
உன்னை பாக்கும் போதெல்லாம்
மனசு மழை நீரில் குழந்தை விட்ட
கப்பலாய் மிதக்கிறது .
நீ நடக்கும் போது உன்னுடன்
வருவது உன் நிழலல்ல
என் இதயம்.
இரவெல்லாம் வருகின்றது
கனவுகள் கனவெல்லாம்
நீ விட்டு சென்ற சுவடுகள்.
வானவில்லை விட அழகு
வெட்கத்தில் சிவக்கும்
உன் கன்னங்கள் .
நூறு யுகங்கள் வேண்டுமானாலும்
காத்திருக்கிறேன் ஒரு நொடி திரும்பி
பார்த்துவிட்டு போ !
நான் உனக்கு குறுந்தகவல்
அனுப்பும் போதெல்லாம் காற்றில்
கடந்து வருகிறது காதல்.
2 comments on "சில கவிதைகள் ....பல நினைவுகள்"
yes very good
yes very good
Post a Comment