
எப்போதாவது பேருந்து வரும் உனது
ஊரின் நிழற்குடை இல்லாத பேருந்து
நிறுத்ததில்தான் நாம் முதலில் சந்தித்து
கொண்டோம்.
நாம் பேருந்துக்காக காத்திருந்தோம்
காதல் நமக்காக காத்திருந்தது அதன்
பின் நீ எனக்காகவும் நான் உனக்காகவும்
காத்திருக்க தொடங்கினோம்.
உன் கடைக்கண் பார்வையும் கடிதங்களும்
என் வீட்டு ரோஜாவுமாய் நம் காதல் பயணம்
நிரம்பி வழிந்தது.
இந்த எல்லையற்ற பயணத்தில் நாம்
திளைத்திருந்த ஒரு நாளில் நீ மட்டும்
பேருந்திலிருந்து பாதி வழியிலேயே
இறங்கி கொண்டாய்,யாருமற்ற அந்த
பேருந்து பயணத்தில் நான் இன்னும் பின்
இருக்கையிலேயே அமர்ந்து இருக்கிறேன்.