றி.

இப்படி மெதுவாய் ஆரம்பிக்கும் ட்ரைலர் அடுத்தடுத்த
காட்சிகளில் பாசம்,அன்பு ,நேசம், சோகம்,காமெடி,
செண்டிமெண்ட்
,ஆக்சன்,டுயட் என எக்ஸ்பிரஸ் வேகம்
எடுக்கிறது
. "யார் வந்தது" பாடலில் கேப்டன் மீனாவுடன்
டான்ஸ் ஆடும்போது மீனா கேப்டனுக்கு அக்கா போல்
இருப்பது
கொஞ்சம் நெருடல். ஆனால் இந்த குறையை
அடுத்து
மீரா ஜாஸ்மினுடன் ஆடும் மூன்று டூயட் நிவர்த்தி
செய்கிறது
. சீனா, ஸ்பெயின் என பாரின் லொகேசன்களில்
இருவரும்
ஆடி பாடும் போது நமக்கு அப்படியே ஒரு இருபது
வயது
குறைந்து குழந்தை பருவத்துக்கே சென்றது போல்
ஒரு
பீலிங். நானெல்லாம் பீடிங் பாட்டில் வாங்கி
ஒரு வாரமாய் பால் குடித்து கொண்டு இருக்கிறேன் என்றால்
பாருங்களேன் . அதிலும் " இன்பமே " ரீமிக்ஸ் பாடலில்
இருவருக்கும் கெமிஸ்ட்ரி செமையாய் வொர்க் அவுட் ஆகிறது!.
வழக்கமாக ஹீரோ , ஹீரோயின்களுக்கு மட்டும் டூயட்
வைக்கும் தமிழ் சினிமாவில் தாத்தாவிற்கும், பேத்திக்கும்
3 டூயட் வைத்து டைரக்டர் புரட்சி செய்திருக்கிறார்.

அப்பா விஜயகாந்துக்கு ஜோடி அம்பிகா. நாலு பிரேம் வந்தாலும்
ரெண்டு பேரும் கொஞ்சம் கூட நடிக்கல. அப்படியே புருஷன்,
பொண்டாட்டியா வாழ்ந்திருக்காங்க. வயசான கெட்டப்
அம்பிகாவுக்கு நல்லா பொருந்துது. கேப்டனுக்குதான் பாவம்
மேக்கப்பயும் மீறி அவரு இளமை பளிச்சுன்னு வெளில தெரியுது.
மேக்கப்ல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

அடுத்து குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் வசனம் ,
"வாய்க்கு ருசியா சமைக்கன்னுன்னா சமையக்காரி போதும்,
சம்சாரம் எதுக்குன்னு" அம்பிகாகிட்ட சொல்லும் போதும்
"மீன் பிடிக்கறவன் சில நேரம் தூங்கிகிட்டே வலைய வீசுவான்
அதுல முழிச்சுட்டு இருக்கற மீன் வந்து மாட்டிக்கும் அதுக்கு
பேர்தாம்பா விதின்னு" பையன் விஜயகாந்துக்கிட்ட சொல்லும்
போதும் வசனங்கள் அப்படியே நம்ம வாயிக்குள்ள கைய
விட்டு நெஞ்சுல எழுதுன மாதிரி மனசுல காப்பி ஆய்டுது. என்ன
ஒன்னு இந்த வசனங்கள் வர இடத்துல எல்லாம் வழக்கம்
லாலா ....லாலா ....லாலா ...லாலான்னு RR வந்து இருந்தா
இன்னும் நல்லா இருந்திருக்கும். என்ன ஆச்சு விக்ரமன் சார்
உங்களுக்கு? மறந்துட்டிங்களா?

ரமேஷ் கண்ணா, நாசர், தலைவாசல் விஜய், சம்பத் என நிறைய
நட்சத்திரங்கள் தலையை காட்டிவிட்டு செல்கிறார்கள். ரமேஷ்
கண்ணா காமெடி என்ற பெயரில் சில இடங்களில் கடுப்பேற்றுகிறார்.
கேப்டனுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் , செண்டிமெண்ட், டூயட்
என படம் முழுக்க ஏகப்பட்ட காமெடியை வைத்து
கொண்டு தனியாக ரமேஷ் கண்ணா வேறு? ட்ரைலர் முழுதும்
பாத்தாலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷயம் இதில்
கேப்டன் டபுள் ஆக்சனா, ட்ரிபிள் ஆக்சனா என்பதுதான்.
மீனாவோடு டூயட் பாடும் கேப்டனும், மீரா ஜாஸ்மினோடு
டூயட் பாடும் கேப்டனும் ஒரு மாதிரி இருப்பதுதான் இந்த
குழப்பத்துக்கு காரணம். இருவரையும் பள்ளிக்கூட
மாணவர்கள் போல் காட்டியதுக்கு பதிலாய் ஒருவரை
கல்லூரி மாணவர் போல் காட்டி இருக்கலாம்.

இப்படி சில நிறை, குறைகள் இருந்தாலும் ட்ரைலர் முடியும்
போது ஒரு 1000 ரூபாய்க்கு டாப் அப் பண்ணி அண்ணன் ,
தம்பி, அக்கான்னு சொந்த பந்தத்துக்கெல்லாம் போன் போட்டு
பேசனும் போல ஒரு உணர்வை ஏற்படுத்தி நமக்கு தண்டசெலவு
வைப்பதில் இயக்குனர் வெற்றி கண்டு இருக்கிறார்.

பின் குறிப்பு: எங்கள் மீரா ஜாஸ்மின் ரசிகர் மன்றத்தின் சார்பில்
அவருக்கு எதிர் காலத்தில் இது போன்ற கொடுமையான
துன்பங்கள் நேரக்கூடாது என்று எல்லோரும் நாளை
10- ல் இருந்து 10.05 வரை ஒரு 5 நிமிடம்
பிரார்த்தனை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.


கொஞ்சம் மொக்கதான் இருந்தாலும் பாத்து ஓட்டும்
கமெண்டும் போட்டுடுங்க.

Wednesday, April 1, 2009

முட்டாள்கள் தினம் உருவான கதை!

Posted by மின்னல்ப்ரியன் at 3:20 PM 2 comments

ஏப்ரல் ஒண்ணு வந்தாவே எல்லாரும் ஒருத்தர
ஒருத்தர் முட்டாள் ஆக்க பாக்கறோம். ஆனா
எதுக்காக இந்த தினம்?எப்படி இது உருவாச்சுன்னு
யாருக்காவது தெரியுமா? தெரியாமையே முட்டாள்தனமா
இத கொண்டாடரத விட்டுட்டு ப்ளாஷ்பேக்க முதல்ல
தெரிஞ்சுக்கங்க.

1764-ல ரோம் நாட்டோட ஒரு பகுதியா இருந்த கிரேக்க
நாட்ட ஆண்ட சான் ஆண்டனிங்கற மன்னன் ஒரு நாள்
அந்தபுரத்துல அழகிகளோட(நன்றி தினத்தந்தி ) "ஜல்சா"
பண்ணிட்டு இருக்கும்போது அத கெடுக்கறதுக்குன்னே
ஒரு அவசர நியூஸ் வந்துச்சு.. என்னடான்னு பாத்தா
அலெக்ஸ்சாண்டர் படையெடுத்து வாரதா நியூஸ்.
அந்த சமயம் அலெக்ஸ்சாண்டர் எல்லா போர்லயும்
ஜெயிச்சு ஒவ்வொரு நாடா தன்னோட சாம்ராஜியத்த
விரிவுபடுத்திட்டு இருந்தாரு. அப்படிப்பட்ட ஒரு
மாவீரன் படையெடுத்து வரான்னு தெரிஞ்சும் சான்
ஆண்டனி கொஞ்சம் கூட பயப்படவே இல்ல. அவனும்
போருக்கு தயாரானான். அவனோட முடிவு முட்டாள்தனமானது
அலெக்ஸ்சாண்டர ஜெயிக்க முடியாதுன்னு எல்லாரும்
சொல்லியும் அவன் தன் முடிவ மாத்திக்கவே இல்ல.

1764 மார்ச் மாசம் தொடங்குன போர் ஏப்ரல் ஒண்ணாம் தேதி
முடிவக்கு வந்துச்சு. சான் ஆண்டனியோட தம்மாதூண்டு
படைய அடிச்சு துவம்சம் பண்ணுனதும் இல்லாம சான்
ஆண்டனிய போர் கைதியாக்குனாரு அலெக்ஸ்சாண்டர்.
குதிரைகளும், வீரர்களும் ரத்த வெள்ளத்துல செத்து கிடந்த
அந்த போர்க்களத்துல சான் ஆண்டனி அலெக்ஸ்சாண்டர
பாத்து சொன்னான்" நீங்க மாவீரரா இருக்கலாம், உலகத்தயே
ஆட்சி செய்யலாம். ஆனா நீங்க ஒரு முட்டாள்ன்னு " உடனே அலெக்ஸ்சாண்டர் கோபத்துல கத்திய உருவிட்டு ஏன்
அப்படி சொன்னன்னு கேட்டாரு. அதுக்கு சான் ஆண்டனி
சொன்னான் இன்னிக்கு ஏப்ரல் ஒண்ணு முட்டாள்கள்
தினம் நீ என்ன ஜெயிச்சட்டன்னு ஊருக்குள்ள போய்
சொன்னா உன்ன எல்லாரும் முட்டாள்ன்னு
சொல்லுவாங்கன்னு ....அதுக்கு அப்புறம் ....அட இன்னுமா நீங்க
இந்த கதைய உண்மைன்னு நினச்சு படிச்சுட்டு இருக்கீங்க?
அட மக்கா .....இப்படி முட்டாள் ஆயிட்டிங்களே....அய்யோ...அய்யோ .

பின் குறிப்பு: முட்டாள்கள் தினத்துக்கான உண்மையான
கதை தெரிஞ்சவங்க அப்படியே கமெண்டா
போட்டுடுங்க. நானும் தெரிஞ்சக்கவன்ல....


புடிச்சு இருந்தா ஓட்டையும், கமெண்டையும் மறக்காம
போட்டுடுங்க.

Monday, March 30, 2009

" இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" உண்மை என்னன்னா?

Posted by மின்னல்ப்ரியன் at 4:13 PM 2 comments
முதல்ல இந்த பதிவோட ட்ரைலர்--- குங்குமம் இந்த
வாரம் சன் டிவிக்கு போட்டி கிங் டிவியா? மறுக்கிறார்
மாறன். கிங் டிவிக்கு போட்டி கிங் டிவி 2 தான் மார்
தட்டுகிறார் NKKP.ராஜா. இந்த இதழுடன்
இலவச கலர் டிவி மற்றும் இரண்டு ரூபாய் அரிசி.


இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக"
அப்படின்னு சன் டிவியில ( இப்ப கலைஞர் டிவிலயும்)
போடற படம் எல்லாம் உண்மையிலேயே இந்திய
தொலைக்காட்சிகளில்
முதல் முறையாகத்தான் போடறாங்கன்னு
நீங்க நினச்சா நீங்க இன்னும் வளரனும் தம்பி .(உங்க அண்ணன் கிட்ட சொல்லுங்க குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி தருவாரு).

உண்மை என்னன்னா நீங்க பாக்கறது முதல் முறை இல்ல.
ஒரு 20, 25வது முறைதான் நீங்க பாக்கிறிங்க. தொலைக்காட்சி
வரலாற்றுல முதல் முறையா எங்க ஊரு கிங் டிவில முதல்ல
பாக்கறது நாங்கதான். ( கிங் டிவி மற்றும் கிங் டிவி 2 ஈரோடு MLA
முன்னாள் அமைச்சர் NKKP. ராஜாவால் நடத்தப்படுகிறது.)
நாங்க கிங் டிவில பாத்து சலிச்ச படங்களைத்தான் நீங்க
சன் டிவில முதல் முறையா பாக்கிறிங்க. என்ன பண்ணறது
உங்க கொடுப்பின அவ்வளவுதான். இதுக்குதான் ஈரோடு
மாவட்டத்துல பொறக்கனும். விடுங்க இப்ப பீல் பண்ணி
என்ன பிரயோஜனம்.

கலைஞர் இலவசமா டிவி குடுத்துட்டாரு ஓகே. படம் யாரு
போடறதுன்னு தொகுதி மக்கள் யாரும் கேட்டுடகூடாதுனு
ரெண்டு டிவி சேனல் ஆரம்பிச்சு புது புது படமா காட்ற எங்க
MLA வோட நல்ல மனசு உங்க யாருக்காவது வருமாய்யா?
பாவம் படத்துக்கு இடையில கொஞ்சமா விளம்பரம் போட்டு
கொஞ்சமா சம்பாதிக்கற அவர போய் ஆள கடத்துனாருன்னு
சொல்லி இருந்த அமைச்சர் பதவியும் புடிங்கிட்டிங்க. அப்படி
இருந்தும் அவரு எங்களுக்காக ரைட்ஸ் பத்தி எல்லாம்
கவலபடாம இன்னிக்கு ரிலீஸ் ஆகற படத்த இன்னிக்கே
போட்டு காட்டறாரு. அடுத்த எலக்சன்லயும் அவரையே
MLA ஆக்கி எந்திரன்ல இருந்து மருதநாயகம் வரைக்கும்
ரிலீஸ்க்கு முன்னாடியே பாக்கல நாங்க ஈரோட்டுக்காரங்க
இல்ல!

பின் குறிப்பு :
கொஞ்ச நாள் முன்னால் ஜுனியர் விகடனில் இதை
பற்றிய செய்தி வெளியாகி இருந்தது. நிருபர் கேட்ட
கேள்விக்கு இது தன் கவனத்துக்கு வரவில்லை
என்றும் இனி இது போல் நடக்காது என்றும் ராஜா
பதில் சொல்லி
இருந்தார். போன வாரம் நான் ஊருக்கு
போயிருந்தப்ப கிங் டிவில சந்தோஷ் சுப்பிரமணியம்
ஓடிட்டு இருந்துது. கீழ ஓடற விளம்பரத்த பாத்தா செம
அதிர்ச்சி... ஜுனியர் விகடன் விளம்பரம் ஓடிட்டு
இருந்துது. என்ன பண்ணறது பாத்துட்டு சிரிக்க
வேண்டியதுதான்.


படித்துவிட்டு பிடித்திருந்தால் உங்கள் கருத்தையும்,
ஓட்டையும் தவறாமல் பதிவு செய்யவும்.

Friday, March 27, 2009

பாராளுமன்ற தேர்தலும் பட்டய கிளப்பும் சலுகைகளும் .

Posted by மின்னல்ப்ரியன் at 2:17 PM 4 comments
முக்கிய அறிவிப்பு :
இங்கு குறிப்பிடபட்டிருக்கும் ஆலோசனைகளை
கலைஞர், அம்மா, வைகோ, திருமா, சோனியா, அத்வானி
என யார் வேண்டுமானாலும் எந்த கட்சி வேண்டுமானாலும்
பயன்படுத்தி கொள்ளலாம்.கட்டணம் எதுவும் கிடையாது.
மேலும் idea- சொன்னா திருடிடுவாங்க என்று சொல்லும்
விஜயகாந்த் போன்றோரின் சுயநல போக்கும் எனக்கு
கிடையாது என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன்.

இனி ஆலோசனைகள் :

1. நீங்க நோட்டு குடுக்க போகும் போது ஸாரி... ஸாரி ..
நீங்க ஓட்டு கேட்க போகும் போது சும்மா போயி எங்க ஆட்சியின் சாதனைகளை பாருங்கள்ன்னு எல்லாம் மொக்க போடறத
விட்டுட்டு " நீங்க எங்களுக்கு ஓட்டு போட்டா ஓட்டு போடற
உங்க எல்லாரு பேரையும் குலுக்கி போட்டு நாலு பேருக்கு
மாநில அமைச்சர் போஸ்டும், பம்பர் பரிசா ஒருத்தருக்கு
மத்திய அமைச்சர் போஸ்டும் தருவோம்னு ஒரு பிட்ட
போடுங்க " அப்புறம் பாருங்க அந்த முட்டாள் ஜனங்க
பூரா பேராசைல ஓட்ட உங்களுக்கு போட்டுடுங்க.

2. ரெண்டு ஏக்கர் நிலமல்லாம் இப்ப வொர்க் அவுட் ஆகாது.
என்ன பண்ணுங்க ஓட்டு கேட்க போகும் போதே எல்லார்
கைலயும் ரெண்டு ரெண்டு பட்டாவ குடுத்து " அய்யா
உங்களுக்கு நிலாவுல 500 ஏக்கரும் , செவ்வாயில 1000
ஏக்கரும் ஒதுக்கி இருக்கோம், நீங்க நாளைக்கே கூட போயி
விவசாயம் பண்ணலாம்னு ஒரு மேட்டர போடுங்க. பய
புள்ளைக முடிஞ்சா போயி விவசாயம் பாத்து பொழச்சு
போறானுங்க.

3. 18 வயசுக்கு மேலஇருக்கற கல்லூரி மாணவர்கள்
யாருக்கும் எக்ஸாம் கிடையாது , பாஸ், பெயில் எதுவும்
கிடையாது, வருசத்துக்கு ரெண்டு நாள் காலேஜ் போனா
போதும். மீதி நாள் நீங்க பொழுதைபோக்க அரசே இலவச
சினிமா பாஸ் குடுக்கும். அது மட்டும் இல்லாம நீங்க படிச்சு
முடிச்ச உடனே ஒபாமாகிட்ட சொல்லி உங்களுக்கு எல்லாம்
அமெரிக்காவுல வேல வாங்கி தருவோம்ன்னு சொல்லி
பாருங்க மாணவர் ஓட்டு எல்லாம் உங்களுக்குத்தான்.

4. இப்ப குடுத்து இருக்கற சின்ன டிவிய எக்சேஞ்ல
எடுத்துக்கிட்டு புதுசா LCD Tv யும் கூடவே சன் டைரக்ட்
DTH சேர்த்து குடுக்கலாம். அது மட்டுமில்லாம பெண்
வாக்காளர்கள கவர சீரியலுக்கின்னே ஒரு 24 மணி
நேர தனி சேனல் ஆரம்பிக்கலாம் .

5. நாங்க ஆட்சிக்கு வந்தா அப்பப்ப எங்க ஆளுங்கள
ராஜினாமா பண்ண வெச்சு அடிக்கடி இடைத்தேர்தல்
நடத்தி அண்டா, குண்டா , அரிசி, பருப்பு செல்போன்
உட்பட உங்கள் இல்லத்துக்கு தேவையான அனைத்து
பொருட்களையும் இனாமா தருவோம்னு ஒரு
வாக்குறுதி குடுங்க போதும்.

6. மூத்த குடிமக்களுக்கு டாஸ்மாக் சரக்கில் 70%
தள்ளுபடி, பெண்களுக்கு ஜவுளி கடைகளில் 33%
சிறப்பு சலுகை. புதுசா கல்யாணம் செய்யறவங்களுக்கு
ஊட்டி அல்லது கொடைக்கானலில் இலவச தேனிலவு.
காதலர்களுக்கு மாதம் 1000 ரூபாய்க்கு இலவச டாப் அப்
போன்ற சின்ன சின்ன சலுகைகளையும் அறிவிக்கலாம்.

7. இறுதியாய் விவசாயிகள் மட்டுமின்றி நாட்டில் உள்ள
அத்தனை பேரும் வங்கியில், மார்வாடி கடையில், பக்கத்து
வீட்டுக்காரரிடம், பண்ணையாரிடம் என எங்கு கடன் வாங்கி
இருந்தாலும், எவ்வளவு கடன் வாங்கி இருந்தாலும் அத்தனையும்
தள்ளுபடி என்று அறிவிப்பதோடு போனஸாக பெண்கள்
பக்கத்து வீட்டில் அவசரத்துக்கு வாங்கிய காபி பொடிக்கும்
சேர்த்து தள்ளுபடி அறிவியுங்கள். அத்தனை ஓட்டும்
உங்களுக்கே ....நாளை நமதே...நாநூற்று முப்பத்தி நாலும் நமதே.


சலுகைகள் தொடரும் ......

பின்குறிப்பு : படித்து விட்டு tamilish-ல் ஓட்டு போடுபவர்களுக்கும்
விரைவில் சலுகைகள் அறிவிக்கலாம் என்று இருக்கிறேன்.


படித்து விட்டு பிடித்திருந்தால் உங்கள் கருத்தையும்
தவறாமல் பதிவு செய்யவும்.

Wednesday, March 25, 2009

நைட் ஓட்டல்களும் ..நடக்கும் அநியாயங்களும்

Posted by மின்னல்ப்ரியன் at 11:07 AM 9 comments

தலைப்ப பாத்ததும் பார்ட்டி, பப், குடி, கூத்துன்னு நம்ம
சென்னை நைட் ஓட்டல்கள் பத்தின பதிவுன்னு நீங்க
நினச்சடாதிங்க... அது வேற ஓட்டல்..இது வேற ஓட்டல்!
சென்னைல இருந்து கோவை, திருச்சி, மதுரைன்னு பஸ்ல
வெளியூர் போகும் போதோ, வரும் போதோ டிரைவர் ஒரு
இடத்துல வண்டிய நிறுத்திட்டு " பஸ் ஒரு பத்து நிமிஷம்
நிக்கும்
, டீ, காபி,டிபன் சாப்பிடறவங்க ... பாத்ரூம்
போறவங்க
எல்லாம் போயிட்டு வந்துடுங்கன்னு...
சவுண்ட்
குடுப்பார் பாத்திங்களா அந்த ஓட்டலுங்க
பத்தின மேட்டர்தான் இது.

சுத்தம் சோறு போடுங்கறது எல்லாம் சும்மா.. உட்டாலக்கிடி,
இந்த மாதிரி ஓட்டல் ஓனருகிட்ட கேட்டா அசுத்தம் சோறு,
பிரியாணி
, சிக்கன் 65 எல்லாம் போடும்னு புதுசா பழமொழி
சொல்லுவாங்க. கையேந்தி பவன்தான் மோசமான நோய்
பரப்பும் ஒட்டல்ன்னு சொல்றவங்க ஒரே ஒரு தடவ இங்க
வந்து சாப்பிடுங்க ,அதுக்கப்பறம் நீங்க உங்க பரம்பரைக்கே
நோய் பரப்ப ஆரம்பிச்சுடுவிங்க.. அவ்வளவு கேவலமான
உணவுகள், வாயிலேயே வெக்க முடியாத டேஸ்ட்,
கன்னாபின்னான்னு ரேட்டு, ஏதாவது கேள்வி கேட்டா
இஷ்டம்னா சாப்பிடு ,இல்ல எடத்த காலி பண்ணுங்கர
அவங்க தெனாவெட்டு எல்லாம் பாக்கும் போது நம்ம
பஸ் டிரைவரையும், கண்டக்டரையும் தர்ம அடி அடிக்கணும்
போல கோபம் வரும். பின்ன என்ன அவங்களுக்கு கிடைக்கற
ஓசி
டீ, சிகரெட்க்குக்காக நம்ம அனுபவிக்கற கஷ்டம் நம்ம
எதிரிக்கு கூட வர கூடாது.

இதுகூட பரவாயில்ல.. இன்னொரு அநியாயம் இருக்கே
இன்னும் கொடுமை. யூரின் போக ஒரு ஆளுக்கு அஞ்சு
ரூபா, அஞ்சு ரூபா கொடுத்துட்டு என்ன அமெரிக்காவுக்கா
போகமுடியும். அரையுங் குறையுமா தென்னங்கீத்து வெச்சு
அவனுங்க கட்டி இருக்கற toilet தான் போகமுடியும்.
( இதுக்குதான் பஸ் ஏறும் போது பீர் குடிக்க கூடாதுன்னு
பெரியவங்க
சொல்லி இருக்காங்க)அத toiletன்னு சொன்னா
toiletஅ நாம என்னான்னு சொல்றது அப்படின்னு யாராவது
கேள்வி கேட்க நெனச்சிங்கன்னா அந்த கேள்விய அப்படியே
குமுதம் அரசு பதில்கள் பகுதிக்கு அனுபிச்சிடுங்க. நாம
மேட்டருக்கு வருவோம், நான் எதுக்கு அஞ்சு ரூபா
குடுக்கணும் அதான் சுத்தி பொட்டல் காடா இருக்கே
நான் அங்க போய்க்கறன்னு யாராவது அந்த பக்கம்
போலான்னு நினைச்சா அங்க நாலு குண்டர்கள்
கைல லத்தி மாதிரி ஒரு குச்சிய வெச்சுட்டு நிப்பாங்க.
நீங்க அந்த பக்கம் போனாலே அசிங்க அசிங்கமா
பேசுவானுங்க, அதையும் மீறி நான் இங்கதான் யூரின்
போவன்னு நீங்க குழந்தை மாதிரி அடம் புடிச்சா நீங்க
அடி வாங்கறதா எந்த ஹீரோவாலயும் தடுக்க
முடியாது. ஆம்பளைங்க நிலைமையே இப்படின்னா..
பஸ்ல ட்ராவல் பண்ற லேடீஸ் நிலம இன்னும் கொடுமை.
தவிர்க்கவே முடியாத இயற்கை உபாதைக்காக இவங்க
இந்த toilet யூஸ் பண்ணும் போது அங்க காசு வாங்க
உட்கார்ந்து இருப்பவனே பெண்களை அசிங்கமாய்
பேசுவதும், திட்டுவதும் என இவர்கள் பண்ணும்
அராஜகத்தையும் , மாமூல் வாங்கி கொண்டு இந்த
மாதிரி ஓட்டல்களை கண்டும் காணாமலும் இருக்கும்
அதிகாரிகளையும், இங்கு பஸ் நிறுத்துவது
தெரிந்தும், இங்கு நடக்கும் அநியாயங்கள் தெரிந்தும்
கண்டு கொள்ளாமல் இருக்கும் அரசு மற்றும் தனியார்
பஸ் நிறுவனதாறையும் கண்டித்து எல்லோரும் ஒரு
நிமிடம் அவர்களை நினைத்து கெட்ட வார்த்தைகளில்
அசிங்க அசிங்கமாய் திட்டுங்கள்.

திட்டி முடித்த பாதிக்கபட்ட அத்தனை பேரும் இந்த
பிரச்சனையை புகாராய் தனியார் மற்றும் அரசு பஸ்
நிறுவனங்களுக்கு போனில் சொல்லுங்கள். ஏதாவது
மாற்றம் நடக்கிறதா என்று பார்ப்போம்.

பின் குறிப்பு: இந்த ஓட்டல்களில் எனக்கு புரியாத ஒரு
விஷயம் எல்லா ஓட்டல்களிலும் ஒரு ஆடியோ கேசட்
கடை இருக்கும். அதில் எதாவது ஒரு இரட்டை அர்த்த
கானா பாடல் எப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கும்.
காலம் மாறிவிட்டது இப்போது கேசட்டுக்கு பதிலாய் சிடி
விக்கிறார்கள். மற்றபடி அந்த செட்அப் இன்னும்
அப்படியேதான் இருக்கிறது.முன்னாடியாவது பஸ்
டிரைவர்கள் அங்கு விக்கும் கேசட்டை வாங்குவதை
அவ்வப்போது பார்த்துருக்கிறேன்.இப்போது எல்லா
வண்டியும் video coach ஆன பிறகு அங்கு யார் கேசட்
வாங்குகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.


படித்து விட்டு பிடித்திருந்தால் உங்கள் கருத்தையும் ஓட்டையும் தவறாமல் பதிவு செய்யுங்கள்.